இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 1

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு

1. இந்தியாவில் கிறிஸ்தவம் குறித்த மரபுச் செய்திகள்

கி.பி.1955 டிசம்பர் 18ஆம் நாள் தூய தோமா திருநாள் விழா புதுதில்லியில் * கொண்டாடப்பட்டது. அதில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் முனைவர் இராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறிந்திராத காலத்திலேயே தூய தோமா இந்தியாவிற்கு வந்தார் என்பதை நினைவில் கொள்க. எனவே நம் இந்திய கிறிஸ்தவத்தின் தொடக்கத்தை அவருடன் தொடர்புபடுத்தும் கிறிஸ்தவரின் வரலாறு நெடியதும், அதன் மூதூர் மரபு தொன்மையானதுமாகும். இது ஐரோப்பியக் கிறிஸ்தவர் பலரின் வரலாற்று மூதூர் மரபையும்விட தொன்மையானது. அவ்வாறு நிகழ்ந்தது நமக்கு உண்மையில் பெருமை தருவதாகும்” ‘ என்று கூறினார். எனவே இந்தியாவில் கிறிஸ்தவம் என்பது கிறிஸ்தவத்தைப் போன்றே பழமையானது. இந்தியாவினுள் கிறிஸ்தவம் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலிருந்து வரவில்லை என்றே கூறவேண்டும். இவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடுமா என்பதைப் பார்ப்போம்.

இந்தியச் சூழல்:

இந்தியா ஒரு துணைக் கண்டம். முப்புறங்களிலும் கடல் சூழ்ந்துள்ளது. வடபகுதியில் இமயமலைத்தொடர் உள்ளது. இமயமலை ஓர் இயற்கை அரணாகத் திகழ்ந்தாலும் சில கணவாய்கள் வெளி உலகுடன் தொடர்புகொள்வதற்கான வாயில்களாக அமைந்தன. போர். படையெடுப்பு. பொருளாதாரம் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு, இக்கணவாய்கள் வழியமைத்துள்ளன. பஞ்சாப் பகுதிக்குள்ளும், இந்தியாவின் பிற பகுதிகளுக்குள்ளும் பிற நாட்டினரின் வருகை இவற்றின் வழியே தான் நிகழ்ந்துள்ளன.

கி.மு.இரண்டாயிரத்திற்கும், ஆயிரத்து ஐநூறுக்கும்

(கி.மு.2000-1500) இடைப்பட்டக் காலத்தில் ஆரியரும், கி.மு. 6ஆம் நூற்றாண்டில் பாரசீகரும் வந்தனர். கி.மு.4ஆம் நூற்றாண்டில் கிரேக்கரும், கி.மு. இரண்டாம்,

முதலாம் நூற்றாண்டுகளில் சித்தியரும் (பாக்தீரியர், பார்த்தியர், சாகர்) வந்தனர். கி.பி. முதல் நூற்றாண்டில் குஷானரும். கி.பி.5ஆம் நூற்றாண்டில் ஹுனர்களும் வந்தனர். கி.பி. 12 முதல் 18 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இசுலாமியர்

வந்தனர். எனவே வட இந்தியாவின் வரலாற்றைப் படையெடுப்புகளின் வரலாறு எனலாம். இப்பகுதிக்கு வெளிநாட்டினர் வடமேற்குப் பகுதி வழியே வந்தனர்.

கி.மு.516 முதல் கி.பி.220 வரை வடமேற்கு இந்தியப் பகுதி வழியாகத் தொடர்ந்து உறவுகள் இருந்து வந்துள்ளன. இக்காலத்தில் சமய, பொருளாதார, கலாச்சார கொடுக்கல் வாங்கல் அதிகமாக நடந்துள்ளது.

கடல் வழி:

உரோம பேரரசன் அகஸ்துவின் காலத்தில் (கி.பி.5) வாழ்ந்த ஸ்டிராபோ எனும் வரலாற்றாசிரியர் உரோமைப் பேரரசுக்கும், இந்தியாவுக்கும் இடையே வணிகம் நடந்து வந்ததைக் குறிப்பிடுகின்றார். தென் இந்தியாவிலுள்ள கள்ளிக்கோட்டை / கோழிக்கோடு, கோயம்புத்துர் போன்ற சில பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி. முதல் நூற்றாண்டுக்குரிய உரோமை நாணயங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. பிளினி இயற்கை வரலாறு என்ற தம் நூலை கி.பி. 77இல் எழுதி முடித்தார். இந்நூல் சூயஸ் வளைகுடாவுக்கு வெளியே இருந்த மியாஸ் ஹோர்மாஸ் (Myos Hormos) என்ற துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குக் கடல் வழி உறவு இருந்ததைக் கூறு கிறது.இந்தியாவுடன் மிளகு வணிகம் நடைபெற்றதைக் குறிப்பிடும் பிளினி, “மிளகின் பயன்பாடு செல்வாக்குடையதாக இருப்பது வியப்பாக உள்ளது. ஒரு பொருளின் இனிமையோ அல்லது தோற்றமோ நம்மை ஈர்த்ததுண்டு. இவை இரண்டுமே மிளகுக்கு இல்லை. மிளகு காயாகவோ, கனியாகவோ நம் கருத்தைக் கவர்வதாக இல்லை. இதற்கு இருக்கும் ஒரே தன்மையான ஒரு வகை உறைப்புச் சுவையே இந்தியாவிலிருந்து அதனை ஏற்றுமதி செய்யவைத்துள்ளது” என்று எழுதுகிறார்.” கி.பி.54இல் கிரேக்க கப்பல் தலைவர் ஹிப்பாலஸ் (Hippalas) பருவக்காற்றின் பயனைக் கண்டறிந்து நேராக சிந்து நதியின் முகத்துவாரத்துக்குப் பயணம் செய் தார். இக்கண்டுபிடிப்பு அதற்கு முன் எப்போதும் இருந்திராத வகையில் வணிகத்திற் கான வாயிலைத் திறந்தது. எகிப்தின் பெர்னைசுக்கும், இந்தியத் துறைமுகங்களுக்கும் இடையே தொடர்ந்து கப்பல் போக்குவரத்து இருந்து வந்துள்ளது. அன்றைக்கு இருந்த தலையாய துறைமுகங்களாவன: நர்மதா ஆற்றின் வாய்ப்பகுதியில் இருந்த பேரிகாசா (பிரோசி), வட கொங்கன் பகுதியிலிருந்த கல்யாணா, இன்றைய மங்களூ ருக்கு அருகில் இருந்த திந்து, முசிறி (இன்றைய கிராங்கனூரி), பாண்டிய பேரரசின் தென் பகுதியிலமைந்த நெற்குன்றம், காவேரியின் முகத்தில் அமைந்த புகார் அல்லது காவிரிப்புகும்பட்டிணம் /காவிரிப்பூம்பட்டிணம். இது சோழப் பேரரசைச் சார்ந்தது. மிகவும் முக்கியமான முசிறி என்ற துறைமுகம் சேர நாட்டின் தென் கடற்கரையோரப் பகுதியில் அமைந்திருந்தது.”

