அசீரியா (ASSYRIA)
மெசபொத்தாமியாவில் की कीती क நதியின் மேற்குப் பகுதியில் நிலவியிருந்த ஒரு பேரரசும் நாகரிகமும் ஆகும். கி.மு. முத லாம் ஆயிரம் ஆண்டுகளில் யூதாவும் இஸ்ராயேலும் எதிர்கொண்ட முக்கிய எதிரியுமாகும். இது அக்காதிய ஏடுகளி லும் பழைய ஏற்பாட்டிலும் அசூர் என்ற ழைக்கப்பட்டது (எண் 24:22.24). இது பாபி லோனுக்கு வடக்கிலும் சீரிய பாலைவனத் திற்குக் கிழக்கிலும் அந்தோலியாவுக்குத் தெற்கிலும் குர்தீஸ் மலைகளுக்கு மேற்கி லும் அடங்கிய பகுதியைக் கொண்டது.
1. வரலாறு:-
நமக்குக் கிடைத்திருக்கும் சான்றுகளிலிருந்து வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். உணவுப் பொருட் கள் உண்டாக்கும் வாழ்க்கை முறையோடு கிராம வாழ்க்கை இங்குத் தொடங்கியது. இதற்கு இக்கால கிர்குக்குக் கிழக்கிலுள்ள காரீம் சாகீர்க்கு (கி.மு. 7000). யார்மோ (கி.மு. 6000) ஆகிய ஊர்கள் இருந்த இடங் கள் சான்றுகளாக உள்ளன. கி.மு. 5500 3000-க்கு இடைப்பட்ட காலத்தில், தொழில்கள் முன்னேறியதாகத் தெரி கின்றது. இதற்குக் கசூனா, சமர்ரா, தேல் கலாப். உபய்த். ஊருக் போன்ற இடங் களில் காணப்படும் கலாச்சாரத் தடையங் கள் சான்றுகளாக அமைகின்றன. கி.மு. 2900-ஐ ஒட்டி அரசாட்சி தொடங்குகிறது. அதோடு எழுத்துக் கலாச்சாரமும் தொடங்குகிறது.
அசீரிய அரசர்களின் பட்டியல்படி, தொடக்ககால அரசர்கள் பெரும்பாலும் கூடாரங்களில் வாழும் நாடோடித் தலை வர்களாவர். கி.மு. மூன்றாம் ஆயிர மாண்டு காலத்தின் முடிவில் சுமேரியன் செல்வாக்கு இங்கு காணப்படுகிறது. அக்காதிய சார்கோனின் (2300-2230) செமித்திய அரச மரபினர் நினிவே. அரூர், காலாக் ஆகிய நகர்களை மீண்டும் கட்டினர். ஏலாமியர் 2000-ஐ ஒட்டி அமர் சுயென்னையும் ஊரின் மூன்றாம் அரச மரபையும் தோற்கடிக்கும் வரை இந்நிலை நீடித்தது. விவிலியம் நாடுகளின் பட்டியலில் தொடக்க நிலை அசீரியாவில் பாபி லோனியர் கொண்டிருந்த பாகத்தைக் குறைத்துக் கூறுவதாகத் தெரிகிறது (ஆதி 10:11-12.22).
