குத்துவிளக்கு குறித்த பார்வை
- குத்துவிளக்கிற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும்.
- ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளும் இருக்கும்.
- நடுப்பக்கத்தில் விளக்குத்தண்டும் அதே உயரத்தில் இருக்கும்.
- இவையெல்லாம் சேர்ந்து ஏழு அகல்களாகும்.
- ஏழு அகல்கள் பரலோகத்திலுள்ள மாதிரியின் படியே செய்யப்பட்டிருக்கிறது. (யாத் 25:40; சக 4:2)
யாத் 25:31
“குத்துவிளக்கையும்”- 37:17-24. ‘மெழுகுவர்த்தி’ என்பதைவிட இது எபிரெய வார்த்தைக்கு நல்ல மொழிபெயர்ப்பாகத் தெரிகிறது. இது விளக்குகளைத் தாங்கியிருப்பது, மெழுகுவர்த்திகளை அல்ல. குத்துவிளக்கு வெளிச்சமாகிய கிறிஸ்துவைக் குறிக்கின்றது (யோவான் 1:4, 9; 8:12; 9:5). அவர், தேவ பிரசன்னத்துக்குப் போகும் பாதைக்கு வெளிச்சம் தருபவர். குத்துவிளக்கில் ஏழு கிளைகளும் ஏழு விளக்குகளும் இருந்தன. முழுமையும் பரிபூரணத்தையும் குறிக்கின்ற வேதாகம எண் ஏழு. (ஒப்பிடுக வெளி 1:4, 12, 16; 5:6). கிறிஸ்து பூரணமான வெளிச்சம். தேவனிடம் செல்லும் வழிக்கு வெளிச்சம் தரவும், ஆராதனை செய்வதற்கும் பணிவிடை செய்வதற்கும் வெளிச்சம் தரவும் வேறொன்றும் தேவையில்லை; உண்மையில் வேறொன்றும் இல்லை. கூடாரத்தில் சூரியன், சந்திரன் அல்லது வேறு மூலாதாரத்திலிருந்து வேறெந்த வெளிச்சமும் இல்லவே இல்லை. ஆசாரியர்கள் கூடாரத்துக்குள் வருவதற்கு தங்களுடைய சொந்த விளக்கு எதையும் கொண்டுவரத் தேவையில்லை. ஏழு கிளைகளைக் கொண்டிருந்த குத்து விளக்கு போதுமானது; அதன் விளக்குகள் ஒருபோதும் அணைந்து போகவில்லை. வரவிருக்கின்ற தேவனுடைய நகரத்திலும் இது போன்றதை நாம் காண்கிறோம் (வெளி 21:23). ‘தாலந்து’ (வ.39) – சுமார் 34 கிலோ எடை.
சகரியா 4:2
குத்துவிளக்கை”- ‘விளக்குத்தண்டு’ என்பதைவிட இது சிறந்த மொழிபெயர்ப்பாகும். ஒருவனும் ‘விளக்குகளை’ விளக்குத்தண்டின் மீது போடுவதில்லை. இந்த குத்துவிளக்கு யாத் 25:31-40-. ல் காணப்படுகிறதைவிட வித்தியாசமானது. அநேகமாக இது வேறொன்றை அடையாளப்படுத்துகிறது. இந்த இரண்டு ‘ஒலிவ மரங்களும்’ இரண்டு தனிநபர்களைக் குறிக்கிறது. அவைகளின் மூலமாக ‘விளக்குக்கு’ (வ 12-14) ‘எண்ணெய்’ வருகிறது. அநேகமாக இவர்கள் செருபாபேல் மற்றும் யோசுவாவாக இருக்கலாம். ஒருவர் தாவீதின் அரசவரிசையில் வந்த ஆளுநர், மற்றொருவர் பிரதான ஆசாரியர். ஆதலினால், இந்த குத்துவிளக்கு அவர்கள் ஊழியம் செய்த இஸ்ரவேலரைக் குறிக்கும். அந்நாளிலே இஸ்ரவேல் இந்த உலகத்திற்கு, இந்நாளிலே சபை இருப்பதுபோல, தேவனுடைய வெளிச்சமாய் இருந்தது (மத்தேயு 5:14).
