சேஷ்டபுத்திர பாகம் (சுதந்திரம்)

சேஷ்டபுத்திர பாகம் (சுதந்திரம்)

வேதாகம காலத்தில் பிறப்பின் மூலமாக மூத்த குமாரனுக்கு கொடுக்கப்படும் உரிமைகளும், சிலாக்கியங்களும், சம்பத்துக்களும் சேஷ்டபுத்திர சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்திலும் பழங்காலத்திலுள்ள மற்ற தேசங்களிலும் மூத்த குமாரனுக்கு விசேஷித்த சுதந்திரத்தை கொடுத்தார்கள். ஒரு தகப்பன் மரிக்கும்போது அவனுடைய சொத்தை பங்கு பிரித்து கொடுக்கையில் மூத்த குமாரனுக்கு இரண்டு பங்குகள் கொடுக்கப்படும் (உபா 21:17). அத்துடன் தகப்பனாரின் விசேஷித்த ஆசீர்வாதமும் குடும்பத்தை தலைமை தாங்கும் சிலாக்கியமும் மூத்த குமாரனுக்கு கொடுக்கப்படும் (ஆதி 43:33).

சேஷ்டபுத்திர சுதந்திரம்”என்பதற்கானஎபிரெய வார்த்தை -bek-o-raw-1062 என்பதாகும்.

“சேஷ்டபுத்திர சுதந்திரம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை proototokia 4415 என்பதாகும்.

சேஷ்டபுத்திரரின் சுதந்திரம் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆகையினால் ஒரு தகப்பன் சேஷ்ட புத்திர சுதந்தரத்தை இளைய குமாரனுக்கு கொடுக்கமுடியாது (உபா 21:15-17) சில சமயங்களில் சேஷ்ட புத்திரன் தன்னுடைய சுதந்திரத்தை இழந்துபோவதற்கு வாய்ப்புள்ளது. ரூபன் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியோடு பிரவேசித்ததினால் (ஆதி 35:22). தன்னுடைய சேஷ்டபுத்திர சுதந்திரத்தை இழந்துபோனான் (1நாளா 5.1-2). ஏசா ஒரு வேளை போஜனத்திற்காக தன்னுடைய சகோதரன் யாக்கோபிற்கு தன்னுடைய சேஷ்டபுத்திர சுதந்திரத்தை விற்றுப் போட்டான் (ஆதி 25:29-34; எபி 12:16).

பரலோகப் பிதாவிற்கு இயேசுகிறிஸ்து முதற்பேறானவராக இருக்கிறார் (யோவான் 3:16). தம்முடைய உலகத்திற்குரிய தாயாராகிய மரியாளுக்கும் இயேசுகிறிஸ்து மூத்த குமாரன் ஆவார் (லூக் 2:7). இதனால் யூதருடைய சேஷ்டபுத்திர சுதந்தரத்தின்படி இயேசுகிறிஸ்துவிற்கு பல உரிமைகளும் பல சிலாக்கியங்களும் உண்டாயிற்று. அவருடைய ஆவிக்குரிய சுதந்திரத்தில் அவரை விசுவாசிக்கிறவர்கள் அனைவருக்கும் பங்குள்ளது (ரோம 8:17). தேவனுடைய கிருபையினால் விசுவாசிகள் எல்லோரும் முதற்பேறானவர்களாக கருதப்படுகிறார்கள் (எபி 12:23)

சேஷ்டபுத்திரபாகத்தின் ஆசீர்வாதங்கள்

ஒரு குடும்பத்தை மூத்த குமாரன் சேஷ்டபுத்திரன் என அழைக்கப்படுகிறான். எபிரெயருடைய குடும்பத்தில் சேஷ்டபுத்திரனுக்கு விசேஷித்த ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:

1. குடும்ப சுதந்தரவீதம். (ஆதி 25:5)

2. குடும்ப தலைமைஸ்தானம். (ஆதி 24:65; ஆதி 25:5; ஆதி 27:29,37)

3. தகப்பனின் ஆசீர்வாதம் (ஆதி 27:4, 27-38)

4. குடும்பத்தலைவரும், ஆசாரியரும் (ஆதி 26:25; ஆதி 35:3-7)