சுதந்திர நகர-நாடான அசூர் வணிக மையமாகத் திகழ்ந்தது. சிறிய ஆசியா வின் குடியிருப்புகளுடன் வணிக உறவு கொண்டிருந்தது. கப்பதோக்கியாவில் கனேசில் (இக்கால குல்தெபே) கண்டெ டுக்கப்பட்ட ஏறக்குறைய 3000 ஆப்பு எழுத்து ஏடுகள் இந்த வணிகச் செயல் களுக்குச் சான்று பகர்கின்றன. அக்கா திய அரசர்கள் இலுசுமா, முதலாம் சார் கோன் ஆகியோரின் கீழ் அசீரியா பாபி லோனின் மேல் படைஎடுத்துச் சென்றது. 19-ஆம் நூற்றாண்டு மத்தியில் அந்தோலி யாமவைச் சேர்ந்த இத்தியர்களின் படை யெடுப்பு அசீரிய வணிகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. சிறிது காலத்திற்கு தியாலா ஆற்றுப் பகுதியிலுள்ள எஸ் நுன்னானைச் சேர்ந்த நராம்-சின் என்ப வர் ஆசூரில் ஆதிக்கம் செலுத்தினார். சிறிது காலத்திற்குப் பிறகு எமோரியத் தலைவர் முதலாம் சம்சீ-அதாத் அசூரில் அரியணை ஏறினார். அவரது மகன் யஸ்மா-அதாத் என்பவர் மாரியைக் கைப் பற்றினார். சம்சீ-அதாதின் இறப்புக்குப் பின் பதவி நீக்கப்பட்ட சிம்ரி-லிம், மாரி யில் அதிகாரம் செலுத்தினார். இவரைப் பாபிலோனைச் சேர்ந்த கமுராபி தோற் கடித்தார். ஒரு குறுகிய போராட்டத் திற்குப்பின் அசூர் மித்தன்னீ பேரரசின் சிற்றரசாகியது. இதோடு பழைய அசீரிய காலம் முடிவுக்கு வந்தது (1650). இதற்குப் பின் வந்த இருண்ட காலத்தில் அரசியல் செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும், இப்பகுதி விவசாயத்தில் ஓரளவு செழிப் புற்றிருந்தது என்பது நூசி ஏடுகளிலி ருந்து தெரிகிறது.
14-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மித் தன்னீ அரசின் வீழ்ச்சியோடு, அசீரியா மீளவும் அகில உலக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அசீரியப் பகுதியில் அரசவைக்குத் தூது அரசப்பட்ட உரிமை கோரியவரான முதலாம் அருபல்லி (1365-1330) எகிப்திய அனுப்பினார்.
இரண்டாம் கராயின் தாசுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து பாபிலோனோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அவனது வழித் தோன்ற லான இரண்டாம் குரிகல்சூ பாபிலோன் அரியனை ஏறக் கருவியாக அமைந்தார். அசூருபல்லியின் மரணத்துக்குப் பின் குரிகல்சூ அசீரிய அரியணையையும் சேர்த்துக் கொள்ள முயற்சித்தார். இதன் விளைவாக ஏற்பட்ட போராட்டங்கள் பாபி லோனியாவை மிகவும் பலவீனப்படுத் தியது. அரசுக்கு வரும் மரபுமுறை செய் யப்பட்டது. மத்திய அசீரியர் காலத்தில் அரசர்கள் வடக்கிலும் மேற்கிலும் வியா பாரப் போக்குவரத்தைத் திறந்துவிட்டனர்.
முதலாம் சால்மனேசர் (1274-1245)
மேற்கு மாநிலமான கனிகல்காத்தில் நடந்த கிளர்ச்சியை அடக்கி அப்பகுதி யைத் தன் அரசுக்குள் சேர்த்துக் கொண் டார். பிற்காலத்தில் அசீரியர்கள் வழக்க மாக இருந்த முறைப்படி தோற்கடிக்கப் பட்ட மக்களை நாடு கடத்திச்சென்று தன் அரசின் பலபகுதிகளில் குடியேற்றினர். வடக்கு எல்லையை உரத்துக்கு எதிராகப் பாதுகாத்தார். காலாக்கில் (நிம்ரூத் புதிய தலைநகரை அமைத்தார். அவர் மகன் முதலாம் துகுல்தி-நிதூர்தா (1244-1208) பாபிலோனின் மேல் குறி வைத்து, அதை வென்று அசீரிய ஆட்சிக்குள் முதல் முறை யாகக் கொண்டு வந்தார். ஏழு ஆண்டு களுக்குபின் அரசன் அவன் மகனால் கொல்லப்பட்டார். அசீரியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது. இது பாபிலோனின் மேலாண்மையைக் கொண்டு வந்தது. அசூர்-ரெஸ்-இஸ்ஸி மீளவும் அசீரியா வைச் சுதந்திர நாடாக்கினார் (1125). அவரது மகன் முதலாம் திகிலாத்து பிலெசேர் (1115-1077) சுபாரிய, அக்லாமு ஆகிய இனத்தவர்மேல் ஆதிக்கம் செலுத் தினார். இவர் மத்தியதரைக்கடல்வரை அரசை விரிவாக்கினார். பிப்லோஸ், சீதோன், ஆர்வாது போன்ற நகரங்களைக் கப்பம் கட்டச்செய்தார். ஆனால் அரமேய ரின் தாக்குதல் நீடித்திருந்தது. அசீரிய பலம் நாட்டின் நிலைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆகையால் அசீரியா தளர்ச்சியுறத் தொடங்கியது. 1100-900 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்நிலை தான் அசீரியாவிலும் பாபிலோனிலும் எலாமிலும் நீடித்தது. இந்நிலை தாவீது. சாலமோன் ஆகியோரின்கீழ் இஸ்ராயே லின் முடியாட்சி எழுச்சிக்குச் சாதகமாக இருந்தது.