உரோமையர் தவிர எகிப்தியர், அரபியர், சீரியர், பாரசீகர் ஆகியோரும் இந்தியா வுடன் வணிகம் மேற்கொண்டிருந்தனர். இது மதம், பண்பாடு, சமுதாயம் ஆகிய அனைத்து நிலைகளிலும், கொடுக்கல் வாங்கலில் பெருமளவு நிகழ வழிவகுத்தது. இந்தியாவின் மையப் பகுதியிலிருந்த உஜ்ஜயினியைக் கைப்பற்றிய சாகர்கள் பௌத்த சமயத்தைத் தழுவினர். இவர்களின் வழியே பௌத்தம் மத்திய ஆசியப் பகுதிகளுக்குப் பரவியது. இந்தியாவின் தென் பகுதியில் ஜைன சமயமும், இந்து சமயமும் தழைத்தன. கடல் வாணிபத்தில் ஓங்கியிருந்த சோழர்களே இந்தியச் சமயம். பண்பாடு, கலை ஆகியவை இந்தோனேசியா செல்லப் பெருங்காரணமாக இருந்தனர். சிற்பக்கலை, கட்டிடக்கலை, இலக்கியம் போன்றவற்றில் இவற்றின் தாக்கத்தை அதிகம் காணலாம். வானியல் துறையும் இந்தியாவிலிருந்தே அங்கு சென்றது. நாடுகளிடையே வணிகப் பரிமாற்றமும், பண்பாட்டுப் பரிமாற்றமும் தடையின்றி நிகழ்ந்தன. அக்காலத்து மக்கள் சமயத்தின் நோக்கில் திறந்த மனதுடன் வாழ்ந் தனர். கற்றுக்கொள்ளவும். கற்பிக்கவும் அதிக ஆர்வமுடையவராய்த் திகழ்ந்தனர்.

கிறிஸ்தவம் இந்தியாவினுள் அடியெடுத்து வைத்தபோது. இந்தியா இருந்த சூழலையே மேற்கூறப்பட்டவை முன் வைக்கின்றன.

தூய பர்த்தொலோமேயு மரபு:

இந்தியாவில் கிறிஸ்தவத்தின் தொடக்கத்தைக் கூறும் ஒரு மரபு தூய் பர்த்தொலோமேயு மரபு என்பதாகும். இது ஆதித்திருச்சபையின் மாபெரும் வரலாற்றாசிரியர் சிசேரியாவின் யூஃபியன் (6.பி.265-340) என்பவரின் மூலம் நமக்குத் தெரியவருகிறது. அலெக்சாந்தியோவில் இருந்த சமயக் கல்விக்கூடத்தின் தலைவர் பான்டேனஸ் (Pantanna) என்பவர், கிறிஸ்தவம் குறித்துக் கற்பிக்க ஏறத் தாழ4.3.190இல் இந்தியா சென்றார் எனவம். அங்கு, இயேசு கிறிஸ்துவின் சீட்ருள் ஒருவரான பர்த்நொலோமேயு விட்டுச் சென்றிருந்த எபிரெயத்தில் எழுதப்பட்டிருந்த மத்தேயு நற்செய்தி நூல் அவருக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், அங்கிருந்தோர் அதனை அவருக்கு வழங்க, அவர் அதனை அலெக்சாந்திரியாவுக்கு எடுத்துச் சென்ட் றார் எனவும் யூஃபியஸ் எழுதுகிறார். :)யூசுபியரின் இச்செய்தியை ஏற்கும் நூய ஜெரோம் (கி.பி.340-420), பான்டேன்சை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தவர் அலெக்சாந் திரியாவின் பேராயர் புமெட்ரியஸ் (Dametrius) என்ற கூடுதல் குறிப்பையும் தருகின்றார்.”

எனினும் இம்மரபுக்கு எவ்வித வலுவான ஆதரவும் இல்லை பரித்தொளோமேயுலோ, அவருக்குப் பின் பான்டேன்சோ இந்தியாவின் எந்தப் பகுதிக்கு நற்செய்தி அறிவிக்க வந்தளார்? எவ்வளவு காலம் தங்கியிருந்தனர்? எபிரெய மொழி பேசிய மக்கள் அக்காலத்தில் இந்தியாவில் இருந்தனரா போன்ற வினாக்களுக்கு யூகபியசின் குறிப்பினால் விடைதர இயலவில்லை. எனவே இம்மரபு கேள்விக்குரியதாகயே உள்ளது.

தூய தோமா மரபு

(அ)பொது மரபு

நொடக்க கால சிறிஸ்தவ சமுதாயம் தூய நோமா இந்தியாவில் நற்செய்தி அறிவித்தார் எனவும், அங்கு குருதி சான்றினராக மரித்தார் எனவும் நம்பியது. ஏறத்தாழ கி.பி. நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து தொடக்ககாஸ் கிறிஸ்தவ தந்தையர் எனப் போற்றப்பெறும் அறிஞர்களில் சிலர் தங்கள் நூல் களில் இந்தியாவில் தோமா நற்செய்திப் பணியாற்றினார் எனக் குறிப்பிடுகின் றனர். இக்குறிப்புகளின் இந்தியாவில் தோமா எங்கு பணியாற்றினார் எனவோ, எவ்விடத்தில் அவர் குருதி சான்றினராக இறந்தார் எனவோ கூறப்படாத காரணத்தினால், இதனைப் பொது மரபு என்றழைப்பர்.

