தேவனுடைய அக்கினியை பெற பலி பீடத்தை சொப்பனிடுங்கள்

தேவனுடைய அக்கினியை பெற பலி பீடத்தை சொப்பனிடுங்கள்  1 இராஜாக்கள் 18:30

அறிமுகம்:

இன்றைய தேவ சபையில் நாம் பலவீனமடைந்துள்ளோம் எனில், அதன் அடிப்படை காரணம் – பலிபீடம் இடிந்துவிட்டது.
ஆதாவது, நம் உள்ளார்ந்த ஆராதனை, மனநிலை, தீர்மானம், பரிசுத்தம் – இவை அனைத்தும் சிதைந்துவிட்டது.
நாம் தேவனுடைய அக்கினியை நாடுகிறோம்; ஆனால் தேவன் நெருங்க நம்முள் பலிபீடம் இருக்க வேண்டிய அவசியத்தை மறந்துவிட்டோம்.

பிரிவு 1: பலிபீடம் என்பது என்ன? (பழைய ஏற்பாட்டு அர்த்தம்)

  • பலிபீடம் என்பது மனிஷன் தேவனை சந்திக்கும் பரிசுத்த இடம்.
  • அது தேவனுடன் உடன்படிக்கையை உறுதி செய்யும் அடையாளம்.
  • பழைய ஏற்பாட்டில் நோவா (ஆதி. 8:20), ஆபிரகாம் (ஆதி. 22:9), மோசே (யாத். 17:15), என்பவர்கள் பலிபீடங்களை கட்டினர்.
  • ஆனால், இஸ்ரவேல் பாவத்தில் வீழ்ந்தபோது, அந்த பலிபீடங்கள் புறக்கணிக்கப்பட்டன (1 இரா. 18:30).

ஆவிக்குரிய உண்மை:
இன்று நம் உள்ளங்களில் தேவனுக்கு ஏற்புடைய பாவமற்ற பலிபீடம் இருக்க வேண்டியது அவசியம்.

பிரிவு 2: எலியா பலிபீடத்தை ஏன் செப்பனித்தான்?

  • ஜனங்கள் பாகால் வழிபாட்டில் மழுங்கி விட்டனர் (1 இரா. 18:21).
  • அவர்களின் மனதிலும் மனநிலையில் ஒரு பிளவு ஏற்பட்டது.
  • தேவனுடைய பலிபீடம் இடிந்துவிட்டது – அது யாராலும் பராமரிக்கப்படவில்லை.
  • எலியா முன்னோடியாக நின்று அதை புதுப்பிக்கிறார்.

ஆவிக்குரிய உண்மை:
தேவனால் எழுப்பப்படும் ஒவ்வொரு உண்மையான ஊழியக்காரனும் முதலில் பலிபீடத்தை செப்பனிக்க அழைக்கப்படுகிறான். அது தன் உள்ளத்தைச் சுத்தமாக்குதல் முதல்!

பிரிவு 3: பலிபீடத்தை செப்பனிப்பதின் ஆவிக்குரிய கட்டளை

  1. மனம் திரும்புதல் –
  • பாவத்தை விட்டு தேவனை நோக்கி திரும்புதல் (2 நாளா. 7:14).
  • உண்மையான விருப்பத்துடன் இருதய மாற்றம்.
  1. ஒழுங்கு –
  • எலியா தண்ணீர் ஊற்றியது சுத்திகரிப்பதற்கான அடையாளம் (1 இரா. 18:33–35).
  • பரிசுத்தம் இல்லாமல் தேவன் நெருங்க மாட்டார்.
  1. முழுமையான அர்ப்பணம் –
  •  முழுவதும் சந்து சந்தாக துண்டித்து அக்கினியில் எரிக்க ஒப்பு கொடுப்பது 
  • ரோமர் 12:1 – “உங்கள் உடல்களை ஜீவனுள்ள பலியாக அர்ப்பணியுங்கள்.”

பிரிவு 4: தேவனுடைய அக்கினி இறங்கும் பலிபீடம்

  • 1 இரா. 18:38 – “கர்த்தருடைய அக்கினி இறங்கியது…”
  • அக்கினி என்பது தேவனுடைய உண்மை, சாட்சி, அதிகாரம், அருள், சுத்திகரிப்பு என்பவற்றின் அடையாளம்.
  • அக்கினி நம்மை மாற்றும் (மல். 3:2-3), நம்மை தூய்மைப்படுத்தும் (எசே. 36:25), நம்முள் வசிக்கத் தூண்டும் (மத். 3:11).

ஆவிக்குரிய உண்மை:
நம் உள்ளங்களில் அக்கினி வரவேண்டும் என்றால், பலிபீடம் தயாராக இருக்கவேண்டும்!

பிரிவு 5: இன்று தேவன் உங்களை அழைக்கிறாரா?

  • உங்கள் உள்ளம் ஒரு இடிந்த பலிபீடமா?
  • உங்கள் வாழ்வில் பாவம், சோர்வு, உலக ஆசைகள் நுழைந்துவிட்டதா?
  • நீங்கள் தேவனுடைய அக்கினியை பெற விரும்புகிறீர்களா?

இன்றே செப்பனியுங்கள்!

  • உங்கள் உள்ளத்தை திருத்துங்கள்
  • உங்கள் ஆராதனையை திரும்பப் பெரிதாக்குங்கள்
  • உங்கள் தேவனின் நாமத்தை உயர்த்துங்கள்

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Catagory