அசிமவேத்து, அசிமா, அசிமோன், அசியேல்

அசிமவேத்து (AZMAVETH) -இடம்

எருசலேமிற்கு வடக்கிலும், வடமேற்கிலு மிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அனாத்து (அனாதோத்து)க்கு 3 கி.மீ. தொலைவிலும் உள்ள அண்மைக் காலத்திய கிஸ்மே நகரோடு இந்நகர் அடையாளம் காட்டப் படுகிறது. இதன் சிதைவுகள் இது பாறை யின் மேல் கட்டப்பட்டிருந்தது என்றும், அதிலே களஞ்சியங்களும் நீர்த்தொட்டி களும் வெட்டப்பட்டிருந்தனவென்றும் காட்டுகின்றன. அசிமவேத்து நகரைச் சேர்ந்த 42 ஆட்கள் பாபிலோனியாவி லிருந்து செருபாபேலோடு திரும்பி வந் தார்கள் (எஸ் 2:24). எருசலேம் மதிலின் அர்ப்பணிப்பு விழாவில் அசிமவேத்தி லிருந்து வந்த பாடகர்களும் பங்கு கொண் டார்கள் (நெக 12:29), நெக 7:28-இல் இது பேத்து-அசிமவேத்து என்றழைக்கப்படுகிறது.

அசிமா (ASHIMA – குற்றம்)

கி.மு. 722-இல் வட அரசின் வீழ்ச்சிக்குப்பின் கம்மாத்து நகரிலிருந்த சமாரியா வில் அசீரியர்களால் குடியேற்றப்பட்ட மக்களின் கடவுள் (2 அர 17:30), இது கானானிய தாய்த் தேவதையான அசேராவின் திரிபுப் பெயராகும். ஆமோஸ் இறை வாக்கினர் காலத்தில் வாழ்ந்த மக்கள் சத்தியம் செய்த கடவுளின் பெயராக இருக்கலாம் (ஆமோ 8:14). எகிப்தைச் சேர்ந்த எலிபைன்டைன் ஏடுகளில் காணப்படும் அசேம்-பேத்தேலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

அசிமோன் (AZMON வலிமை)

யூதாவின் தென் எல்லையோரப் பகுதி யில் இந்த இடம் உள்ளது. எகிப்து நாட் டின் நதிக்கு முன்னால் மேற்குப் புறத்தில் உள்ள கடைசி ஊராகும் (எண் 34:4-5; யோசு 15:4). ஒருவேளை அசிமோன் என்ற ஊரானது “ஏசேம்” என்ற நகராக இருக்க லாம். வரலாற்றிற்கு முன்னால் புனிதப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடமா கிய பழம்பெரும் காதேசு-பார்னேயாவுக்கு வடமேற்கில் 16 கி.மீ தொலைவிலுள்ள அயீன்-ஏல்-கோசேமே என்ற இடத்தில் அஸ்மோன் என்ற ஊர் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த இடத்தில் எகிப்தியப் புறக்காவல் நிலையச் சிதைவு கள் இன்னும் காணப்படுகின்றன.

அசியேல் (ASIEL – இறைவன் படைத்தது)

1. சிமியோன் குலத் தலைவர்களுடைய பட்டியலில் உள்ள ஏகூ என்பவருடைய கொள்ளுப்பாட்டனும் செராயாவின் தந்தையுமாவார் (1 நாள் 4:35). கெதேரில் மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற தலை வர்களில் ஒருவர் (4:39).

2. தோபித்தின் மூதாதையர் (தோபி 1:1). இவர் நப்தலீ குலத்தைச் சேர்ந்தவர்.

அசியேல் (AZIEL – இறைவன் என்பலம் ஆவார்)

அசியேல் என்பவர். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை எருசலே மிற்கு எடுத்துக்கொண்டு வரும்பொழுது யாழ்களை மீட்டுக்கொண்டு வந்தவர் களில் ஒருவராவார். இவர் ஒரு லேவியர். இவருடைய முழுப் பெயர் ‘யாகசியேல்’ எனப்படும் (1 நாள் 15:20)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page