(ஆ) பஞ்சாப் / வட இந்தியா / மேற்கத்திய மரபு :

(யூதர்) தோமாவின் பணிகள் (Acts of (Judas) Thomas) எனும் புறமறை நூல்,

ஏறத்தாழ மூண்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், எடேசா என்னுமிடத்தில், சரியாக் மொழியில் எழுதப்பெற்றது. இது, பார்த்தியா மன்ளன் குண்டபோரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் தூய தோமா ஆற்றிய பணிகளைக் குறிப்பிடு கிறது, அவ்வரசனின் ஆட்சியின் கீழ் பஞ்சாப் அல்லது வட இந்தியா இருந்தது. மடேசா நகரம் இந்தியாவிற்கு மேற்கே இருக்கின்ற காரணத்தினால். இது மேற்கத்திய மரபு/பாரம்பரியம் எனப்படுகிறது. தூய நோமா பணியாற்றிய இடம் பஞ்சாப் அல்லது டை இந்தியா என இந்நூல் குறிப்பிடுகின்ற காரணத்தினால் இது பஞ்சாப் அல்லது வட இந்திய மரபு எனவும் அறியப்படுகிறது.

மேற்கத்திய மரபின் உள்ளடக்கம்: நள்கு வழக்கில் இருந்த கடல் வணிக வழியைப் பின்பற்றி, முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தூய தோமா இந்தியா வந்தார். பார்த்தியாவிலும், இந்தியாவிலும் நற்செய்தியை அறிவித்தார். அரச குடும்பத்தினர் உள்ளிட்டப் பலரைக் கிறிஸ்தவராக்கினார்; இந்தியாவில் குருதி சான்றினராகிய அவரை அங்கேயே அடக்கம் செய்தனர்; பின்னர் அவரது எனும்புகள் எபேசாவிற்குக் கொண்டு போகப்பட்டு, அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டன; அவ்விடத்தைக் கிறிஸ்தவர்கள் உயரிய மதிப்பிற்கும், வணக்கத் திற்கும் உரியதாகக் கருதுகின்றனர்.”

(இ) மலபார் / இந்திய மரபு:

மலபார் மரபுக்கு மறு பெயர் இந்திய மரபு. இது தலைமுறை தலைமுறையாக வாய்மொழி மரபில் மலபார் கிறிஸ்தவர்களிடையே தூய தோமா குறித்து இருந்து வந்துள்ள மரபுச் செய்திகளைக் கொண்டது. இம்மரபுச் செய்தி குறிப்பிடத்தக்க அளவு கிறிஸ்தவரல்லாத மக்களிடையேயும் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

மலபார் மரபு அல்லது இந்திய மரபு என்னும் இம்மரபின்படி தோமா கடல் வழி வந்தார். கி.பி.52இல் கிராங்கனூரில் தரையிறங்கினார். கிராங்கனூர், பாலயூர், கொல்லம் என்னுமிடங்களிலும், வேறு சில இடங்களிலும் இருந்த உயர் சாதி இந்துக் குடும்பங்களைச் சமய மாற்றம் செய்தார்; அதன் பின் சோழ மண்டலக் கரையோரப் பகுதிக்குச் சென்று, அங்கும் மக்களைக் கிறிஸ்தவ நெறிக்கு மாற்றி னார். பின்பு சீனா சென்றார். நற்செய்தியை அறிவித்தார். இந்தியா திரும்பிய தோமா, தான் மலபாரில் கிறிஸ்தவராக்கிய உயர் சாதி, செல்வாக்கு மிக்க குடும் பங்களைச் சேர்ந்த சிலரை ஆயர்களாக/வழிகாட்டிகளாக நியமித்து, அங்கிருந்த கிறிஸ்தவர்களை ஒருங்கமைத்தார். அவர்களின் உதவியுடன் பொது வழிபடு மனைகளைக் கட்டினார். பின்னர் சோழ மண்டலப் பகுதிக்குச் சென்ற தோமா சின்ன மலைக்கு அருகில், தற்பொழுது தூய தோமா மலை/பரங்கிமலை என்னு மிடத்தில் குருதிச் சான்றினராக இறந்தார். அவரின் உடல் மைலாப்பூர் என்னும் நகருக்குக் கொண்டு வரப்பட்டு, அவர் கட்டியெழுப்பியிருந்த வழிபாட்டுத் தலத் தினுள் புதைத்தனர். இம்மரபின்படி மலபார் கிறிஸ்தவர் மட்டுமல்லாது, மேற்கு ஆசியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கிறிஸ்தவர்கள் புனிதப் பயணமாக மலபார் சென்று, தோமாவின் கல்லறைக்கு மரியாதை செலுத்தினர்.P

(ஈ) மைலாப்பூர் அல்லது சோழ மண்டல மரபு :