10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அசீரியா படைப்பலத்திலும், பொருளாதா ரத்திலும் மீண்டும் வளர்ச்சியுறத் தொடங் கியது. புதிய அசீரிய அரசர்களான இரண்டாம் அசூர்தான் (934-912) 2-ஆம் அதாத்னிராரி (911–891) ஆண்டுதோறும் படையெடுக்கும் முறையைத் தொடங்கி வைத்தனர். இது இக்காலத்தின் பண்பா கியது (காண்க: 2 சாமு 11:1). புதிய அசீரி யப் பேரரசு பழைய மேற்காசியாவில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறினா லும் இது உறுதியான நிலையை ஒரு போதும் அடையவில்லை. அரண்மனைச் சதிகளும் வாரிசு உரிமைப் போராட்டங் களும் சர்ச்சைகளும் சாதாரண நிகழ்ச்சி களாயின. ஒவ்வொரு அரசரும் மாநிலங் களில் கிளர்ச்சிகளை அடக்கவும், அண்டை நாட்டாரின் படையெடுப்பை எதிர்க்கவும் வேண்டியிருந்தது. ஒவ் வொரு அரசரும் மிகுந்த படைப்பலத் தைப் பெருக்குவார். பெரும்பகுதிகளை வென்று அரசை விரிவாக்குவார். ஆனால் அவர் இறப்போடு பேரரசு நசித்துப் போய்விடும்.
இரண்டாம் அசூர்ன சிர்ப்பால் (883-859) யூப்பிரத்தீசு பள்ளத்தாக்கில் அரமேயப் படையெடுப்பை நிறுத்தினார். மத்திய தரைக்கடலுக்கு வழி தொடங்கி வைத் தார். கொடுங்கோலன் என்ற படத்தில் பெருமை பாராட்டிக்கொண்டார். வென்ற பகுதிகளிலிருந்து பெரும் கப்பம் கட்டச் செய்து தலைநகர் காலாக்கை மீண்டும் கட்டினார். அவர் மகன் 3-ஆம் சால் மனேசார் (858-824) கர்கேமிசைக் கைப் பற்றினர். பித்-அதினி என்ற அரமேயப் பகுதியைப் பேரரசுக்குள் சேர்த்துக்கொண் டார். ஆனால் அவர் முன்னேற்றத்தைத் தமஸ்குவின் 2-ஆம் பென்-அதாத்தின்கீழ் செயல்பட்ட இஸ்ராயேலின் ஆகாபு அடங் கிய கூட்டணி தடுத்து நிறுத்தியது (காண்க 1 அர 20). 841-இல் இப்போது அரசுரி மையை அபகரித்துக்கொண்ட கெசாயே லின்கீழ் செயல்பட்ட சீரியக் கூட்டணியைப் பழிக்குப்பழி தீர்த்தார். நாட்டுப் புறங் களைக் கொள்ளையடித்தார். இஸ்ராயே லின் ஏகூ உள்ளடங்கிய சீரிய-பாலஸ்தீன கூட்டணியை அடிபணியச்செய்தார். அரசி சம்மூர்மாத்தின் (செமிராமிஸ்) பகர ஆட்சிக்குப்பின் 3-ஆம் அதாத்நிராரி (810-783) தமஸ்குவின் பென்-அதாத்தின் கூட்டணியைக் கலைத்தார். இது யோவா சின்கீழ் இஸ்ராயேலுக்குச் சிறிது ஓய்வளித் தது (2 அர 13:25; காண்க 2 நாள் 24:23-24). 2- ஆம் சால்மனேசர் (782-772) உரத்தியர் களிடமிருந்து நெருக்கடி நிலையிருந்தா லும் தமஸ்குவைக் கட்டுப்பாட்டுள் வைத் திருந்தார். இது 2-ஆம் எரொபயாம் இஸ் ராயேலின் எல்லையை கம்மாத்து வரை நீடிக்க உதவியது (2 அர 14:25-28). 3-ஆம் திகிலாத்து பிலெசேர் (745-727)
