அசித்தோரேத்து (ASHTORETH – விண்மீன்)
இது அசித்தரோத்து என்ற கானானிய பாலினப் பெருக்கத் தேவதையின் பெய ரின் திரிபு. இத்தேவதை அசித்தரோத்து, அசித்தார்த்தி, இசிதார் என்று பலவாறு அழைக்கப்படும். 1 அர 11:5.33; 2 அர 23:13 ஆகிய இரண்டு இடங்களில்தான் பழைய ஏற்பாட்டில் இப்பெயர் ஒருமையில் பயன் படுத்தப்பட்டுள்ளது. கானானிய புற இன மதத்தைக் குறிப்படும்பொழுது எல்லாம் பொதுவாக இப்பெயரின் பன்மை வடிவ மான அசித்தரோத்து என்பது பயன்படுத் தப்பட்டுள்ளது. இக்கடவுளின் இடத்திற் குரிய வெளிப்பாடுகளைக்குறிக்கும் 1 சாமு 31:10-இல் ஒரு கோவில் குறிக்கப் பட்டுள்ளது. இது அநேகமாக பேத்து சானில் உள்ளதாக இருக்கலாம். இங்கு கில்போவாப் போருக்குப்பின் பெலிஸ் தியர் சவுலின் படைக்கலங்களை வைத்த னர். இத்தேவதையை அசேரா என்ற தேவ தையோடு குழப்பிவிடக்கூடாது.
பாபிலோனியக் கடவுள்கள் கூட்டத்தில் இத்தேவதை இசிதார் என்றழைக்கப்படு கிறது. இவள் சந்திரக்கடவுளான சின்னுக் கும் அவரது துணைவியும் விண்ணகத் தேவதையுமான அணுவுக்கம் பிறந்தவள். இவள் காதலுக்கும், சிற்றின்பத்திற்கும். பாலின விருத்திக்கும் உரிய கடவுளாக சாதாரணமாகக் கருதப்பட்டாள். ஆனால் அசீரியர்கள் இவளைப் போரின் கடவுளாகக் கருதினர். இந்த இரட்டை அலுவல்கள் அடையாளம் மாலைவெள்ளி, காலை வெள்ளியோடு தொடர்புடைய தாகச் சிலர் கருதுகின்றனர். மாலை வெள்ளி சிற்றின்பச் செயல்களோடும், காலைவெள்ளி போர்களோடும் தொடர்பு டையதாகக் கருதுகின்றனர்.
கிரேக்கர்காலத்தில் இசிதார் காதலின் தேவதையான வீனஸ் அல்லது அப்ரோ தைட் ஆனாள். இவளது சில உருவங்கள் தாடியுடன் காணப்படுகின் றன. இது இவள் ஒரு அர்த்த நாரீசுவரத் தன்மை யுடையவள் என்பதைச் சுட்டுகிறது.
பெனிசியர்களிடையே சீதோனியர் களின் மிக முக்கியத் தேவதையாவாள் (1 அரச 11:5.33). உகரிட்டிக்கு வாசகங் களில் இவள் பாகலின் கூட்டாளி ஆவாள். ஆனால் உயிரும் மரணமும் கொடுக்கும் இவளது அலுவல், பாகாலின் சகோதர துணைவியான அனாத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெலிஸ்தியர் இவளைப்போரின் கடவுளாக வழிபட்டனர் (1 சாமு 31:10; காண்க 1 நாள் 10:10). சீரிய பாலஸ்தீனம் முழுவதும் கண்டெடுக்கப் பட்டுள்ள பல அம்மணமான பெண் உரு வங்களில் இவளது உருவங்களும் காணப் படுகின்றன.
இஸ்ராயேலர் பாலஸ்தீனத்தில் குடி யேறிவிட்டபின் அவ்வப்பொழுது இந்தத் தேவதையின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த னர் (காண்க: நீதி 2:13). சாலமோன் பிற மதப் பெண்களை மணந்தபின் இவ்வழி பாட்டுக்கு ஊக்கம் அளித்ததாகத் தெரி கிறது. 1 அர 11:5-இன்படி சாலமோன் சீதோனிய அசித்தோரேத்து, அம்மோ னிய மில்க்கோம் ஆகியோரின் வழி பாட்டை நாட்டில் புகுத்தினார். அதற்குத் தண்டனையாக இறைவன் அவரது மகன் இரகபெயாமிடம் இருந்த அரசை எடுத்து அதன் பெரும்பகுதியை எரொபயா முக்குக்கொடுத்தார் (11:33). 2 அர 23:13- இல் யோசியா சீர்திருத்தக் காலத்தில் இந்த வழிபாட்டை அழிப்பது குறிக்கப்படு கிறது. இதுவரை இந்த வழிபாடு இஸ்ரா யேலரிடையே நிலைபெற்று இருந்தது.
பாலஸ்தீனத்திலும், தென்சீரியா நாட் டிலும் அசித்தோரேத்தின் வழிபாடு மிகவும் சிறப்பாக இருந்தது என்று பழைய ஏற்பாடும். 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெனிசிய குறிப்புகளும் காட்டு கின்றன. எப்பூ என்ற இடத்தில் தோலமி காலத்தில் இவள் சிங்கத் தலையுடன் காட் டப்பட்டுள்ளாள். சிங்கத்தின் தலையுடன் இத்தேவதை சேர்க்கப்பட்டுள்ளது. இது 19-ஆவது அரச மரபுச் சிற்பக் கலைகளு டையதென்பதைக் காட்டுகின்றது. இத் தேவதையினுடைய வழிபாடு பேத்து- சானில் கி.மு. 15 முதல் 13-ஆம் நூற் றாண்டு வரை சிறப்பாக இருந்தது.
பெனிசியா நாட்டு எஸ்மூன் என்ற குணமாக்கும் கடவுளுடன் இது தொடர்பு படுத்தப்பட்டிருப்பதால், இது வாழ்வு கொடுக்கும் தேவதையும்கூட எனத் தோன்றுகிறது.