சில வரலாற்றாசிரியர் மைலாப்பூர் மரபை மலபார் அல்லது இந்திய மரபின் ஒரு பகுதியாகக் கருதாமல், தனித்த ஒன்றாகக் கருதுகின்றனர். மைலாப்பூர் சோழ மண்டலத்தினுள் உள்ளதால், இதனைச் சோழ மண்டல மரபு எனவும் அழைப்பர். போர்த்துக்கீசியர் இதனைத் தனி ஒரு மரபாகக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் தந்தனர். இம்மரபின்படி, மலபார் கரையோரப் பகுதியில் வெற்றிகரமான, கனி பல தந்த திருப்பணியாற்றிய தூய தோமா, கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு வந்து. அங்கு நற்செய்தியை அறிவித்தார். மலபாரைப் போன்றே இங்கும் உயர் சாதியினர் பலர் கிறிஸ்தவம் தழுவினர். தூய தோமாவின் வெற்றிகரமான பணியி னால் பொறாமையும், எரிச்சலும் அடைந்த அவரது எதிர்ப்பாளர்கள் அவரைக் கொலைசெய்ய பல முயற்சி செய்தனர். அவ்விதமான ஒரு முயற்சியின்போது, அவரது எதிர்ப்பாளர் அவரை விரட்டிச் சென்றனர். அதனால் அவர் சின்ன மலைப் பகுதியில் இருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தார்.” (சின்ன மலை என்னுமிடம் சென்னையிள்ள இந்நாளின் கிண்டி பகுதியில் உள்ளது.) அங்கு அவர் பிடிபட இருந்த வேளையில் குகையின் மேல் கூரையிலிருந்த சிறு துவாரத்தின் / இடைவெளியின் வழியாகத் தப்பி, பரங்கிமலை என தமிழில் அழைக்கப்படும். தூய தோமா மலையின் உச்சியில் தாம் கட்டியிருந்த வழிபடும் தலத்தில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்த கற்சிலுவை ஒன்றைத் தழுவி நிற்கையில், அவரைத் துரத்திக் கொண்டு வந்த எதிர்ப்பாளர் அவரை ஈட்டியினால் குத்திக் கொன்றனர். பின்னர் அவரது சீடர்கள் வந்து, குத்திக் கொல்லப்பட்ட அவரது உடலை எடுத்துச் சென்று, மைலாப்பூர் கடற்கரையில் அடக்கம் செய்தனர். அப்பகுதியே இன்று சான்தோம் என்றழைக்கப்படுகிறது.

பல்வகை மூலாதாரங்களும் சான்றுகளும் :

1. பொது மரபு :

1. எடேசாவில் ஏறத்தாழ கி.பி. 250 இல் எழுதப்பட்ட திருத்தூதுவரின் கோட் பாடுகள்” என்னும் நூல் யூதா தோமாவின் பணிக்களம் இந்தியா எனத் தெரிவிக்கிறது.

2. சீரியாவைச் சேர்ந்த தூய எப்பிராயீம் (இறப்பு கி.பி.373) பல பாமாலை களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்றான திருத்துவர் தூய தோமா மீதான என்னும் பாடலில் இந்தியாவில் நற்செய்திப் பணியாற்றிய தூய தோமா மரபு குறித்துக் குறிப்பிடுகிறார்.”

3. நான்காம் நூற்றண்டினரான நாசியான்சு தூய கிரிகோரி” என்பவர் தூய தோமாவை இந்தியாவுடன் இணைத்து எழுதியுள்ளார்.

4. மிலானின் தூய அம்புரோஸ்” (333 – 397) தோமாவை இந்தியாவுடன் தொடர்புபடுத்துகிறார். “கரடுமுரடான மலைகளால் சூழப்பட்டு, பிறருக்கு அடைபட்டிருந்த அரசுகளும் கூட அவர்களுக்கு (ஆண்டவராகிய இயேசு வின் சீடர்களுக்கு) சென்றடையக் கூடியவைகளாக இருந்தன, தோமா வுக்கு இந்தியா போன்றும், மத்தேயுவுக்கு பாரசீகம் போன்றும்..” என்று எழுதியுள்ளார். இந்தியாவிற்குச் சென்று வந்த பயணிகளின் குறிப்புகள் மூலமும், கிரேக்க, இலத்தீன் செவ்விலக்கியங்கள் வழியும் இந்தியாவைக் குறித்து அறிந்திருந்தார்.

5. டூர்ஸ் (Tours) நகர பேராயர் தூய கிரிகோரி (538 – 593) குருதிச் சான் றினர் மேன்மை குறித்து” என்னும் தம் நூலில் தூயதோமா இந்தியாவில் கொலையுண்டார்; அவரின் தூய உடல் அங்கிருந்து எடேசாவிற்குக் கொண்டுபோகப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது என்கிறார். “இந்தியாவில் அவர் உடல் முதலில் புதைக்கப்பட்டிருந்த இடத்தில், குறிப்பிடும்படியான அளவீடுகளுடன். துறவி மடத்துடன் இணைந்த ஒரு சிறிய வழிபடுமனை உள்ளது…. அங்குப் பயணியாகச் சென்று வந்த தியோடோர் இதனை எங்களுக்கு விவரித்துள்ளார்.”!” என எழுதியுள்ளார்.

6. ஆங்கிலோ – சாக்சன் தின வர்த்தமானம் என்னும் நூல் தூய தோமா, தூய பர்த்தொலோமேயு இந்தியாவில் ஆற்றிய அருள்பணிகள் குறித்த மரபினைக் குறிப்பிடுகிறது. “அதே ஆண்டில் (கி.பி.883) ஷெர்போர்னின் பேராயர் சிக்ஹெல்மும், ஏதெல்ஸ்டனும், அரசர் ஆல்பிரட் ஆணையிட்ட காணிக்கையுடன் உரோமைக்கும் போப்பு மாரினசு) இந்தியாவில் இருந்த தூய தோமாவிடமும், தூய பர்த்தொலோமேயுவிடமும் சென்றனர்” என்று தெரிவிக்கிறது.” மேன்மையான பேராயர் தம் குழுவினருடன் தூய தோமாவின் கல்லறைக்குச் சென்று வந்தனர். இந்தியாவிலிருந்து வாசனைப்பொருள்களுடனும், பிற பொருள்களுடனும் இங்கிலாந்து திரும்பினர் என அந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.”

2. மேற்கத்திய மரபு:

(அ) யூதா தோமாவின் பணிகள்:

இந்நூல் அரசன் கொண்டபோரஸ் ஆட்சி காலத்தில் பார்த்தியாவிலும், இந்தியாவிலும் தோமா பணியாற்றினார் எனக் கூறுவதுடன், கொலையுண்ட தோமாவின் உடல் இந்தியாவிலிருந்து, எடேசாவிற்குக் கொண்டு போகப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டது எனவும், சூலை திங்கள் மூன்றாம் நாள் தோமா குருதிச் சான்றினரான நினைவு நாளாக அங்கு வழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. எனவே மேற்கத்திய மரபிற்கு யூதா தோமாவின் பணிகள் நூல் மூலாதாரமாக உள்ளது.