அரியணையை அபகரித்துக் கொண்டார். அவருக்குப் பின் வந்தவர் அசீரியப்படைப் பலத்தையும், பொருளாதார ஆதிக்கத்தை யும் மீண்டும் நிறுவினார். இஸ்ராயேலின் அரசன் மெனகேம் இவருக்குக் கப்பம் கட்டி இவரது ஆதரவைக் கோரினார் (காண்க 2 அர 15:19). தமஸ்குவின் இரசீன், பெக்கா ஆகியோரின் தாக்குதலுக்கு எதி ராக ஆகாசின் ஆதரவு கோரும் வேண்டு தலுக்கு இணங்கி (கி.மு. 734: 16:5-9). திலாத்து பிலெசோர் சீரிய பாலஸ்தினத் தின்மேல் படையெடுத்து பரவலாக அழிவை ஏற்படுத்தினார் (15:29). இரு ஆண்டுகளுக்குப் பின் ஓசியாவை இஸ்ரா யேலின் அரியணையில் ஏற்றினார் (காண்க: 15:30). பின் எருசலேமின்மேல் படையெடுத்தார் (16:5-6:2 நாள் 28:17.19-21). சிறிது காலத்திற்குப் பின் கல்தேயாவைக் கைப்பற்றி பூலூ என்ற பட்டத்துடன். தன்னையே பாபிலோனின் அரசனாக்கிக் கொண்டார் (2 அர 15:19; 1 நாள் 5:26). ஓசியா கப்பம் கட்டாததால் சினமுற்று 5-ஆம் சால்மனேசர் (727-722) சமாரி யாவை முற்றுகையிட்டு. நகரைக் கைப் பற்றி அதன் மக்களை நாடு கடத்தினார் (கி.மு.722: 2 அர 17:3-6; 18:9-10). அசீரியா வின் கடைசி அரச மரபைத் தொடங்கி வைத்த 2-ஆம் சார்கோனின் (721-705) ஆட்சிக்காலம் முழுவதும் 3-ஆம் திகலாத்து- பிலெசேரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதில் செலவிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப்பின் கல்தேய மாதுக்-அப்லா-இத்தினா (மெரோதாக்-பலதான்)விடம் பாபி லோனை இழந்தார். ஆனால் எகிப்திய ஆதரவு பெற்ற கூட்டணியை கர்காரிலும். அசுதோத்திலும் முறியடித்தார் (காண்க. ஏச 10:5-6.9; 20: 1-6). சனகெரிபுவின் (705-681) காலத்தில் ஓரளவு அமைதியும் நிலையான அமைப்பும் நிலவியது. ஆண்டுதோறும் நடக்கும் போர்கள் நிகழ வில்லை. ஆனால் 701-இல் பாபிலோனில் மாதுக்-அப்லா-இத்தினாவும் எருசலே மில் எசக்கியாவும் கிளர்ச்சி செய்தபோது இந்த அமைதி குலைந்தது. இது அசீரியர் கள் எருசலேமை நீண்டகாலத்திற்கு முற்று கையிடுவதற்கு இட்டுச்சென்றது (கி.மு. 701:20 18:13-19:37: 2 5 31:1-22; 36-37). பாபிலோனும் அழிக்கப்பட்டது (689). சனகெரிபுவின் மனைவியருள் ஒருத்தி நக்கியா அல்லது சக்கூத் ஆவாள். இவள் இஸ்ராயேலின் அரசன் ஓசியா வின் மகளாக இருக்கலாம். இவள் வழி யாகப்பிறந்த மகன் ஏசர்கத்தோனை சன கெரிபு தன் வாரிசாக நியமித்தார். இது அவரது புதல்வர் களே அவரைக் கொலை செய்வதற்கு இட்டுச் சென்றது (காண்க: 2 அர 19:37; ஏச 37:38) ஏசர்கத்தோன் (681- 669) பாபிலோனின் வாரிசு இளவரசனாக இருந்தார். அப்போது அந்நகரை மீளவும் கட்டி எழுப்பினார். வடக்கிலிருந்து சித்தி யர் சிம்மேரியர் ஆகியவர்கள் வழியாக வந்த இடுக்கண் நிலையைச் சமாளித்து இவர் வெற்றிகரமாக எகிப்தின் மேல் படையெடுத்து. பாரவோன் தகார்காவை மெம்பிசில் 671-இல் தோற்கடித்தார் (2 அர 19:9: ஏச 37:9). இவருக்குப்பின் வந்த அசூர்பானிப்பால் (668-626) எகிப்தைத் தொடர்ந்து வெற்றி கண்டு திபிசை அழித் தார். 663-இல் பாரவோன் நெக்கோவைக் கொன்றார் (காண்க: நெக 3:8) அசூர் பானிப்பால் வடக்கிலிருந்தும், மேற்கி லிருந்தும் வந்த தாக்குதல்களில் கவனம் செலுத்தியபோது, இவரால் பாபிலோ னின் பொறுப்பு அளிக்கப்பட்ட இவர் சகோதரன் சமாஸ்-சும்-உகின் கிளர்ச்சி