வெளி 1:20
“ஏழு சபைகளின்”- வ 4,11. இவை அதிகாரங்கள் 2,3ல் உள்ள செய்திகள் தேவைப்பட்ட யோவான் நாட்களிலிருந்த வரலாற்று ரீதியிலான ஏழு சபைகள். ஆனால் இவைகள் வேறு விதமாகவும் பார்க்கப்படலாம் – அந்த நாட்களிலும் மொத்த காலங்களிலும் உள்ள எல்லா சபைகளுக்கும் பிரதிநிதியான சபைகள். ஏழு என்கிற எண் குறிப்பிடத்தக்கது. அது முழுமையும் நிறைவையும் அறிவுறுத்துகிறது. ஏழு ஆவிகள் என்பது ஒரே தேவனுடைய ஆவியை அடையாளப்படுத்துவது போல் (வ 4), ஏழு சபைகள் என்பதும் உலகில் ஒரே சபையை அடையாளப்படுத்தலாம். விளக்குத்தண்டுகளின் மத்தியில் ஏழு நட்சத்திரங்களைக் கிறிஸ்து பிடித்துக் கொண்டிருக்கும் காட்சியும் இதையே கூறுகிறது. கிறிஸ்துவின் கவனிப்பில் ஏழு சபைகள் மட்டும்தான் இருந்ததா? அவருக்கு இப்போது ஒன்றுமில்லையா? இந்த ஏழு விளக்குத்தண்டுகள் எல்லா சபைகளையும் பிரதிநிதிப்படுத்துவது தெளிவாக தெரியவில்லையா? எனவே நமது நாட்களில் இதுபோன்ற ஏழுவிதமான சபைகளை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த சபைகளுக்கு இன்னும் அர்த்தமிருக்கின்றது என்று சில குறிப்புரையாளர்கள் கூறுகிறார்கள். துவக்கம் முதல் இறுதிவரை சபையின் தீர்க்கதரிசனப் பார்வையை இந்த ஏழு சபைகள் தருவதாக அவர்கள் நினைக்கின்றனர். இந்தப் பார்வையில் ஏழு சபைகளும் எபேசுவில் ஆரம்பித்து லவோதேக்கியா வரை சரியான வரிசையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. சபை கடந்து செல்ல வேண்டிய அடுத்தடுத்த ஏழு காலகட்டங்களை இது குறிப்பிடுகின்றது. இது ஒரு சாத்தியமான விளக்கம்; கவனத்தை ஈர்க்கின்ற ஒன்று. உண்மையிலேயே தொடர்ந்து வருகின்ற நிருபங்களில் இருக்கின்ற செய்திகளுக்கும் சபை வரலாறுக்கும் சில ஒப்பந்தம் இருக்கின்றது. ஆனால் இந்த விளக்கத்துக்கு உண்மையான ஆதாரம் ஒன்றுமில்லை. எதுவாயிருந்தாலும் இந்த நிருபங்கள் நமக்குத் தனிப்பட்ட முறையிலும் நாம் செல்லுகின்ற சபைகளுக்கும் என்ன சொல்லுகின்றன என்பதில் நாம் அக்கறை செலுத்த வேண்டும்.
விளக்குத்தண்டில் ஏன் ஏழு அகல்கள் உள்ளன
- விளக்குத்தண்டில் ஏன் ஏழு அகல்கள் உள்ளன என்பதற்கான காரணம் தெரியவில்லை.
- சக 4:2 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு அகல்கள் கர்த்தருடைய கண்களுக்கு அடையாளமாகும்.
- (சக. 4:10) வெளி 1:12-13; வெளி 2.1 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு சபைகளைக் குறிக்கும்.
- (வெளி 1:20) வெளி 4.5 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு அக்கினி தீபங்கள் தேவனுடைய ஏழு ஆவிகளையும் அல்லது பரிசுத்த ஆவியானவரின் நிறைவையும் குறிக்கும்.