3. இந்திய மரபு:

(அ) வருகை புரிந்தோர்:

1. நெஸ்தோரிய பேராயர் மார் சாலமோன் (கி.பி.1222). தேனீயின் நூல் (Book of the Bee) என்பதில் தூய தோமா மரபு குறித்து குறிப்பிடுகிறார். “தோமா யூதா இனத்தவர், எருசலேமைச் சார்ந்தவர். பாரசீகருக்கும். மேதியருக்கும். இந்தியருக்கும் கற்பித்தார். இந்தியர்களின் அரசனின் மகளுக்கு அவர் திருமுழுக்கு அளித்ததால் ஈட்டியால் குத்தப்பட்டார். கொலையுண்டார். ஹப்பான் என்ற வணிகர் அவர் உடலை எடுத்து வந்து, நம் ஆண்டவரின் ஆசிபெற்ற எடேசா நகரில் அடக்கம் செய்தார். வேறு சிலரோ இந்தியர்களின் ஒரு நகரமான மஹலூப் என்ற இடத்தில் அவரை அடக்கம் செய்ததாகக் கூறுவர்” என எழுதியுள்ளார்.0 தூய தோமா புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தின் பெயரை முதல் முறையாகக் குறிப்பிடுவது மார் சாலமோனே. எனவே அது கவனத்திற்குரியது.

2. இத்தாலி நாட்டின் வெனிசு (Venice) நகரத்திலிருந்து வந்த பயணி

மார்க்கோ போலோ ( Marco Polo) இந்தியாவிலுள்ள தூய தோமாவின் கல்லறைக்குத் தாம் சென்று வந்ததைக் குறித்துக் குறிப்பிடுகிறார் (கி.பி.1292) தூய தோமாவின் உடல் மலபார் பகுதியிலுள்ள ஒரு நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

3. மாண்டி கார்வினோ யோவான் (John of Monte Corvino) என்னும் பிரான்சிஸ்கன் துறவி சீனா செல்லும் வழியில் சில காலம் இந்தியாவில் தங்கி

இருந்தார். கி.பி.1305 சனவரி எட்டாம் நாள் பீக்கிங்கிலிருந்து எழுதிய மடலொன்றில் “திருத்தூதுவர் தூய தோமாவின் வழிபடுமனை” என்பதைக் குறிப்பிடுகிறார்.

4. போர்டினோனின் ஒடோரிக் (Odoric of Pordenone ) என்பவர் இந்தியாவில் தான்மேற்கொண்ட பயணக்குறிப்பை உத்தேசமாக கி.பி.1324 இல் எழுதி யுள்ளார். மிளகு விளையும் நாட்டில் கிறிஸ்தவர் இருக்கின்றனர் எனவும். அப்பகுதியை மினிபார் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் ஆசி பெற்ற திருத்தூதுவர் தோமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த மண்டலம் மோபார் · (Mobar ) எனத் தெரிவிக்கிறார்.

5. ஜான்டே மாரிக்னோலி (John de Marignoli) என்பவர் தூய தோமா கிறிஸ்த வர்கள் வாழ்ந்திருந்த ப் பகுதிகளில் பயணம் செய்த குறிப்பினைத் தருகிறார் (கி.பி.1349). தோமா கிறிஸ்தவர்கள் மிளகுத் தோட்ட உரிமை யாளர்கள் எனவும், அப்பகுதி அரசர் மானியமாக அளித்த பொது இரும்புப் பட்டறையின் உடமையாளர் எனவும் எழுதியுள்ளார். தூய தோமா கட்டிய வழிபடுமனை உள்ள இடம் மோஅபார் (Moabar) எனக் கூறுகிறார்.

6.கி.பி.1430 இல் நிக்கொலோ டே காண்டி (Nicolo de Conti) என்பவர் தோமா கல்லறையைச் சென்று பார்த்தார். அவருடைய பயணத்தைப் பற்றிய குறிப்பேட்டில் பின் வருமாறு எழுதப்பட்டுள்ளது: “பயணத்தைத் தொடர்ந்த நிக்கொலோ வணிக நகரம் ஒன்றிற்கு வந்தார். அதனை அவர் மாலேபூர் (Malepur ) எனக் குறிப்பிடுகிறார். இது வங்காள விரிகுடாவைத் தாண்டி இரண்டாவது வளைகுடாவில் உள்ளது. இங்கு தூய தோமாவின் உடலை மிகுந்த மதிப்புடன் ஒரு அகன்ற அழகான வழிபடுமனையினுள் புதைத்துள்ளனர். நெஸ்தோரியர் என்னும் எதிர் கோட்பாட்டினர் அக்கல் லறையை வழிபடுகின்றனர் / உயர் மதிப்பில் வைத்துள்ளனர். இக்கோட் பாட்டினர் ஆயிரமானோர் இந்நகரில் உள்ளனர்.

(ஆ) உள் நாட்டு / இந்திய மூலாதாரங்கள்:

இந்திய மரபு வாய் மொழி மரபாக இருந்து வந்தது. மலபார் கிறிஸ்தவர் உறுதியாக அதனைக் காத்து வந்தனர். இம்மரபு பற்றிய குறிப்புகள் சிலவற்றை. சில பாடல்கரின் காணலாம். அவையாவன: இரம்பான் தோமா பாட்டு, வீரடியான் பாட்டு, மார்கம் களிப்பாட்டு என்பவைகளே.

வீரடியான் பாட்டு என்பது வாய்மொழி / வாய்வழி பாடல். இது ஒரு குறிப்பிட்ட இந்து சாதி குடும்பத்தினர் வசம் உள்ளது. இப்பாடலை அக்குடும்பத்தைச் சேர்ந்தோர் தோமா கிறின்மதவர்களின் குறிப்பிட்ட சில சமுதாய, சமய நிகழ்ச்சிகளில் பாடி, அதற்காகத் தோமா கிறிஸ்தவர்களிடமிருந்து அன்பளிப்புகளையும் கொடைகளையும் பெறுவர்.

