அசித்தரோத்து-கர்னயிம் (ASHTEROTH- KAR NAIM-அஸ்தாரோத்தின் இரு கொம்புகள்)
கிலயாதிலிருந்த மிக முக்கியமான கோட்டை நகரம். பிற்காலத்தில் கர்னா யிம் என்று சுருக்கி அழைக்கப்பட்டது ( 6:13). கலிலேயக் கடலுக்குக் கிழக்கே 32 கி.மீ. தொலைவிலும் தேல்- அஸ்தராவிற்கு வடக்கே 5 கி.மீ. தொலை விலும் உள்ள செயிக்காத் இருக்கும் இடத்தில் இவ்விடம் அடையாளம் காட்டப் படுகிறது. இந்த இரண்டு இடங்களும் ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியடைய வில்லை. மாறாக மாறி மாறி வளர்ந்ததாகப் புதைபொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த இரண்டு இடங்களும் இரண்டு கொம்புகளையுடைய அசித்தார்தியைப் பொதுவாக வழிபடவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் கர்னயிமின் பாதுகாவலான தேவதை அசித்தார்த்தி அல்ல, மாறாக அத்தர் காத்தி ஆகும் (2 மக் 12:26)
கெதர்லகோமேரும் அவருடைய கூட்டு அரசர்களும், யோர்தானுக்கு அப்பால் தெற்கு நோக்கிச் சென்ற பொழுது இந் நகரம் அவர்களுடைய தாக்குதலுக்கு இலக்கானது. முழுவதும் அழிக்கப் பட்டது. அப்போது இந்நகரில் இரப்பாயிமியர் வாழ்ந்து வந்தனர் (ஆதி 14:5). இது எவ்வளவு தூரம் அழிபட்டதென்றால். இது கி.மு.16 முதல்13-ஆம் நூற்றாண்டு வரையிலும் (வெண்கலக்காலம்) எந்த மக்களாலும் குடியேறப்படவில்லை. இஸ்ராயேல் வந்த பிறகுதான் இது மறுபடியும் கட்டப்பட்டது. இது சீரியா (ஆராம்) அல்லது இஸ்ராயேல் மக்களால் கட்டப்பட்டிருக்கலாம். இருவருக்கும் போராட்டம் எழுதற்கு ஒரு ஊராக இருந்தது. இஸ்ராயேலின் அரசன் இரண்டாம் எரொபெயாம் (கி.மு. 781-741) -லோ-தெபாரைக் கைப்பற்றிய பொழுது இதையும் சேர்த்துக் கைப்பற்றினார். அசீரிய நாட்டு அரசர் மூன்றாம் திகி லாத்து பிலேசர் இந்நகரை கார்னென் என்று குறிப்பிடுகின்றார். இவர் இந்தப் பகுதி முழுவதையும் கி.மு. 732-இல் கைப்பற்றி கார்னெனைத் தலை நகரமாக் கினார்.
அடிமைத்தனத்திலிருந்து திரும்பிய பிறகு கர்னயிம் அல்லது கர்னியோன் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் யூதர் களாலும், கிரேக்கர்களாலும் குடியேறப் பட்டது. அக்காலத்தில் இது மிகவும் வல்லமை வாய்ந்த ஒரு கோட்டையாகக் கருதப்பட்டது. ஆனால் யூதர்கள் தங்களைக் காப்பாற்றும்படி யூதா மக்க பேயுவிடம் முறையிட அவர் அதைக் கைப் பற்றி அழித்துவிட்டார் (1 மக் 5:26. 43-44: 2 0 12:21.26).
தொல்பொருள் அகழ்வு ஆய்வுகள் இது மூன்றடுக்குச் சுவர்களைக் கொண்ட பெரிய நகரமாயிருந்தது என்றும். முற்று கையிடக் கடினமானதாகவும் இருந்தது என்றும் காட்டுகின்றன (1 மக் 12:21). இதை இதற்குத் தெற்கில் 5 கி.மீ. தொலைவி லுள்ள அசித்தரோத்து நகரோடு குழப்பி விடக்கூடாது.