{"Chapter":[{"Verse":[{"Verseid":"33000000","Verse":"நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்."},{"Verseid":"33000001","Verse":"கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்."},{"Verseid":"33000002","Verse":"கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது."},{"Verseid":"33000003","Verse":"அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசனும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்."},{"Verseid":"33000004","Verse":"அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கடந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்."},{"Verseid":"33000005","Verse":"அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்."},{"Verseid":"33000006","Verse":"கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்."},{"Verseid":"33000007","Verse":"ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்."},{"Verseid":"33000008","Verse":"நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது."},{"Verseid":"33000009","Verse":"அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும் தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்."},{"Verseid":"33000010","Verse":"கர்த்தர`Ε்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிРρக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்."},{"Verseid":"33000011","Verse":"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்."},{"Verseid":"33000012","Verse":"இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்."},{"Verseid":"33000013","Verse":"உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்."},{"Verseid":"33000014","Verse":"இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்."}]},{"Verse":[{"Verseid":"33001000","Verse":"சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து."},{"Verseid":"33001001","Verse":"வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்."},{"Verseid":"33001002","Verse":"அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்."},{"Verseid":"33001003","Verse":"இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்."},{"Verseid":"33001004","Verse":"அவன் தன் பிரபலஸ்தரை நினைவுகூருவான்; அεர்கள் தங்கள் நடைகளில் இடறி, அலங்கத்துக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்."},{"Verseid":"33001005","Verse":"ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்."},{"Verseid":"33001006","Verse":"அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்ககள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்."},{"Verseid":"33001007","Verse":"நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை."},{"Verseid":"33001008","Verse":"வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது."},{"Verseid":"33001009","Verse":"அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது."},{"Verseid":"33001010","Verse":"சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே?"},{"Verseid":"33001011","Verse":"சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று."},{"Verseid":"33001012","Verse":"இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."}]},{"Verse":[{"Verseid":"33002000","Verse":"இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது."},{"Verseid":"33002001","Verse":"சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,"},{"Verseid":"33002002","Verse":"வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்."},{"Verseid":"33002003","Verse":"தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்,"},{"Verseid":"33002004","Verse":"இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,"},{"Verseid":"33002005","Verse":"உன்மேல் தீட்டானவைகளை எறிந்து உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."},{"Verseid":"33002006","Verse":"அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி உன்னைவிட்டோடிப்போவான்."},{"Verseid":"33002007","Verse":"நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது."},{"Verseid":"33002008","Verse":"எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லுூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது."},{"Verseid":"33002009","Verse":"ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்."},{"Verseid":"33002010","Verse":"நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய்."},{"Verseid":"33002011","Verse":"உன் அரண்களெல்லாம் முதல்பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும்."},{"Verseid":"33002012","Verse":"இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும்; அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும்."},{"Verseid":"33002013","Verse":"முற்றிக்கைக்குத் தண்ணீர்மொண்டு வை, உன் அரண்களைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண் மிதி, சூளையைக் கெட்டிப்படுத்து."},{"Verseid":"33002014","Verse":"அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்."},{"Verseid":"33002015","Verse":"உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்த பச்சைக்கிளிகள் பரவிப் பறந்துபோகும்."},{"Verseid":"33002016","Verse":"உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும் உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோம்; பின்பு அவைகள் இருக்கும் இடமின்னதென்று தெரியாது."},{"Verseid":"33002017","Verse":"அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை."},{"Verseid":"33002018","Verse":"உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காரியம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?"}]}]}