சிமிர்னா
வெளி 2:8-11
வச.9
- உபத்திரவம்
- ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரம்
- தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணம்
வச.10
- நீ படப்போகிற பாடுகள்
- சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுதல்
- பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள்.
- மரணபரியந்தம் உண்மையாயிரு,
- ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
வச.11
- ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை
சிமிர்னா சபை
‘சிமிர்னா’ என்பதற்கு ‘வெள்ளைப்போளம்’ என்று பொருள்.
எபேசு பட்டணத்திற்கு வடக்கே 50 மைல் தொலைவில் இருந்தது.
இப் பட்டணம் அக் காலத்தில் திட்டமிடப்பட்ட அழகிய பட்டணம்.
பட்டணத்தின் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் நேர் தெருக்கள் இருந்தன.
பொன் தெரு என அழைக்கப்பட்ட பெரிய தெருவில் ‘சிவிலி’ ‘ஜீயஸ்’ தேவதைகளின் கோவில்கள் இருந்தன.
வியாபாரத்திற்கு சிறந்த ஒரு பட்டணமாக இருந்தது.
ஐசுவரியத்தில் உயர்ந்த ஒரு பட்டணமாக இருந்தது.
இது ஆசியாவின் ‘அணிகலன்’ என்றும் ‘மணிமுடி’ என்றும் அழைக்கப்பட்டது.
இப்பட்டணம் திடீரென்று எதிரிகளால் அழிக்கப்பட்டு சிறு கிராமமாய் மாறிற்று.
ஆனால், மீண்டும் சில காலத்துக்கு பின் பெரும் பட்டணமாயிற்று.
இப்பட்டணம் பல முறை நில அதிர்வினால் சேதமடைந்தது உண்டு.
இன்றும் இப்பட்டணம் ‘இஸ்மிர்’ என்னும் பெயரில் துருக்கி நாட்டில் துறைமுகப்பட்டணமாக விளங்குகிறது.
தற்போது இதன் ஜனத்தொகை 2,50,000.
இப்பட்டணத்தில் சபை இல்லாத காலமே இல்லை.
சிமிர்னா சபை:
சிமிர்னா சபை பவுல் அப்போஸ்தலன் ஆரம்பித்தாக சிலர் கருதுகின்றனர்.
‘போலிகார்ப்’ என்ற சபைப்பிதா சிமிர்னா சபையின் கண்கானியாக இருந்தார்.
போலிகார்ப் யூதர்களால் பிடிக்கப்பட்டு நியாயஸ்தலத்துக்கு முன் நிறுத்தப்பட்டார்.
கிறிஸ்துவை மறுதலிக்குமாறு அவரை வற்புறுத்தியபோது,
போலிகார்ப், “86 வருடங்களாக கிறிஸ்துவை சேவித்து வந்தேன். அவர் ஒரு போதும் ஒரு தீங்கினையும் எனக்குச் செய்ததில்லை. இப்படிப்பட்ட என் இராஜாவும், இரட்சகருமானவரை எவ்விதமாய் நான் மறுதலிக்க முடியும்?” என்று அறிக்கையிட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
இச் சமயத்தில் ஒரே நேரத்தில் 1500 பேரும், மற்றொரு சமயம் 800 பேரும் கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாய் மரித்தனர்.
பழைய சிமிர்னா
- சிமிர்னா என்பதற்கு “கசப்பு” என்று பொருள்
- ஒரு சிறந்த துறைமுகம் இருந்தது, இன்றும் இருக்கிறது.
- இது எப்போது நிறுவப்பட்டது என்று கூறமுடியாது.
- லீதியாவின் அரசனான ஆலியாத்தெசு இதனைக் கி.மு. 627-இல் கைப்பற்றினார்.
- அவரது ஆட்சியில் அடுத்த 300 ஆண்டுகளுக்கு இவ்விடத்தில் சிறு கிராமம் மட்டுமே இருந்தது.
- மகா அலக்சாந்தர் சர்தையை வென்றபின் இன்றுள்ள இடத்தில் இந்நகரம் நிறுவப்பட் டது.
- கிமு 27 இல் ரோமானியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
- ரோமையர் காலத்தில் செல்வத்திலும் கட்டடங்களிலும் சிறப்புப் பெற்றிருந்தது.
- இது எப்போது நிறுவப்பட்டது என்று கூறமுடியாது.
- லீதியாவின் அரசனான ஆலியாத்தெசு இதனைக் கி.மு. 627-இல் கைப்பற்றினார்.
- அவரது ஆட்சியில் அடுத்த 300 ஆண்டுகளுக்கு இவ்விடத்தில் சிறு கிராமம் மட்டுமே இருந்தது.