செய்தார் (652). இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் கிளர்ச்சி செய்தவ னின் தற்கொலையில் முடிந்தது. இவை அசீரியப் பேரரசை பெரிதும் பலவீனப் படுத்தியது. 612-ல் கல்தேய நபு-அப்லா- உசூருக்கு (நபோபோலாசார்) நினிவே சரண் அடைந்தது. 609-ல் மெகித்தோவில் யோசியாவின் தலையீடும் (2 அர 23:24-30). 605-இல் கர்கேமிசில் பாபிலோனியர் களோடு நடந்த போர்களும். 2-ஆம் நெக் கோவின் தலைமையில் எகிப்திய உதவி 2-ஆம் அசூர்பல்லித்துக்கு காரானில் வந்தடைவதைத் தடுத்தது. இதோடு அசீரி யப்பேரரசு முடிவுக்கு வந்தது. அசீரியா பாபிலோனின் ஒரு மாநிலமாயிற்று.
2. சமயம்:-
அசீரிய வரலாற்றின் மாறு பட்டுக்கொண்டிருந்த அரசியல் அமைப் பின் விளைவாக, இப்பகுதியின் சமயமும். கலாச்சாரமும் பாபிலோனிய சமயத் தோடு நெருங்கிய விதத்தில் ஒத்திருக் கிறது. இரண்டும் சுமேரியர்களிடமிருந்து தோன்றியதாகத் தெரிகிறது. அசூர் நாட்டு கடவுளாவார். இவர் பாபிலோனிய மாதுக்குக்கு இணையாவார். இருவரும் சுமேரிய ஏன்லில்லின் வாரிசுகளாகும். அசூர்தான் அரசர்களுக்கு ஆற்றல் அளிப் பவர். அவருக்கே தங்கள் போர்ச் செயல் களை அர்ப்பணித்தனர். மிகப்பெரிய கடவுள்கள் குழுவில், மற்ற முக்கிய கடவுள் கள் சந்திரக் கடவுள் ஆன சின், போருக் கும் காதலுக்கும் கடவுளான இசிதார். போருக்கும் வேட்டையாடுதலுக்கும் காவ லான நினுர்தூ. ஞானத்திற்கும் இலக்கி யத்திற்கும் கடவுளான நபு ஆகியவர்களும் உள்ளடங்குவர். மழை நீரையே நம்பியிருந் ததால் நீருக்கும் வாழ்வுக்கும் அசீரிய சமயம் வானிலை காட்சிகளில் அக்கரை காட்டியது. ஆகவே புயல் கடவுளான அதாத் போன்ற தேவர்கள் முதன்மை பெற்றனர்.
இப்பகுதியில் ஏராளமான கடவுள் களின் சிலைகளும் உருவங்களும் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அக்கடவுள் கள் வாழ்வதாகக் கருதப்பட்டது. ஆகவே அவர்களைக் கவனிப்பது, சேவை செய் வது பற்றி விரிவான நடைமுறைகள் கொடுக்கப்படுகின்றன. அரசனை சுத்தி செய்யவும் அவனுக்கு வழிகாட்டவும். பல கடவுள்களின் பெயரால், விரிவான சடங்குகள் அனுசரிக்கப்பட்டன. பாது காக்கிற ஆவிகள், பேய்கள் ஆகியவற்றின் மேல் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. சோதிடத்தையும், விலங்குகளின் ஈரலின் வடிவம், வண்ணம் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளைக் கவனித்து, விலங்குகளின் நடத்தை, இயற்கைக்கு மாறான பிறப்பு கனவுகள் போன்ற குறிகளையும் பயன் படுத்தி வருவது உணர்ந்து கூறுவதற்குத் தங்களையே அர்ப்பணித்த சிறப்புக் குழுக் கள் இருந்தன.
