அசக்கா (AZEKAH கொத்தப்பட்ட நிலம்)
அய்யாலோன் பள்ளத்தாக்கிற்குத் தென்புறத்தில் உள்ள அரண்சூழ்ந்த நகர மாகும். பேயித்-கிப்ரின் என்ற இடத்திற்கு வடக்கே 6.5 கி.மீ. தொலைவிலும், கெபி ரோனுக்கு வடமேற்கே 24 கி.மீ. தொலை விலும் உள்ள தேல்-எஸ்-சக்கரியே என்ற இடத்தை அசக்காவிற்கு அடையாளம் காட்டுவர். தேல் மேலே உள்ள மேட்டு நிலத்தில் அழிந்துபோன சுவர்களும், கோபுரங்களும் காணப்படுகின்றன. பல நிலத்தடிப் பாதைகளும், அறைகளும் கண்டுபிடி க்கப்பட்டுள்ளன. இவை போர்க்காலத்தில் அடைக்கலமாகவும், உணவுப் பொருள்களைச் சேர்த்து வைப்ப தற்கும் பயன்பட்டிருக்க வேண்டும். இஸ் ராயேல் காலத்தைச் சேர்ந்த. அரச செய்திகளைக் கொண்ட பாண்டங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தேலுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள கிர் பெத்-ஏல்-அலாமி என்ற இடம்தான் அசக்கா இருந்த இடமாக பைசான்டைன் காலத்தில் கருதப்பட்டது.
எருசலேமின் அரசராகிய அதோனி- சதேக்கின் தலைமையில் வந்த கானானி யர்களின் படைகளை யோசுவாவின் படை கள் அசக்காவரை துரத்திச் சென்றனர் (யோசு 10:10-11). இது யூதா நாட்டின் செப் பேலா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும் (15:35), பெலிஸ்தியர்கள் போருக்குப் படையைத் திரட்டிக்கொண்டு வந்து அசக்கா என்ற இடத்தில் பாசறை அமைத்தனர். தாவீது பெலிஸ்தியர்களின் தலைவனாகிய கோலியாத்தைக் கொன்ற வுடன் ‘அசக்கா’ நகரானது இஸ்ராயேலர் களால் கைப்பற்றப்பட்டது (1 சாமு 17:1).
வடக்கு ஆட்சிப் பகுதி கிளர்ச்சி செய்து பிரிந்து போனபின் சாலொமோன் மகன் இரசுபெயாமினால் அரண்சூழக் கட்டப் பட்ட நகர்களில் அசக்காவும் ஒன்றாகும் (2 நாள் 11:10). உணவுப் பொருட்களைச் சேர்த்து வைப்பதற்கும் பயன்பட்டது (11:11). எருசலேமைத் தாக்குவதற்கு முன்னால் நெபுக்கதுனேசாரின் படைகளால் கடைசி யாகப் பிடிக்கப்பட்டது யூதாவின் அரண் சூழ்ந்த நகராகிய அசக்கா ஆகும் (எரே 34:7 கி.மு. 588). நாடு கடத்தப்பட்டதற்குப் பின் அடிமைத்தளையில் இருந்து திரும்பி வந்த யூதர்களால் அசக்கா நகரானது மறுபடியும் கைப்பற்றப்பட்டது. குடியேறப் பட்டது (நெக 11:30).