கர்த்தர் நமக்காக யுத்தம்பண்ணுவார் நெகேமியா 4:20நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் 1. உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் பின்வாங்கிப்போவார்கள்யாத்திராகமம் 14:13-14மோசே: இன்றைக்குக் காண்கிற எகிப்தியரை இனி நீங்கள் என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.யாத்திராகமம் 15:1-21கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் யாத்திராகமம் 14:13-14மோசே: இன்றைக்குக் காண்கிற எகிப்தியரை இனி நீங்கள் என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.யாத்திராகமம் 15:1-21கர்த்தரே யுத்தத்தில் வல்லவர் 2. உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் தோற்றுப்போவார்கள்1சாமுவேல் 17:47தாவீது: கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர்  அல்ல... யுத்தம் கர்த்தருடையது;2நாளாகமம் 20:15யகாசியேல்: யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையதுஉபாகமம் 3:22தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்யோசுவா 10:14,42;யோசுவா 23:3,10;சங்கீதம் 24:8 3. உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் ஓடிப்போவார்கள்உபாகமம் 28:7உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.1சாமுவேல் 17:51தாவீதை கோலியாத்தை வெட்டிப்போட்டான்; தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலீஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள் 4.          உங்களோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப்போவார்கள்ஏசாயா 41:11இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலட்சை அடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற் போவார்கள். (இல்லாதொழிவர்)ஏசாயா 41:12உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப் பாய்; யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.