அசசியா (AZAZIAH – யாவே வலிமைமிக்க வர், யாவேயால் பலப்படுத்தப்பட்டவர். அல்லது யாவேயால் வலு அடைந்தவர்)
1. ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை எருசலேம் தேவாலயத்திற்கு எடுத்து வருவதற்காகத் தாவீது முன்னேற் பாடு செய்த பாடகர் குழுவில் ஒரு லேவியர் (1 நாள் 15:21)
2. தாவீதின் கீழ் எப்பிராயிம் குலத் தாருக்குப் படைத்தலைவராக இருந்த ஓசயாவின் தந்தை ஆவார் (1 நாள் 27:20)
3. எசக்கியா காலத்தில் ஆலயப் பொறுப்பினைக் கண்காணிக்க நியமிக்கப் பட்டவர்களில் மூன்றாம் தர அலுவலர் (2 531:13)