- மகா அலக்சாந்தர் சர்தையை வென்றபின் இன்றுள்ள இடத்தில் இந்நகரம் நிறுவப்பட் டது.
- கிமு 27 இல் ரோமானியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
- ரோமையர் காலத்தில் செல்வத்திலும் கட்டடங்களிலும் சிறப்புப் பெற்றிருந்தது.
- மருத்துவ அறிவியல் மையமாக விளங்கியது.
- பொருளாதாரத்திலும், அரசியலிலும் எபேசு நகரை அடுத்திருந்தது.
- இங்குக் கிறிஸ்துவ சமூகம் தோன்றிய காலத்தைப்பற்றியோ தோற்றுவித்தவரைப் பற்றியோ எந்தவிதக் குறிப்பும் இல்லை.
- எபேசில் பவுல் ஆற்றிய பணியிலிருந்து இங்குக் கிறிஸ்தவ சமூகம் தோன்றியிருக்கலாம் (அ.ப. 19:9-10).
இன்றைய சிமிர்னா
- இது துருக்கியில் உள்ள இஸ்மிர் என்று அழைக்கப்படும் ஒரு அழகான கடற்கரை ரிசார்ட் நகரம்.
- துருக்கியில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன
- அவற்றுள் 11 மாவட்டங்கள் சிமிர்னாவில் (இஸ்மிர்) உள்ளன.
- இதன் பரப்பளவு 11,891 சதுர கிலோமீட்டர் (4,591 சதுர மைல்கள்),
- மக்கள் தொகை 4,462,056 (2022).
உபத்திரவம், பாடுகள்
யாரால் வந்தது?
- சிமிர்னா ஜனங்களும்
- யூத சமுதாயத்தில் அநேகரும்
என்ன நடந்தது?
- சாத்தானின் தூண்டுதலின் கீழ் பேரரசர்கள் சபையை துன்புறுத்தினர்.
- நூறாயிரக்கணக்கானோர் ரத்த சாட்சிகளாக மறித்தனர்.
- தோல் உரித்து உயிருடன் எரிக்கப்பட்டனர்,
- காட்டு விலங்குகள் முன் தூக்கி எறியப்பட்டனர்
- கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர்;
உபத்திரவத்திற்கான காரணம்
- பண்டைய நகரத்தில் வசிப்பவர்கள் பல தெய்வ வழிபாடு முறை கொண்டவர்கள்
- ஜீயஸ் (Zeus),
- அப்பல்லோ (Apollo),
- அப்ரோடைட் (Aprodite),
- எஸ்குலாபியஸ் (Aesculapius),
- சைபலே (Cybele),
- போஸிடான் (Poseidon), டிமீட்டர் (Demeter)
- ரோம அரசன் சீசர் (Caesar)
- ஒவ்வொரு ஆண்டும் ஒரு ரோமானிய குடிமகன் ரோமின் தெய்வமான டீ ரோமானின் பலிபீடத்தில் தூபத்தை எரிக்க வேண்டும்.
- இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு சோதனையாக மாறியது
போலிகார்ப்
- யோவானின் சீடன்
- திமிர்னா சபையின் பிஷப்
- யூதர்களால் கொலை செய்யப்பட்டு ரத்த சாட்சியாக மதித்தார்
அதற்குரிய கடைசி வார்த்தைகள்
- எண்பத்தாறு ஆண்டுகள் நான் அவருக்கு சேவை செய்தேன்,
- அவர் எனக்கு எந்தத் தவறும் செய்யவில்லை.”
- “என் ராஜாவையும் இரட்சகரையும் நான் எப்படி அவதூறு செய்ய முடியும்?
- சிறிது நேரத்திற்கு எரிந்து, பின்பு அணைந்துபோகும் நெருப்பால் நீங்கள் என்னை அச்சுறுத்துகிறீர்கள்;
- ஆனால் துன்மார்க்கருக்காக தயாரிக்கப்பட்ட நித்திய தண்டனையின் நெருப்பைப் பற்றி நீங்கள் அறியாதவர்களாயிருக்கிறீர்கள்.”
- “தந்தையே, இந்த நேரத்திற்கு என்னை தகுதியானவன் என்று தீர்ப்பளித்ததற்காக நான் உங்களை துதிக்கிறேன்,
- அதனால் பரிசுத்தவான்களுடன் நான் கிறிஸ்துவின் பங்கை பகிர்ந்து கொள்ள முடியும்.”
இஇயேசுவை மறுதலித்து விட்டு பதவி விலகும் படி யூதர்கள் வற்புறுத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் முதலில் அவரை நெருப்பினால் சுட்டெரித்தனர். நெருப்பு அவரை சேதப்படுத்த முடியவில்லை பிறகு கத்தியால் குத்தி அவரை கொலை செய்தனர்.
