அசிமவேத்து (AZMAVETH – சாவு வலிமை வாய்ந்தது) -ஆள்
1. இருகையாலும் சுவணையும், அம்பையும் கையாள்வதில் திறமை படைத்த எசியேல். பெலத்து ஆகிய இருவரும் அசிமவேத்தின் புதல்வராவர். இவர்கள் பென்யாமின் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சிக்கிலாகு என்னு மிடத்தில் தலைமறைவாயிருந்த தாவீ துடன் சேர்ந்து கொண்டார்கள் (1 நாள் 12:3). இவரும் அடுத்து குறிக்கப்படுபவரும் ஒருவராக இருக்கலாம்.
2. தாவீதின் திறமையும், ஆற்றலுமிக்க முப்பது படை வீரர்கள் அடங்கிய குழுவில் அசிமவேத்து ஒருவராவார். இவர் பகுரிம் என்ற இடத்திலிருந்து வந்தவர் (2 சாமு 23:31: 1 6 11:33).
3. இவர் அதியேலின் மகனாவார். இவர் எருசலேமில் தாவீது மன்னனின் கீழிருந்து அரண்மனைக் கருவூலங்களைக் கண்காணித்து வந்தார் (1 நாள் 27:25).
4. இவர் யோயதாவின் புதல்வராவார். சவுல் குடும்பத்தின் வழித்தோன்றல்களில் ஒருவர் (1 நாள் 8:36). 1 நாள் 9:42-இல் இவரது தந்தை யாரா என்றழைக் கப்படுகிறார்.