இஸ்ரவேல் கோத்திரம் 1

இஸ்ரவேல் கோத்திரம் (The Tribes of Israel)

இவர்கள் வம்சம்:

  • யாக்கோபின் 12 பிள்ளைகளும் இஸ்ரவேல் கோத்திரத்தார் என அழைக்கப்பட்டனர் – ஆதி.35:23-26; 49:28; யாக்.1:1
  • இவர்கள் எதிர்காலத்தைக் குறித்து யாக்கோபு முன்னுரைத்தான்- ஆதி.49:1-8
  • இவர்கள் வருங்காலத்தைக் குறித்து மோசே முன்னுரைத்தான் – உபா.33:6-29

இவர்களது வனாந்தர வாழ்க்கை:

  • ஒவ்வொரு கோத்திரமும் ஒரு தலைவரின்கீழ் இயங்கியது. – எண்.1:4-16
  • இவர்கள் பல குடும்பங்களாக பிரிக்கப்பட்டனர் – எண்.1:2; 26:5-50
  • ஆண்களில் பலரை யுத்தத்திற்கென தெரிந்தெடுத்தனர் – எண்.31:4
  • எகிப்திலிருந்து புறப்பட்டபோது 6 லட்சம் புருஷர்கள் இருந்தனர் – யாத்.12:37
  • வனாந்தரத்தில் எண்ணப்பட்ட புருஷர்கள் 6,03,550 பேர் – எண்.2:32
  • பாளைய பயணத்தில் 4 பிரிவுகளாய் பிரிக்கப்பட்டனர்) – எண்.10:14-28
  • ஆசரிப்பு கூடாரத்தைச் சுற்றிலும் கோத்திரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு இருந்தனர் – எண்.2:2-31

இவர்களது கானான்வாழ்க்கை:

  • இவர்கள் மக்கள்தொகைக்கேற்ப கானானின் இடம் ஒதுக்கப்பட்டது – எண்.33:54
  • ரூபன், காத், மனாசேயின் பாதி கோத்திரத்தார் யோர்தானின் கிழக்கு பகுதியை தேர்ந்தெடுத்து குடியேறினர் – உபா.3:12-17; யோசு.13:23-32
  • மற்ற கோத்திரத்தாருக்கு உதவி செய்யும்படி இவர்களும் அழைக்கப்பட்டனர் – எண்.32:6-32; உபா.3:18-20
  • கானானுக்குள் சென்ற மொத்த மக்கள் 6,01,730 பேர் – எண்.26:51
  • கானான் தேசம் மட்டும் ஒன்பதரை கோத்திரத்தாருக்கு சீட்டு போட்டு பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது – யோசு.14:1-5
  • கானானில் குடியேறிய ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் எல்லைகள் வகுத்து, கொடுக்கப்பட்டன – யோசு.15:1-63
  • எல்லா கோத்திரத்தாரும் அவரவர் எல்லையில் குடும்பத்தோடு குடியிருக்கும்படி அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது – எண்.36:3-9
  • கோத்திரத்தாரின் பெயர்கள் பிரதான ஆசாரியனின் மார்ப்பதக்கத்தில் முத்திரை வெட்டாய் வெட்டப்பட்டது – யாத்.28:21; 39:14
  • ரெகொபெயாம்மின் ஆட்சிவரை இவர்கள் அனைவரும் ஒரே ஆட்சிக்குட்பட் டிருந்த மக்களாக இருந்தனர்

ரூபன் கோத்திரம் (The Tribe of Reuben)

இவர்கள் வம்சம் :

  • யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த முதல் ஆதி.29:32 –
  • மகன் ரூபனின் வம்சத்தார் இக்கோத்திரத்தை ஆதி.46:9-10
  • சேர்ந்தவர்கள் யாக்கோபு இவர்களைக் குறித்து ஆதி.49:3-4
  • முன்னறிவித்தான் மோசே இவர்களைக் குறித்து முன்னறிவித்தான் உபா.33:6

இவர்களது கோத்திரம் :