உலகப் பொருட்களில் ஏழை, ஆவிக்குரிய காரியங்களில் செல்வந்தர்
நமது ஐஸ்வர்யம் இயேசு
- 1 கொரி 3:21-23;
- 2 கொரி 8:9
அவர் ஐசுவரியமுள்ளவர்
- யோவான் 1:1-3; 17:5;
- கொலோ 1:16;
- எபிரேயர் 1:2.
இயேசு நமக்காக எப்படி தரித்திரர் ஆனார்
- லூக்கா 2:7;
- மத்தேயு 8:20; 17:27;
- பிலி 2:6-8;
- ஏசாயா 53:2-6.
ஐசுவரியவான்களாக’ அவர் விரும்பினார் –
- இப்போது வங்கிக் கணக்கில் இருக்கிற செல்வத்திலல்ல; இந்த வசனங்களில் காண்கின்ற செல்வத்தில்
- மத்தேயு 19:28-29;
- யோவான் 14:2-3;
- ரோமர் 8:17;
- 1 கொரி 3:21-23;
- எபே 1:3, 7, 8;
- 1 பேதுரு 1:4;
- வெளி 21:7.
சிமிர்னா சபையார் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்காக விரும்பியே ஏழையாகிக் கொண்டார்கள்
- யாக்கோபு 2:5;
- லூக்கா 6:20-22; 14:33.
தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல்”-
- ரோமர் 2:28-29;
- இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்”
- எரேமியா 4:4
- இதன் அடையாளம்
- யோவான் 5:44; 12:43.
- இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்”
- பிலி 3:2-3.
- நாய்களுக்கு- யூதர்கள்
- சுன்னத்துக்காரருக்கு”-
- பவுல் இங்கு விருத்த சேதனத்தைக் குறிப்பிடுகிறார் – ஆதி 17:10-14; .
- சில யூதர்களால் பிறதேசத்தாரிலிருந்து கிறிஸ்தவர்களானவர்களை இந்தக் காரியத்தில் கீழ்ப்படிய வேண்டும் என்கிறார்கள். விசுவாசியாத யூதர்கள், விருத்தசேதனம் பெற்றும், சரியாக வாழவில்லை என்பதை மறைமுகமாகப் பவுல் கூறுகிறார். (ரோமர் 2:25-29).
- அவர்களைப் பொறுத்தமட்டில் விருத்தசேதனம் என்பது அர்த்தமற்றது, வெறும் மாமிசத்தை வெட்டுவதேயாகும்.
“படப்போகிற பாடுகளைக் குறித்து”-
- மத்தேயு 10:26-28, 31;
- லூக்கா 12:32;
- யோவான் 14:27; 16:33;
- எபிரேயர் 13:5-6;
- ரோமர் 8:28.
“சோதிக்கப்படும்பொருட்டாக”-
- பிசாசு அவர்களைத் துன்பப்படுத்தி அழித்துவிட நினைத்தான்.
- தேவன் அதை சோதனை என்று பொருள் கொண்டார்.
- சங் 66:10-12;
- 1 தெச 2:4;
- 1 பேதுரு 1:6-7;
- 2 பேதுரு 2:9;
- யாக்கோபு 1:2-3.
10 நாள் உபத்திரவம்: (2 :10)
ரோம சக்கரவர்த்திகள் 10 பேர் சபையை துன்பப்படுத்தினதை இது குறிக்கிறது என சிலர் கருதுகின்றனர்.
- 1. கி.பி. 64 ல் – நீரோ ராயன்
- 2. கி.பி. 81 ல் – டொமிசியன்
- 3. கி.பி. 98 ல் – ட்ராஜன்
- 4. கி.பி. 180 ல் – மார்க்கஸ்
- 5. கி.பி. 193 ல் – செப்டிமியஸ்சிவிரஸ்
- 6. கி.பி. 235 ல் – மாக்சிமஸ்
- 7. கி.பி. 249 ல் – டீளியஸ்
- 8. கி.பி. 254 ல் – வெல்லேரியன்
- 9. கி.பி. 270 ல் – ஆரிலியன்
- 10. கி.பி. 284 ல் – டயோகிளிஸியன்
உபத்திரவங்களை முன் அறிவித்த தேவன் மரணபரியந்தம் உண்மையாய் இரு என்று ததரியம் கூறுகிறார்.
“ஜீவகிரீடத்தை”-
- யாக்கோபு 1:12.
- கிரீடம்
- 2 தீமோ 4:8.
- கிரீடம்
“இரண்டாம் மரணத்தினால்”-
- 20:6, 14; 21:8.
தேவனிடமிருந்து இறுதியான பிரிவு என்று இதற்கு அர்த்தம்.
- 2 தெச 1:8-9.