3. இலக்கியம்:-
இப்பகுதிபற்றி கி.பி. 1842-இல் இருந்து அகழ்வாய்வுகள் செய் யப்பட்டுள்ளன. நினிவே (கியுன்யிக்) தூர்- சரூக்கின் (25 கி.மீ. தொலைவில் வட கிழக்கிலுள்ள கொர்சாபாத்) ஆகிய இடங் களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அசீரிய இலக்கிய கலாச்சாரம் பற்றிய செய்திகள் அதிகம் கிடைத்துள்ளன. குறிப்பாக, நினி வேயில் கண்டெடுக்கப்பட்டுள்ளன (1345- 851). இவர்கள் கி.மு. 3000-க்கு முன்னரே எழுதக் கற்றுக்கொண்டிருந்தனர். இம் முறையை பாபி லோனியர்களிட மிருந்து பெற்றதாகத்தெரிகிறது. இவர்கள் சிறப் பான இலக்கியத்தைத் தோற்றுவித்தனர். இவர்கள் களிமண் பலகை செய்து அதில் நூல்களை எழுதினர். பழங்காலத்தில் ஆப்பு வடி எழுத்தில் எழுதினர். இதோடு சேர்த்து கி.மு. 700-இல் இவர்கள் அரிசுச் சுவடி முறையில் அராபிக் மொழி யில் எழுதலாயினர். அசூர்பானிப்பாலின் நூல் நிலையம் பற்றிய ஆய்வுகள் 26,000 ஆப்பு எழுத்து ஏடுகளையும் கொண் டுள்ளன. இவற்றில் பல்வேறு இலக்கியங் கள் காணப்படுகின்றன. அசீரிய அரசர் கள் எழுத்தர்கள் குழுவைக் கொண்டிருந் தனர். இவர்கள் வியாபார, ஆட்சிப் பதி வேடுகளைக் கவனித்துக் கொண்டதோடு, சுமேரிய, பாபிலோனிய அசீரிய வாசகங் களைப் பாதுகாத்தனர். இவற்றில் மதம். கதைகள், இதிகாசங்கள், அரச நாட் குறிப்புகள், மரபு முறைப்பட்டியல்கள், சடங்குகள், அடையாளங்கள். அவற்றின் பொருள். ஞான இலக்கியங்கள், சட்டத் தொகுப்புகள் சுமேரிய பலவகைப்பட்ட அக்காதிய பிரிவுமொழிகளின் மொழிபெயர்ப்புக்காக அகராதிகள்.
சொல் தொகுதி, நிகண்டு. பாடத்திட்ட முறைகள் ஆகியவை காணப்படுகின்றன. கணிதம், வானஇயல், மருத்துவம், சுண்ணாடி செய்தல் போன்றவற்றில் அசீரிய விஞ் ஞான. தொழில்கள் பற்றிய நூல்களும் காணப்படுகின்றன. இவர்களது சட்டத் தொகுப்பு நூல் கி.மு. 1400-இல் எழுதப் பெற்றதாகும். இவற்றை அகர வரிசைப் படுத்தி அலமாரிகளில் அடுக்கி வைத்த னர். இப்போது ஆங்கில நாட்டுப் பொருட் காட்சி நிலையத்தில் உள்ளன. கலைத் துறையில் இவர்கள் பாபிலோனிய, மேற்கு மெசபொத்தாமியா, சீரிய கலைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களையும் மிஞ்சினர். கி.மு. 2000-1000-ல் தனி அசீரிய கலை ஒன்று எழுந்தது. இவர்கள் வெண்கல்லிலும், சுண்ணாம்புக் கல்லிலும் புடைப்புச் சித்திரம் செதுக்கினர். ஆனால் இவர்களுக்கு இயலுறுத்தோற்றம் தெரி யாது. அசீரியர்கள் கட்டடக் கலையிலும் மற்ற கலைகளிலும், சிறந்து விளங்கினர். பல அரசர்கள் அரண்மனைகள், ஆலயங் கள் கட்டுவதிலும் அவற்றை அழகுபடுத்து வதிலும், குறிப்பாகத் தலைநகர்களான