இரம்பான் தோமா டாட்டு வாய்மொழியில் இருந்தது. அது கி.பி.1501இல் தோமா இரம்பான் மலியகல் என்ற ஆயரினால் எழுத்து வடிவம் பெற்றது எனக் கருதப் படுகின்றது. இவர் நிராணம் என்ற இடத்தைச் சேர்ந்த மலியால் குடும்பத்தைச் சார்ந்த நாற்பத்தியெட்டாவது ஆயராவார். அக்குடும்பம் தூய தோமாவினால் சமய மாற்றம் பெற்ற குடும்பங்களில் ஒன்று. இப்பாடலுக்கும் யூதா தோமா பணிகள் என்னும் நூனுக்கும் ஒற்றுமைகள் உள்ளன =

மார்கம் களிப்பாட்டு டுமகிழ்ச்சி வழி பாடல் / Tha Song of tho Happy Way) என்பது கிறிஸ்தவ வழியையும், அதன் வழிபாட்டையும் மலபாரில் எவ்வாறு தோமா அறிமுகம் செய்வித்தார் என்பதைக் கூறுவதாகும். இப்பாடல் கி.பி.1792 இல் சேகரிக்கப்பட்டு, தொருக்கப்பட்டது.

பக்சுலோமட்டம், சங்கராபுரி, கள்ளி, களிக்காவு, கொய்க்கம், மாதேய்பூர், முட்டோடல், நெடும்பள்ளி, பனக்கமட்டம், கோதகளி என்னும் குடும்பங்களும், இன்னும் சிலவும் தூய தோமாவின் மூலம் மலபாரில் கிறிஸ்தவம் தழுவியவர்கள்,” கி.பி. முதலாம் நூற்றண்டில் தூய நோமாவிளால் தாம். கிறிஸ்தவராக்கப்பட்டதாக உறுதியாகக் கருதுகின்றனர்

தூய தோமா திருச்சபைகளை நிறுவியதாகக் கூறப்படும் ஏழு இடங்களாவன கிராங்கனூர், பலயூர், பாரூர், கொல்லம், கோக்கமங்கலம், நிரனம், சாயல் என்பவை. இவை சொக்கோத்தீரா தீவிலிருந்து வந்து குடியேறிய யூதர்களின் வணிகத்தளங்களாகும். எவவே வணிகரின் கூட்டத்துடன் தூய தோமாவும் அவ்விடங்களுக்குச் சென்றிருக்கலாம் எனவும், அத்தருணந்தைப் பயன்படுத்தி, ரிதறி இருந்த யூதர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் நற்செய்தியை அறிவித் திருக்கலாம் எனவும் நாம் யூசிக்கலாம்.

மைலாப்பூரில் உள்ள கல்லறையும். இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் தூய தோமா பணியாற்றினார் என்பதற்குச் சான்றாக சுட்டிக்காட்டப்படுகிறது.

மரபினை நிறுவுவதில் உள்ள சிக்கல்கள்:

தூய தோமா மரபின் உண்மைத் தன்மையை நிலைநிறுத்துவதில் சில சிக்கல் கள் உள்ளன. “ஐயமற இதனை நிறுவிட சம காலத்துப் பதிவுகள் எவையும் நம்மிடம் இல்லை… கி.பி. முதல் நூற்றாண்டையோ, இரண்டாம் நூற்றான்டையோ சேர்ந்த, இதைக் குறித்துக் கூறும் நூல்களோ அல்லது கல்வெட்டுகளோ அல்லது நினைவுச் விண்னங்களோ கிடைக்கப்பெறவில்லை. மூன்றாம் நூற்றாண்டு வரை பண்டைய கால கிறிர்பதவ எழுத்தர் இது பற்றிக் குறிப்பிடத்தொடங்களில்லை. அவ்விதம் எழுதி போரும் கூட ஐயம் நோய்ந்த செய்திகளைத்தாம் தந்தனரே தவிர முழுமையான செய்திகளைத் தந்தளரில்லை

தொடக்க கால திருச்சபை தந்தையர் வழி அறியலாகும் இந்தியாவுக்குப் புறத்தே இருந்து வரும் செய்திகள் இம்மரபினை நிறுவிடப் போதுமானவையாக இல்லை. ‘இந்தியா’ என்ற பெயரைப் பயன்படுத்துவதில் அவர்களின் எழுத்துக்களில் வேறுபாடுகள் உள்ளன.

இந்தியாவில் தூய தோமா நற்செய்தி அறிவித்த இடத்தின் பெயரைப் பதின் மூன்றாம் நூற்றாண்டு வரை எவரும் வெளிப்படுத்தவில்லை. பதின்மூன்றாம் நூற் றாண்டில் மார் (பேராயர்) சாலமோன் என்பவர் தான் முதன் முறையாக தூய தோமா புதைக்கப்பட்ட இடத்தின் பெயரை மகலூப் என்கிறார். 13ஆம். 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்குப் பயணியராகவோ, வருகைபுரிந்தவராகவோ வந்த ஐரோப்பியரில் சிலர், தாங்கள் தோமா கிறிஸ்தவரைக் கண்ட இடத்தைப் பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றனர். எனினும் அவ்விடம் மிளகு விளையும் இடம் என்று குறிப்பிட்டதில் ஒருமித்து உள்ளனர். மலபாருக்கு வெளியே மிளகு விளை வித்ததாகச் செய்தி இன்மையால், அன்னோர் குறிப்பிடுவது மலபார் என்னும் பகுதியையே எனத்துணியலாம்.

