தேவன் நம்முடைய பரமபிதா
1. தேவன் பரமபிதா
அ). தேவன் தம்மைப் பிதா என்று கூறுகிறார். (உபா.32:6; ஏசா.9:6; எரே.3:4; மல்.1:6; மத்.5:16; 6:9) (இன்னும் பல இடங்களில்)
ஆ). தேவன் நம்மை பிள்ளைகள் என்று அழைக்கிறார். யோவான்.1:12 இன்படி கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்ட அனைவரும் தேவனுடைய பிள்ளைகளாகும் அதிகாரம் பெற்றவர்கள். ரோம.8:14-18 இன்படி தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் தேவனுடைய பிள்ளைகள்.
இ) அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய முதலாம் நிருபத்தில் தேவன் பிள்ளைகளுக்குக் கூறுவதை 1 யோவான்.2:1,12,18,28; 3:1,2,7,18; 4:4 என்ற வசனங்களில் காண்கிறோம். இவ்வசனங்களை ஆராய்ந்துபார்த்து தேவன் கூறுபவற்றை உணர்வீர்களாக
ஈ). நீதிமொழிகள் புத்தகம் தகப்பன் மகனுக்கு எழுதிய கடிதம் ஆகும். நீதிமொழிகள் புத்தகத்தில் ‘என் மகனே என்று வரும் சொற்கள் கவனித்துப்பார்த்தால் இதை நன்கு தெரிந்துகொள்ளலாம். –
உ). மல்கியாவின் புத்தகத்தில் தகப்பன் தன் குமாரனுக்கு விரோதமாகக் கூறும் குற்றச்சாட்டைக் காணலாம் (மல்கியா 1:6)
ஊ). கிறிஸ்து நம்மைப் பிள்ளைகளே என்று அழைக்கிறார் (யோவான் 21:5),
எ). இயேசு சொன்ன இளைய மகன் உவமையில் தேவன் தகப்பனுக்கு ஒப்பிடப்பட்டுள்ளதை காணலாம் (லூக்.15:11-32)
2) நம்முடைய பரமபிதா நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க விரும்புகிறார்?
அ). அவருடைய சாயலின்படி (ஆதி.127),
ஆ). அவரைப்போலப் பூரனராக (மத்.5:48), (பரிசுத்தம், இரக்கம், அன்பு போன்ற தேவனுடைய பண்புகள் நம்மில் காணப்படுவதாக).
இ). அவருக்கு மகிமை கொண்டுவருபவர்களாக (மத்.5:16),
ஈ). எல்லாவற்றின் மேலும் அதிகாரம் செலுத்துபவர்களாக (ஆதி.1:26; லூக்.10:19), .
உ). அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களாக (மல்கியா 1:6)
ஊ). அவருக்கு கீழ் படிக்கிறவர்களாக (பல் 1:6)
நாம் இருக்கவேண்டுமென்று பரமபிதா வாஞ்சையாய் இருக்கிறார்.
3) தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் செய்தவை
அ). நன்மையான எல்லாவற்றையும் தருகிறார் (மத்.7:11),
ஆ). ஆகாரம், உடை போன்றவற்றைத் தருகிறார் (மத்.6:25-33)
இ). பெலனடைவதற்காகப் பரிசுத்த ஆவியானவரைத் தருகிறார் (லூக்.11:11-13).
ஈ) இரங்குகிறார் (சங்.103:13)
உ). பாதுகாக்கிறார் (மத்.10:29-31).
ஊ). சிட்சிக்கிறார் (எ.பி.12: 5-11; வெளி.3:19),
எ). வழி நடத்துகிறார் (ஏசா.48:17; சங்.23:3)
ஏ). சுமக்கிறார் (உபா.1:31)
ஐ). கடாச்சிப்பார் (பல் 3:17)
ஒ) இராஜ்யத்தைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார் (லூக்.12:32).
ஓ). ஏந்துகிறார் (ஏசா.46:4)
ஔ). தப்புவிக்கிறார் (ஏசா.46:4)
4) தேவன் எதற்காக நம்மைச் சிட்சிக்கிறார்?
அ). நாம் புத்திரராயிருப்பதினால் (எபி.12:6-8),
ஆ). நம்மை அவர் நேசிப்பதால் (எபி.12:6; நீதி.3:12)
இ). அவருடைய பரிசுத்தத்தில் பங்கு பெறுவதற்கு (எபி.12:10)
ஈ). நம்முடைய ய பிரயோஜனத்திற்காக (எபி.12:10):
உ). நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்காக (எபி.12:11)
தேவன் நம்மை மிகுந்த கவனத்துடன் அன்புடனும் சிட்சிக்கிறார்.
5) தேவன் அளிக்கும் சிட்சையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
அ). அற்பமாக எண்ணாதீர் (எபி.12:5)
ஆ). சோர்ந்து போகாதீர் (எபி.12:5).
இ) சிட்சையைச் சகிக்கவேண்டும். கோபப்படக்கூடாது, முறுமுறுக்கக்கூடாது (எபி.12:7).
ஈ). நம்மை நேசிக்கும் நம்முடைய தகப்பனிடத்தில் இருந்து வருகின்ற சிட்சையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அதற்காக நன்றி செலுத்த வேண்டும் (1 தெச.5:18),
6. தேவனிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?
அ) வேதத்தை நன்கு தியானிப்பதன் மூலம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
ஆ) அடிக்கடி தனி ஜெபத்தின் மூலம் அவரிடம் பேச வேண்டும்
இ ) நல்ல ஆவிக்குரிய ஐக்கியத்தில் சேர்ந்து அடிக்கடி இணைந்து ஜெபிக்க வேண்டும்.
ஈ) சபை கூடிவருதலை விட்டுவிடாமல் ஒழுங்காக ஆலய வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும்.
உ). ஏதாவது ஒரு விதத்திலாகிலும் மற்றவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும்
ஊ) கர்த்தரின் வருகைக்கு எதிர்பார்த்து, காத்திருக்க வேண்டும்.
நமக்கும் தேவனுக்குமிடையே உள்ள உறவு ஒரு தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இருக்கும் உறவைப்போல் காணப்படவேண்டும். உம்முடைய உறவு அப்படி இருக்கிறது? அடிக்கடி அவருடன் பேசி அவருடைய பிரசன்னத்தில் வாழ்வோமாக. எந்தச் சூழ்நிலையையும் ஆண்டு நடத்துகிற சர்வ வல்லமையுள்ள தேவன் வேறு யாருமல்ல, நம்மை நேசிக்கும் நம்முடைய தகப்பன் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் மறந்துவிட கூடாது. எதுவும் அவருடைய அனுமதியின்றி என்னை தொட முடியாது, ஆகையால், பயப்படாமல் தைரிமாக அவருடைய பிள்ளைகள் வாழ்வோமாக.
குறிப்பு: இக்கட்டுரை குறிப்புகளாக எழுதப்பட்டுள்ளது. இதை ஒரு கட்டுரையாக எழுதிப்பாருங்கள்