வேதாகம களஞ்சியம் – வழங்கும் –
Tamil Bible Study Android App
இந்த App ஒரு தமிழ் கிறிஸ்தவ App ஆகும். இதை உருவாக்குவதற்கான நோக்கம் அனைத்து தேவனுடைய பிள்ளைகளும் ஊழியக்காரர்கள் வேதாகமத்தில் உள்ள ரகசியங்களை, மறை பொருள்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
தேவனுடைய பாதத்தில் நான் கற்றுக்கொண்ட பாடங்களையும் அனேக பரிசுத்தவான்கள் எழுதின புத்தகத்தின் தொகுப்பையும் இந்த App ல் உங்களுக்காக எழுதி வருகிறேன்.
யாவரும் வேதாகமத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் இலவசமாக உங்களுக்காக தருகிறேன். இதிலுள்ள அனைத்து பதிவுகளையும் படித்து தேவனை மகிமைப் படுத்துங்கள். நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு முரண்பாடாக தோன்றுகிற கருத்துக்களையும் எனக்கு தெரிவிக்க மறவாதீர்கள்.
நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்து மிகுந்த பிரகாசத்தோடு உங்களுக்காக பதிவுகளை பதிவிடுகிறேன் எனவே படிக்கும்போது கவனத்தோடு படியுங்கள் தேவன் இன்றைக்கு எனக்கு ஒரு புதிய காரியத்தை கற்றுத்தர இருக்கிறார் என்கிற எண்ணத்தோடு படியுங்கள்.
வேதாகமத்தை குறித்த விளக்க உரைகள் வசனங்களுக்கான விளக்கங்கள் தமிழ் மொழியில் மிகவும் குறைவாகவே உள்ளது. இனிவரும் காலங்களில் ஆங்கிலத்துக்கு இணையாக தமிழ் மொழியிலும் வேதாகமத்தின் விளக்கவுரைகள் திரளாய் எழுதப்பட கர்த்தரிடத்தில் ஜெபியுங்கள்.