மயிலாப்பூரில் உள்ள கல்லறை தூய தோமாவினுடையது என்பர். கி.பி.1523இல் அதனைத் திறந்து பார்த்த போர்த்துக்கீசியர் அதில் செம்மண் நிறைந்த ஒரு பாத்திரம், தலையோட்டின் சில துண்டுகள், ஒரு சில எலும்புகள், இரும்பிலான ஈட்டியின் தலைப்பகுதி ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். அக்கல்லறை அமைந்திருந்த திசை, வழக்கமாக கிறிஸ்தவக் கல்லறைகள் இருக்கும் திசை அமைப்பில் இல்லை. (பொதுவாக, கிறிஸ்தவக் கல்லறைகள் மேற்கு – கிழக்காக அமைந்திருக்கும்). எனவே அக்கல்லறை தோமாவினுடையது தானா, அல்லது வேறு எவருடையதுவா என்ற வினா எழுப்பப்படுகின்றது. என்றாலும், அக்கல்லறையில் பயன்படுத்தி இருக்கும் செங்கற்களின் அளவு, புதுச்சேரிக்குத் தெற் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களின் அளவை ஒத்துள்ளது. இதனால் மயிலாப்பூர் கல்லறை முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் முன் பகுதியிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை அரிக்கமேடு உரோமையரின் ஒரு வணிக மையமாகத் திகழ்ந்தது. அது கி.பி.1945இல் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து எடுக்கப்பட்டுள்ள செங்கற் களில் தொன்மையானதின் (உத்தேசமாக கி.பி.50) அளவும், மயிலாப்பூர் கல்ல றையின் செங்கற்களின் அளவும் ஒத்ததாக உள்ளன.

கிறிஸ்தவ வரலாறு தொடங்கும் காலத்திற்கு முன்பிருந்தே யூதக்குடியேற்றம் கேரளத்தில் இருந்து வந்துள்ளது. இது தூய தோமா போன்றோர் அங்கு வந்து கிறிஸ் துவின் நற்செய்தியை அவர்களுக்கு அறிவிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி யிருக்கலாம் என்றுகொள்ள இடமளிக்கிறது. இதே அடிப்படையில் கேரளத்தில் யூத மக்கள் இருந்ததால் தூய பர்த்தொலோமேயு அம்மக்களிடையே எபிரெய மொழியில மைந்த மத்தேயு நற்செய்தி நூலை விட்டுச் சென்றிருக்க வாய்ப்புள்ளது எனலாம்.

தற்கால சென்னையின் ஒரு பகுதியான சைதாப்பேட்டையில் உள்ள சின்ன மலையில் ஒரு குகை உள்ளது. தூய தோமாவின் பகைவர் அவரை விரட்டிக் கொண்டு வந்தபோது இக்குகையினுள் தான் அவர் ஒளிந்திருந்தார் என்பர். ஆனால், இது மயிலாப்பூர் மரபினுள் பிற்சேர்க்கையாக அமைந்த ஒன்று என்பர். அக்குகையிலுள்ள பாறையில் ஓர் உள்ளங்கை தடம் / கால் பாதத்தடம் தென்படு கிறது. அது தூய தோமாவினுடையது எனக் கூறுபவர், அவர் அப்பகுதியின் சுற்றுப் பகுதியில் பணியாற்றியதற்கு ஆதாரமாகச் சுட்டுவர். என்றாலும் இதைக்குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

கிறது, அது தூய தோமாவினுடையது எனக் கூறுபவர், அவர் அப்பகுதியின் சுற்றுப்

பகுதியில் பாளியாற்றியதற்கு ஆதாரமாகச் சுட்டுவர். என்றாலும் இதைக்குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

சென்னை அருகிலுள்ள பரங்கிமலை / நூய தோமா மலையில் உள்ள வழிபடுமளையினுள் சிலுவை ஒன்று உள்ளது. இச்சினுவையைத்தான் தூய தோமா தம்மைக் கொல்ல தம் பகைவர் துரத்தி வந்தபோது தழுவி நின்றார் என்பர். அச்சிலுவையின் மையப்பகுதியில் காணப்படும் சிவப்பு நிறச்சுவடு தூய தோமாவின் குருதிக்கறை என்பர். ஆனால் குறிப்பிடப்படும் சிலுவை பாரசீக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒன்று. அச்சினுவையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துககள் பண் டைய பாரசீக பாலவி மொழியில் உள்ளன. அதைப் பாரசீக சிலுவை என்று கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். அதனைச் சோதித்த ஆய்வறிஞர் அது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிவித்துள்ளனர். மேலும், கி.பி. முதலாம் நூற்றாண்டில் சிலுவை வணக்கத்திற்குரியநாகக் கருதப்படவில்லை. எனவே பரங்கிமலை வழிபடுமனையில் உள்ள சிலுவையைத் தூய தோமாவின் பணியுன் தொடர்புபடுத்துவதில் சிக்கல் உள்ளது. இவ்விடத்தில் மற்றொன்றையும் கட்டிக்காட்ட ணம். மைலாப்பூர் மரபில் தூய தோமாவின் பணிக்கு ஆதரவாகக் கூறப்படும் மூன்று இடங்களான சின்ன மலை, பரங்கிமலை / தூய தோமா மலை, சாந்தோம் வழிபடு மனை ஆகியவை ரோமன் ஈந்தோலிக்க திருச்சபை வசம் உள்ளவை.