- (வெளி 5:6) ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள ஏழு அகல்கள் கர்த்தருடைய கண்களை அடையாளமாகக் குறிக்கலாம். (யாத் 25:40; சக 4:2,10; எபி 8:5; எபி 9:23)
வேதாகமத்தில் பல இடங்களில் பலவிதமான எண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஆவிக்குரிய அர்த்தம் கூறமுடியாது. சான்றாக ஒன்று என்பது ஒற்றுமையைக் குறிக்கும். (ஆதி 2:24; ஆதி 11:6; யோவான் 10:30; யோவான் 17:21-23) ஆனாலும், ஒன்று என்னும் எண் பயன்படுத்தப்பட்டிருக்கும் எல்லா வசனங்களும் ஒற்றுமையைக் குறிப்பதில்லை. (ஆதி 2:21; ஆதி 4:19; ஆதி 14:13; ஆதி 199; யோசு 12:9-24; யோவான் 1:23, 26,40
ஏழு சபைகள் -SEVEN CHURCHES
கிறிஸ்துவின் தரிசனத்திற்குப் பின்பு உடனடியாக ஏழு சபைகளுக்கும் செய்திகள் கொடுக்கப் படுகிறது. வெளி 2-3 ஆகிய அதிகாரங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தின் இரண்டாம் பகுதியாகும். தற்போதுள்ள சபைகளின் காரியங்களை இந்தப் பகுதி விளக்குகிறது. சபை எடுத்துக் கொள்ளப்படும் வரையிலும் சபைகளுக்கு இந்தச் செய்தி . (1கொரி 15:23,51-58; 1தெச 4:13-17; 2தெச 2:7)
“ஏழு சபைகள்” என்பதன் வியாக்கியானங்கள்
- யோவானின் நாளில் இருந்த ஏழு ஸ்தல சபைகள். துருக்கி தேசத்தின் மேற்குக் கரைப்பகுதியில் சின்ன ஆசியா அமைந்துள்ளது. அதிலுள்ள ஏழு ஸ்தல சபைகளின் நிலைமைகள் இங்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. (வெளி 1:4,11,20)
- தற்காலத்திலிருந்து சபை எடுத்துக் கொள்ளப்படும் காலம்வரையிலுமுள்ள எல்லா சபைகளுக்கும் கூறப்படும் தீர்க்கதரிசனச் செய்தி. ஸ்தல சபைகளின் ஆவிக்குரிய நிலைமைகளை ஏழு சபைகளுக்கும் கூறப்பட்டிருக்கும் செய்திகள் விவரித்துக் காண்பிக்கிறது.
- ஒவ்வொரு சபையிலுமுள்ள தனி நபர்களை இந்த வாக்கியம் குறிக்கிறது. ஒவ்வொரு தனி நபருடைய ஆவிக்குரிய நிலைமை விளக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிப்பு கூறப்படுகிறது . ( 1:3; 2:7,11,17,26; ; 3:5,12,21)
ஏழுசபைகள்” என்னும் வார்த்தை எல்லாச் சபைகளையும் குறிக்கும் தீர்க்கதரிசன வார்த்தை என்பதற்கு ஆதாரங்கள்
- வெளிப்படுத்தின விசேஷம் முழுவதுமே தீர்க்கதரிசனப் பண்புடையது. ( 1:3 ; 22:6-7,10,18-19)
- இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சி “testimony of Jesus” என்னும் வாக்கியமும் (வெளி 1.9; வெளி 12.17) இயேசு கிறிஸ்துவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது (வெளி 19:10) என்னும் வாக்கியமும், ஏழு சபைகள் என்னும் வார்த்தை தீர்க்கதரிசன வார்த்தை என்பதை உறுதிபண்ணுகிறது.
- வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் இது தீர்க்கதரிசன வார்த்தை என்பதை உறுதிபண்ணுகிறது. (வெளி 1.19; வெளி 4.1)
- தேவனுடைய வார்த்தை (the word of God) என்னும் வார்த்தை இது ஒரு தீர்க்கதரிசன சம்பாஷணை என்பதை நிரூபிக்கிறது. (வெளி 1:3,9).
- “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள்” (வெளி 1.1; வெளி 22:6-10) என்னும் வாக்கியமும் இது ஒரு தீர்க்கதரிசனம் என்பதை உறுதிபண்ணுகிறது.
- வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிற நிருபங்கள் மற்ற நிருபங்களுக்கும் புதிய ஏற்பாட்டின் எல்லாப் புஸ்தகங்களுக்கும் பொருந்தும். இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தை என்பதை இந்தக் காரியமும் நிரூபிக்கிறது. (2 தீமோ 3:16-17
- ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குக் கூறப் பட்டிருக்கும் வாக்குத்தத்தங்களும், இனிமேல் நடைபெறப்போகும் காரியங்களும் இக்காலத்திலுள்ள விசுவாசிகளுக்கும் பொருந்தும். ( 1-3)
ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டிருக்கும் நிருபங்களில் காணப்படும் ஒற்றுமைகள்
- எல்லா நிருபங்களிலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விளக்கம் உள்ளது. ( 1:12-16)
- ஒவ்வொரு நிருபமும் தூதனுக்கு அதாவது மேய்ப்பருக்கு எழுதப்பட்டதாகும்.
- ஏழாவது சபையைத் தவிர மற்ற சபைகளின் கிரியைகள் போற்றப்பட்டுள்ளன.
- இரண்டாவது, ஆறாவது சபைகளைத் தவிர மற்ற சபைகள் அனைத்தும் கடிந்து கொள்ளப்பட்டுள்ளன.
5.இரண்டு, நான்கு, ஆறு ஆவது சபைகளைத் தவிர மற்ற சபைகளுக்கு மனந்திருந்த வேண்டும் என்னும் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. நான்காவது சபையிலும் மனந்திருந்த வேண்டிய பாவமுள்ளது. ஆயினும் மனந்திருந்த வேண்டுமென்று அதற்கு கட்டளை கொடுக்கப்படவில்லை.
- இரண்டு, ஆறு ஆகிய சபைகளைத் தவிர மற்ற சபைகளுக்கு நியாயத்தீர்ப்பின் எச்சரிப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- ஒன்று, இரண்டு, ஆறு ஆகிய சபைகளைத் தவிர மற்ற சபைகள் ஒன்றுக்கொன்று முந்திய சபையைவிட மோசமானதாயிருக்கிறது.
- ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு. எல்லா நிருபங்களிலும் வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- காதுள்ளவன் கேட்கக்கடவன் என்னும் புத்திமதி எல்லா நிருபங்களிலும் கூறப்பட்டிருக்கிறது.
- இந்த நிருபத்தை எழுதவேண்டுமாறு தேவன் யோவானுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நிருபத்தையும் எழுதி முடித்த பின்பு, இதை யாருக்கு எழுத வேண்டும், இதில் என்ன எழுதவேண்டும் என்பனவற்றை அடுத்த நிருபத்தை முடிக்கும் முன்பு தேவன் யோவானுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அதன்பின்பு, “இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளைச் சபைகளுக்கு எழுது” என்னும் கட்டளையைத் தேவன் யோவானுக்குக் கொடுத்தார். (வெளி 1:19; வெளி 4:1)
எபேசு சபை
தேவனுடைய பண்பு
- செய்த நன்மைகளை பாராட்டுதல்
- பிரயாசங்களை நினைத்தல்
- குறைவுகளை சுட்டிக் காட்டுதல்
- மனம் திரும்ப எச்சரித்தல்
தேவனுடைய சிறப்பு
- குறைவு உள்ள ஐந்து சபைகள் நடுவிலும் உலாவினர்
- குறைவு உள்ள ஐந்து சபை தூதர்களையும் கையில் ஏந்தி கொண்டு இருந்தார்.