  • இவர்கள் கோத்திரத்தலைவனாக எலிசூர் இருந்தான் எண்.1:5
  • கோத்திரத்தில் யுத்தத்திற்கு எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர் எண்.1:21
  • கோத்திர சார்பாக கானானை வேவு பார்க்க சம்முவா சென்றான் எண்.13:4
  • இஸ்ரவேலரின் பயணத்தில் இரண்டாம் பிரிவில் இருந்தவர்கள் எண்.10:18
  • ஆசரிப்புக் கூடாரத்தின் தெற்கில் பாளையமிறங்கியவர்கள் எண்.2:10
  • கூடாரத் திறப்பு விழாவின்போது காணிக்கை படைத்தனர் எண்.7:30-35
  • கோத்திரத்தில் யுத்தத்திற்கு எண்ணப்பட்டவர்கள் 43,730 பேர் எண்.26:7
  • யோர்தானின் கிழக்கு பகுதியை சுதந்தரிக்க விரும்பியவர்கள் – எண்.32:1-5
  • கானானை இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்கள் சுதந்தரிக்க உதவியவர்கள் – உபா.3:18-20
  • தாங்கள் விரும்பின இடத்தைசுதந்தரித்தவர்கள் – உபா.3:16-17; யோசு.13:15-23
  • சாபம் கூறுகிற கூட்டத்தில் இடம் பெற்றிருந்தனர்) உபா.27:13
  • யோசுவாவால் அழைத்து பேசி அனுப்பப்பட்டவர்கள் யோசு.22:1-9
  • பலிபீடம் கட்டி மற்ற கோத்திரத்தாரை புண்படுத்தினார்கள் யோசு.22:10-29
  • சிசெராவுக்கு எதிராக வர உதவாதவர்கள் நியா.5:15-16
  • சிலர் தாவீதின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டனர் 1 நாளா.12:37-38
  • இவர்கள் மீது தாவீது தலைவர்களை நியமித்தான் 1 நாளா.26:32; 27:16
  • ஆகாரியரோடு போரிட்டு வென்றனர் 1 நாளா.5:10, 18-22

இவர்களது வாழ்க்கை :

  • இவர்கள் நகரங்களைக் கட்டி பெயர்களை சூட்டினார்கள் – எண்.32:37-38
  • சீரிய ராஜா ஆசகேலால் சிறைபிடிக்கப்பட்டார்கள் – 2 இரா.10:32-33
  • அசீரிய ராஜா தில்காத்பில் நேசரால் சிறையாக கொண்டுபோகப்பட்டார்கள் – 1 நாளா.5:6,26
  • தாத்தான் இவர்கள் கோத்திரத்தில் பிரபலமாய் இருந்தான் – எண்.16:1
  • அபிராம் இவர்கள் கோத்திரத்தில் பேர் பெற்றவனாயிருந்தான் – எண்.26:9
  • அதினா இவர்கள் கோத்திரத்தில் திறமைவாய்ந்தவனாய் இருந்தான் – 1 நாளா.11:42

சிமியோன் கோத்திரம் (The Tribe of Simeon)

இவர்கள் வம்சம் :

  • யாக்கோபின் ஏழாம் மகன் சிமியோன் ஆதி.29:33
  • யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்தவன் ஆதி.29:33
  • இவனைக் குறித்து யாக்கோபு முன்னறிவித்தான் ஆதி.49:5-7

இவர்களது கோத்திரம் :

  • செலூமியேல் இவர்கள் கோத்திரத்து தலைவனாய் இருந்தான் – எண்.1:6
  • கோத்திரத்தில் யுத்தத்திற்கு எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர் – எண்.1:23
  • கோத்திர சார்பாக சாப்பாத் வேவு பார்க்க சென்றான் – எண்.13:5
  • கானானை பங்கிட சாமுவேல் பிரபுவாய் இருந்தான் – எண்.34:20
  • இஸ்ரவேலரின் பயணத்தில் இரண்டாம் பிரிவில் இருந்தார்கள் – எண்.10:18-19
  • ஆசரிப்பு கூடார தென்பகுதி இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது எண்.2:10-12
  • ரூபன் கோத்திரத்திற்குப்பின் இவர்கள் சென்றனர் – எண்.2:10
  • கூடார திறப்பின்போது இவர்கள் காணிக்கை படைத்தனர் -12 – எண்.7:36-41
  • இவர்கள் கோத்திரத்தில் 22,200 குடும்பங்கள் இருந்தன – எண்.26:14
  • மோவாப்பிரோடு பாவம் செய்து பலர் கொல்லப்பட்டனர் – எண்.25:9,14
  • ஆசீர்வாதம் கூறுகிற கூட்டத்தில் இடம் பெற்றனர் இவர்கள் – உபா.27:12
  • சுதந்தரிக்கும் எல்லை யூதாவில் கிடைத்தது – யோசு.19:1-8

இவர்களது வாழ்க்கை:

  • இவர்கள் பட்டணங்களும் கிராமங்களும் இவர்கள் எல்லைக்குள் வந்தது யோசு.19:2-8; 1 நாளா.4:28-33
  • கானானியரோடு யுத்தம் பண்ண யூதாவோடு சென்றனர் – நியா.1:3,17
  • இவர்களில் சிலர் தாவீதை இராஜாவாக்க வந்தனர் – 1 நாளா.12:25
  • இவர்களில் சிலரை தாவீது தலைவனாக்கினான் – 1 நாளா.27:16
  • இம்மக்களில் பலர் ஆசாவோடு இணைந்து கொண்டனர் – 2 நாளா.15:9
  • யோசியா ஆட்சியில் இவர்களில் இருந்த விக்கிரகங்கள் அகற்றப்பட்டன – 2 நாளா. 34:1-7
  • இவர்களில் ஒரு பிரிவினர் அமலேக்கியரை வீழ்த்தி அவர்கள் இடங்களில் குடியேறினர் – 1 நாளா.4:39-43

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Catagory