அசூர். காலாக், நினிவே ஆகிய நகர் களில் தங்களது ஆற்றலைப் பெரிதும் செலவிட்டுள்ளனர். அரச, பொதுக் கட்ட டங்களில் பெரும் சிலைகளும், அழகு செய்யப்பட்ட சித்திரங்களும் அழகு செய் தன. தலைநகர்களில் பரந்த தாவர, விலங்குப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. நிமிரு, சமாரியா, ஆகிய இடங்களில் காணப்படும் தந்தத்தில் செதுக்கப்பட்ட உருவங்களும், கல்உருளை முத்திரை களும், அசீரியாவின் கலைஞர்களின் ஆற்றலைச் சுட்டுகின்றன. இவர்களுடைய கலைப் பொருள்களில் சிறந்தவை அசூர் பானிப்பாலின் காலத்தைச் சேர்ந்தவை யாகும். இவர்கள் பெரிய நகரங்களை அமைத்தனர். அவற்றில் மாடியுடைய கட்டடங்கள் இல்லை. சில அரண்மனை கள் முற்றங்கள் முதலியவற்றுடன் மிகுந்த பரப்பளவு உடையன. அரண்மனையைச் சுற்றி அகழிகள் வெட்டப்பட்டன.
4. கொடியவர்கள்:-
இவ்வளவு அறிவி யல், சுலாச்சார முன்னேற்றம் அடைந்தி ருந்தாலும், அசீரியர்கள் கொடியக் காட்டு மிராண்டிகளாகக் கருதப்பட்டனர். அதற்கேற்றவாறு நடந்துகொண்டனர் (காண்க: ஏச 10:12-15). அசீரிய அரசர்கள் தங்களது படைப்பலத்தையும் தோற்கடிக்கப்பட்டவர் களைக்கொடுமையாக நடத்தியது பற்றியும் பெருமை பாராட்டிக்கொண்டனர். கூரிய கம்பங்களில் எதிரிகளைக் கழுவேற்றினர். நகரங்களை எரித்தனர். கொள்ளையிட்டு பெரும் கொள்ளைப் பொருட்களைக் கவர்ந்துசென்றனர். மத்திய, புதிய அசீரிய காலங்கள், தோற்கடிக்கப்பட்ட மக்களை பேரரசின் மற்றொரு பகுதிக்கும், அங் குள்ளவர்களை இங்கும் குடியேற்றி, பரந்த பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக் குள் அடக்கி வைத்திருந்தனர். அதனால் பழைய ஏற்பாட்டில் குறிப்பாக ஆமோஸ், ஓசேயா, ஏசயா, மீக்கா, செப்பனியா. நாகூம் போன்ற இறைவாக்கினார்கள் அசீரியர்களைக் காட்டுமிராண்டிகள் என்றழைத்தார்கள். இவர்களை யாவே தமது மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க ஒரு கருவியாக அடிக்கடி பயன்படுத்தினார். (காண்க: ஏச 10:5; எரே 1:13).
5. தொழில்:-
அசீரிய மக்கள் தச்சு வேலை, மண்வேலை. சித்திரத் தையல், நெசவு, உலோக வேலை ஆகியவற்றில் திறமையுள்ளவர்களாயிருந்தனர். இவற் றில் பாபிலோனியரைப் பின்பற்றினர். குழந்தைகள் பொதுவாகப் பெற்றோர் தொழிலையே செய்தனர்.
6. மக்கள்:-
இம்மக்களிடையே, அரசி னர் தொழிலாளர், பொதுமக்கள், அடி மைகள் என நான்கு பிரிவினர் காணப் பட்டனர். ஆளுநர்கள், புரோகிதர்கள், தளபதிகள் ஆகியேர் அரசினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அடிமைகள் என் போர் அயல் நாட்டிலிருந்து சிறைப்பிடித் துக்கொணரப்பட்டவர்கள்.