5. குடும்ப நிலங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்த சுதந்தரம் (ஆதி 25:5-6;ஆதி 27:28,37; ஆதி 28:4; ஆதி 35.12)

6. சந்ததி பலுகிப்பெருகுதல். (ஆதி 13:16; ஆதி 15:5; ஆதி 17:2,5; ஆதி 22:17; ஆதி 26:4,24; ஆதி 28:3,14: 32:12; ஆதி 35.11)

7. விசேஷித்த பராமரிப்பு (ஆதி 12:2-3; ஆதி 26:3-4,24; ஆதி 27:28; ஆதி 28:15)

8. தனிப்பட்ட ஆசீர்வாதங்கள் (ஆதி 12:2; ஆதி 22:17; ஆதி 26:3)

9. பெரிய பெயர் (ஆதி 12:2; ஆதி 27:28-29,37)

10. எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதம். (ஆதி 12:2-3; ஆதி 18:18; ஆதி 22:18; ஆதி 26:4; ஆதி 28.14)

11. நித்திய சுதந்தரம் (ஆதி 13:15; ஆதி 17:7-8; ஆதி 28:13; ஆதி 35:12)

12. ஆபிரகாமின் உடன்படிக்கையில் விசேஷித்த நபர் (ஆதி 17:7,19; ஆதி 26:3-4; ஆதி 28:4,13-15)

13. மேசியாவின் “தகப்பன்” ஆதி 28.14; (ஆதி 12:3; ஆதி 21:12; ஆதி 22:17; ஆதி 26:5; 9:7; 5 3.16)

14. பல தேசங்களுக்குத் தகப்பன். (ஆதி 17:5; ஆதி 18:18; ஆதி 35:11)

15. ராஜாக்களுக்கு தகப்பன் (ஆதி 17:6; ஆதி 35:11)

16. நித்திய இயற்கையான சந்ததி (ஆதி 17:7-8,19; 2சாமு 7; ஏசா 9:6-7; ஏசா 59:21; 1:31-32)

17. விசேஷித்த தேவனாக யெகோவாவைப் பெற்றிருப்பது. (ஆதி 17:7-8; ஆதி 28:15; ஆதி 32:9,12)

18. விரோதிகள்மீது அதிகாரம். (ஆதி 22:17; ஆதி 27:29)

19. தேசங்களின்மீது தலைமை (ஆதி 27:29)

20. பொருளாதார ஆசீர்வாதங்கள் (ஆதி12:7; ஆதி 13:15; ஆதி 15:18-21; ஆதி 26:3-4; ஆதி 27:28-29,37; ஆதி 28:13; ஆதி 35.12)

21. ஆபிரகாமின் ஆவிக்குரிய ஆசீர்வாதம் – விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். (ஆதி 28:4; ரோமர் 4; கலா 3:14)

22. விரோதிகள்மீது சாபம். (ஆதி 12:3; ஆதி 27:29)

மூத்தவனுக்குச் சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுவதினால் அவனுடைய மற்ற சகோதரர்கள் அவன்மீது பொறாமைபடுவதற்கு வாய்ப்புள்ளது. மூத்தவனுக்கு இரட்டிப்பான சுதந்தரவீதம் கிடைக்கும். (உபா 21:15-17) சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போடலாம். (ஆதி 25:29-34; ஆதி 27:36; எபி 12:16; ரோமர் 9:12-13) மூத்தவனுடைய பாவத்தின்நிமித்தமாக சேஷ்டபுத்திரபாகம் மாற்றப்படும். (1 நாளா5:1-2 அல்லது தேவன் அதை நிறுத்தி வைப்பார். (ஆதி 25:23; ஆதி 48:15-20; 1இராஜா 2:15; 1 26.10).

இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்று ஏசா கூறினான். ஆவிக்குரிய காரியங்களில் ஏசா நம்பிக்கையில்லாதவன். இக்காலத்தில் மிகப்பெரிய பஞ்சம் இருந்ததாகவும், உணவு வகைகள் சரிவர கிடைக்காது எனவும் தெரியவருகிறது. ஆகையினால் ஒருவேளைப் போஜனம்கூட மனுஷருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை தன் தம்பியாகிய யாக்கோபுக்கு விற்றுப்போட்டான் (எபி 12:16-17)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page