You are currently viewing ஓசன்னா HOSANNA அர்த்தம் என்ன?

ஓசன்னா HOSANNA அர்த்தம் என்ன?

ஓசன்னா HOSANNA

“ஓசன்னா” என்னும் கிரேக்க பெயருக்கு “(எங்களை) இரட்சியும்” “save (us)” என்று பொருள். hoosanna 5614

இயேசு கிறிஸ்து எருசலேமிற்கு பவனியாக வந்தபோது திரளான ஜனங்கள் ஓசன்னா என்று கூறி ஆர்ப்பரித்தார்கள் மத் 21.9.15 மாற் 11.9-10; யோவா 12:13) இந்த வார்த்தைக்கு தேவனுடைய உதவியை நாடுவது என்று பொருள். பிற்காலத்தில் இந்த வார்த்தை சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வார்த்தையாயிற்று.

யூதர்கள் ஓசன்னா என்று கூறும்போது ஓர் அரசியல் தலைவர் தங்களை இரட்சிப்பார் என்னும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவை பார்த்து பெரியோரும் சிறியோரும் ஒசன்னா என்று கூறியபோது அவர் தங்களை இரட்சிப்பார் என்னும் நம்பிக்கையை அறிவித்தார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்களை அரசியல் ரீதியாக இரட்சிக்க வரவில்லை. ஆவிக்குரிய ரீதியாக இரட்சிக்கவே வந்தார். யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் பெரிய குதிரைகளில் பவனி வருவார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ மிகவும் தாழ்மையான ஒரு கழுதையின் மீது ஏறி வந்தார்.

ஓசன்னா என்பது எபிரெயச்சொல், இதற்கு இரட்சியும், இப்பொழுது உதவி புரியும் என்று பொருள். கூடாரப்பண்டிகை ஏழுநாட்கள் அனுசரிக்கப்படும். அப்பொழுது அனுதினமும் ஒருமுறை “ஓசன்னா” என்று ஜனங்கள் கூறுவார்கள். பலிபீடத்தைச் சுற்றிலும் ஜனங்கள் மரக்கிளைகளைக் கைகளில் ஏந்திய பிரகாரமாக சுற்றி வந்து ‘ஓசன்னா” என்று கூறுவார்கள். இவ்வாறு ஏழு நாட்களுக்குத் தினமும் ஒருமுறை சுற்றிவருவார்கள். எட்டாவது நாளில் ஜனங்கள் ஏழு முறை பலிபீடத்தைச் சுற்றுவார்கள். அது “மஹா ஒசன்னா” என்று அழைக்கப்படுகிறது. இந்த வசனத்தில் ஜனங்கள் ஓசன்னா என்று ஒலமிடுகிறார்கள். தங்கள் விரோதிகளிடமிருந்து இயேசு கிறிஸ்து தங்களை இரட்சிப்பார் என்று எதிர்பார்த்து. ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா” என்று ஆர்ப்பரித்தார்கள். ஆனால் இதே ஜனங்கள் ஐந்து நாட்களுக்குப் பின்பு “இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்” என்று ஆர்ப்பரித்தார்கள்

Leave a Reply