பெண்கள் தாழ்வாகக் கருதப்பட்டனர் அரசினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மணந்து கொள்ளலாம். மற்றவர்கள் ஒரு மனைவியை மட்டுமே மணக்க வேண்டும்
7. பொருளும் முக்கியத்துவமும்:-
விவிலிய வரலாற்றில், ஆசீரியா 200 ஆண்டுகளுக்கு இஸ்ராயேல் வரலாற்றைக் கட்டுப்படுத்தியது எனலாம். இதைத் தவிர, அதன் மறைமுகமான கலாச்சாரப் பாதிப்பு பலவகையிலும் உறுதியாகவும் பாதித்தது. கலாச்சாரத்தில் அசீரியா பாபிலோனைத் தழுவியது என்று முன்பு கூறினோம். அசீரியாதான் பேரரசு முழு வதும் பாபிலோனியக் கலாச்சாரத்தைப் பரப்பியது. அசீரிய அரசர்களின் ஆட்சி பற்றிய ஆண்டுக்குறிப்பு ஏடுகள்தான் இஸ்ராயேல் உட்பட்ட பழங்கால மேற் காசியாவில் கி.மு. 9-7-ஆம் நூற்றாண்டு களில் நடந்த நிகழ்ச்சிகளுக்குக்காலம் குறிக்க நம்பகமாக, நிலையான ஆதாரமா கும். இந்த ஆட்சி ஏடுகள், பழங்கால அரச ஏடுகளைவிட நயப்படுத்தப்பட்டு, ஒரு புதிய இலக்கியவகையாக உருவெடுத் தது. இக்காலம் பற்றிய, பழைய ஏற்பாட்டு நூல்களைத் தவிர்த்த, ஒரே முக்கியப் புகழ்பெற்ற நூல் தொகுப்பாகும்
அரசியலைப் பொறுத்தமட்டும் அசீரியர்கள்தான் உலகலாவிய அரசை முதன்முதலில் எய்தியவர்கள். இக் கருத்து அக்காதிய சார்கோனின் காலத்தி லேயே தோன்றுகிறது. அவர்களது போர் படைத்துறைக்கு ஒத்த அரசியல் ஆட்சி முறையையும் கொண்டிருந்தனர் என்றால் அப்பேரரசு வெகுகாலத்திற்கு நிலைத்தி ருக்கும். ஆனால் படைவலிமையால் பேரர சைக் கட்டிக்காக்க வேண்டியிருந்தது. அவர்கள் கைப்பற்றிய நாட்டினரை எப்படி நடத்தினர் என்று ஏற்கனவே கூறி யுள்ளோம். ஆனால் இவர்கள் கொடியவர் களானாலும் பொருட்களும் மனிதர்களும் சுதந்திரமாக பரிமாற்றம் செய்துகொள்ள அனுமதித்தனர். அசீரியப் பேரரசு அப்ப டியே பாபிலோனியப் பேரரசுடன் சேர்த் துக்கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் பார சீகப் பேரரசுக்குள்ளும், அலக்சாந்தரின் பேரரசுக்குள்ளும் சேர்த்துக் கொள்ளப் பட்டது அலக்சாந்தருக்குப்பின்தான் இப்பேரரசு சிதறிப் பிரிவுபட்டுப் போய் விட்டது. அரசியல் அடிப்படையில் சிதறிப்போனாலும், கலாச்சார ஒருமைப் பாடு நிலைத்தது உலகலாவிய அரசு. ஒரே அரசின் கீழ் மக்கள் மிகுந்த அமைதியும். பாதுகாப்பும் அடையலாம் என்ற குறிக்கோள் அலக் சாந்தரிடம் கையளிக்கப்பட்டது. அவரிட மிருந்து உரோமையரிடம் வேருன்றியது அசீரியர் செயல்படுத்திய இக்குறிக்கோள் பிற்காலத்தல் பரிசுத்த உரோமையப் பேரரசு, “கிறிஸ்தவ உலகம் ஆகியவற்றி லும், பிற்காலத்தில் கண்டம் முழுவதை ஒருமை ஆட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் தோன்றியது. இறையரசு பற்றிய எபிரேய இறைவாக்குக் கருத்து, இந்த இறையரசையே அழித்து விட்டி ருக்கக்கூடிய அசீரியப் பேரரசைக்காணும் வரையும் ஒரு நிலையான வடிவம் எடுக்க வில்லை. நற்செய்தியில் எடுத்தியம்பப் படும் இந்த இறையரசு பற்றிய கருத்து கிறிஸ்துவ விசுவாசத்திற்கு அடிப்படை யானதாகும்.