குறைவுகள் இருந்தபோதிலும் கைவிடாமல் இருக்க காரணம்
- ஆதி 1:2 (உலாவி) அசைவாடி சரிப்படுத்த
- ஏழு குத்துவிளக்குகளுக்கு நடுவில் நிற்கவில்லை உலாவினார் அவர் நிற்கும் தேவன் அல்ல செயல்படும் தேவன்
கரத்தில் வைத்திருக்க காரணம்
- புதிய சிருஷ்டிகளாக மாற்ற
- குறைவுகளை நிறைவாக்க
- எச்சரிப்பு கேட்டு மனம் திரும்புகிறவர்களை அப்படி ஆக்குகிறார்
- பரலோகத்தில் சாயல் இல்லாத எதுவும் பரலோகம் போக முடியாது
- யாவரையும் பரலோகத்தின் சாயலுக்கு ஒப்பாக மாற்றவே தமது கரத்தில் வைத்திருக்கிறார்
- குயவன் உள்ள களிமண் போல
இக்காலத்தில் உள்ள சபைகளை இரண்டாகப் பிரிக்கலாம்
கர்த்தர் உலாவுகிர சபை
- எல்லா சபைகளிலும் கர்த்தர் உலாவுவது இல்லை
- கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட சபைகளில் மட்டுமே உலாவுகிறார்
- தேவ சித்தம் செய்கிற சபை மட்டுமே கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டது
- குறைவுகள் இருந்தாலும் கர்த்தர் உலாவை சரி செய்யும் சபை
கர்த்தர் இல்லாத சபை
- மனித முயற்சியில் ஏற்படுத்தப்படும் சபை
- பிசாசு உண்டாக்கும் சபை
- மனித சித்தங்கள் நிறைவேற்றப்படும் சபை
- அடிப்படையே தவறான கொள்கை உள்ள சபை
சபைகளை இனம் கண்டு கொள்வது எப்படி
கர்த்தருடைய சாபை
- இயேசு தலையாக இருப்பார்
- ஊழியர்கள் இயேசு சீடர்களைப் போல இருப்பார்கள்
- விசுவாசிகள் தேவனை ஆராதிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்
பிசாசின் சபை
- இயேசுவை மறுதலித்தல்
- ஆவியானவரை மறுதலித்தல்
- தெய்வீகத்தை மறுதலித்தால்
- சுயத்தை நிறைவேற்றுதல்
- உலக வாழ்க்கையை முக்கிய படுத்துதல்
ஏழு சபைகளும் ஏழு காலங்களும்
- ஏழு பிரிவுகளை குறிக்கிறது
- ஏழு காலங்களை குறிக்கிறது
- ஒரே காலகட்டத்தில் இருந்த சபைகள் அல்ல
- எபேசு சபையின் காலம்
- சிமிர்னா சபையின் காலம்
- சர்தை சபையின் காலம்
- பெர்க்கமு சபையின் காலம்
- பிலதல்பியா சபையின் காலம்
- தியத்திரா சபையின் காலம்
- லவோதிக்கேயா சபையின் காலம்
- கி.பி 30-110 எபேசு சபையின் காலம்
- இயேசு பிறந்து நான்காவது வயதில் தான் காலங்கள் பிரிக்கப்பட்டன (கி.பி., கி.மு)
சபையில் தன்மைகள்
- எபேசு சபையில் சொல்லப்பட்ட அத்தனையும் இக்காலகட்டத்தில் இருந்த சபைகளுக்குள் இருந்தது
- அப்போஸ்தலர்களை பிரதிபலிக்கும் சபை
- கர்த்தருக்கு பிரியமான போதனைகள் இருந்தன
- கர்த்தருக்கு பிரியமான ஊழியங்கள் நடந்தன
- கர்த்தருடைய வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்
- கர்த்தருக்காக தங்கள் உயிரையும் இழக்க ஆயத்தமாய் இருந்தனர்
- கர்த்தர் மேல் அதிக விசுவாசம் வைராக்கியமும் இருந்தன
- கர்த்தருக்காக தங்கள் ஆஸ்திகளையும் இழக்க சம்மதித்தார்கள்
- தேவனுக்காக பாடுபடுவதை விரும்பினார்கள்
அறியாமல் செய்த குறைகள்
- துவக்கத்தில் அங்கேயும் குறைகள் இருந்தன
- சபை தொடங்கிய காலம்
- என்ன செய்வது என்பது அவர்களுக்கு தெரியவில்லை
- எப்படி தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை
- சபை கூடுகையில் ஒரு புறம் தீர்க்கதரிசனம் மறுபுறம் அந்நிய பாஷை அவரவர் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டிருந்தார்கள்
- சபைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறித்த பவுல் அநேக உபதேசங்கள் எழுதி இருக்கிறார்
என்றாலும் அப் 8:1 கவனியுங்கள்
ஆதியில் இருந்த அன்பு (கி.பி.100 பிறகு)
- அன்பு பாராட்டினது
- வைராக்கியம் பாராட்டினது
- அயராமல் பிரயாசப்பட்டது
- இருந்தாலும் பின் நாட்களில் இவைகள் விட்டுவிடப்பட்டன
- கி.பி.110-315