தூய தோமாவின் பணிகள் என்னும் நூல் கூறும் செய்திகள் உண்மைந்தன்மை உள்ளதா? “அது கூறும் செய்திகளுள் பல புனைவு என்பது வெள்ளிடைமலை அப்படியாயின் அது கூறுவது அனைத்துமே புனைவு என ஓதும் மவிடணமா அல்லது தூய தோமா இந்தியாவில் ஆற்றிய நற்செய்திப்பணி பற்றிய சில மெய்யான மரயை அடித்தளமாகக் கொண்டு அதின் ஆசிரியர் கவின்மிகு கதையை எழுதினார் எனலாமா?…எப்படியாயினும் குண்டபோரஸ் என்ற அரசன் ஒரு வரலாற்று மனிதரே. இவர் பெயர் பொறிக்கப்பெற்ற எண்ணற்ற நாணயங்கள் கி.பி.1834 முதல் பஞ்சாபிலும், ஆப்கானிஸ்தானிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அவைகளின் ஒரு பக்கத்தில் கிரேக்கத்திலும் மறுபுறத்தில் பாலவி மொழியிலும் அனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நாணய ஆய்வு நெறியின்படி இவற்றின் காலம் கி.பி.முதல் நூற்றாண்டின் முற்பகுதி என்று கணித்துள்ளனர், கிடைக்கப்பெற்ற நாணயங்களின் எண்ணிக்கை அம்மன்ரின் ஆட்சி காலம் மிக நெடியதாக இருந்ததைக் கூறுகிறது. அத்துடன் அவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு” ஒன்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள ஆண்டு ஈ.பி.46 என ஈணிக்கப்படுகிறது; அது அம்மன்னனின் இருபத்தாறாம் ஆட்சி ஆண்டு ஆகும், இன்னும் வேறு சில நா யங்களில் காத் (Gad) என்ற பெயரும் உள்ளது… இத்தகைய மரபு வெளிப்படை மெய்மைகள் தவிர வேறு பிற உண்மைகளைத் தரும் எனக் கருதுவது இடர் தரும்.. குண்டபோரஸ் அரான் வரலாற்று நபர் என்பதிலோ, அவர் தற்கால பஞ்சாப் உள்ளடக்கிய வட மேற்கு இந்தியப் பகுதியில் அரசாண்டார் என்பதிலோ எவ்ளித சந்தேகமுமில்லை. ஆனால் அவரது ஆட்சி காலத்தை உறுதி செய்யும் மூலாதாரங்கள் தூய தோமா குண்ட்போரஸ் மன்னன் ஆட்சி செய்த பகுதியிலோ அல்லது அவரது காலத்திலோ நற்செய்திப் பணி செய்தார் என்பதை உறுதி செய்வதற்கு உதவியாக இல்லை. எனயே தோமாவின் பணிகள் நூல் தெரிவிக்கும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்து சற்று சந்தேகம் இருக்கத்தான் வாய்கிறது.

கணிக்கக் கூடிய முடிவுகள்:

1. மரபு நிராகரிப்பு:

கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் சிலர் தோமா மரபினை முற்றிலும் மறுந்து, அவர் இந்தியாவுக்கு வந்ததே இல்லை என்பர். அத்தகையோருள் குறிப்பிடத்தக்கவர்; பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு வரலாற்றறிஞர் பாஸ்னேஜ் (Basnage) (சீர்திருத்தச் ச,ை தில்லிமாண்ட் (Tilemont) (ரோமன் கத்தோ விக்கர்), பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அறிஞர் வா குரோசே (La Crose) (சீர்திருத்தச் ச)ை, ஆங்கில சீர்திருத்தச் சபையின் ஜேம்ஸ் ஹாசிப் (James Hough), சர் ஜான் கேய் (Sir John Kaya) என்பவர்களே, இவர்களின் கருத்துப்படி கி.பி. முதல் நூற்றாண்டில் பாலஸ்தீனிய யூதர் ஒருவர் இந்தியா விற்குப் பயணம் செய்து வருவது எள்பது சாத்தியமில்லை, எனவே தூய தோமா இந்தியாவிற்கு வந்திருக்கமாட்டார் என்பதே.

2. வட இந்தியப் பணி ஏற்பு:

சிலர் தூய தோமா வட இந்தியாவிற்குச் சென்று பணி செய்திருப்பார் என்பதை ஏற்கத் தயாராக உள்ளனர். அத்தகையோர் அவரின் தென் இந்தியப் பணியை மறுக்கின்றனர். ஜி.மில்னே ரே (G.Milne Rae), அருள் தந்தை ஜே. டால்மான் (Fr.J.Dahlmann) இக்குழுவினைச் சேர்ந்தோர் ஆவர்.3* தோமாவின் பணிகள் நூலைத் தம் நிலைபாட்டிற்குச் சான்றாகக் கொள்வர்.

3. தென் இந்தியப் பணி ஏற்பு:

சிரியன் கிறிஸ்தவ எழுத்தாளர்களான இ.எம்.பிலிப்பு, (E.M.Philip) கே.என்.தானியேல் ( K. N. Daniel ) என்பவர்கள் தூய தோமாவின் தென்னிந்தியப் பணியை ஆதரிக் கின்றனர், வட இந்திய மரபை ஏற்க மறுக்கின்றனர். இன்னும் மலபாரில் வாழ்ந்து வரும் சிரியன் கிறிஸ்தவ சமுதாயத்தை உறுதியான சான்றாகக் காட்டுகின்றனர்.

4. இரு பயணங்களையும் ஆதரிப்போர்:

தூய தோமா வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் பணியாற்றினார் என சிலர் கருதுகின்றனர். “பேராயர் எ.இ.மெட்லிகாட் (Bp.A.E.Medlycott) இரு வெவ்வேறு பயணங்கள் நிகழ்ந்தன எனவும் அவைகளில் ஒன்று, பாலஸ்தீனா விலிருந்து நிலவழியாக மெசபொத்தோமியா, பாரசீகம் ஊடாக இன்றைய பாகிஸ்தானுக்கும். அதன்பின் பாலஸ்தினாவிற்குத் திரும்பிய பின், மற்றொரு பயணம் எகிப்து, எத்தியோப்பியா வழியாகச் சொக்கோத்திரா தீவிற்கும், அங் கிருந்து அரபிக்கடல் வழியாக மலபாருக்கும் பயணித்தார் எனக் கருதுகின்றார். ஜே. என். ஃபார்குஹார் இந்தியாவிற்குக் கிழக்கே உள்ள பகுதிக்கும் தூய தோமாவின் பணி விரிவடைந்திருந்தது எனக் கருதுகிறார். தூய தோமா கடல் வழியே பய ணித்து, சிந்து நதி வழியே முதலில் பஞ்சாப் சென்றார். குஷானரின் படையெடுப் பின் காரணமாக வெளியேற வேண்டியிருந்தது. இப்படையெடுப்பின்போது அங்கிருந்த கிறிஸ்தவர் அடியோடு துடைத்தெறியப்பட்டதால் அவர்களைக் குறித்த சுவடு ஒன்றேனும் இல்லை. தூய தோமா இந்தியாவைவிட்டு கடல் வழி சென்றார். சொக்கோத்திராவில் இறங்கி, சில காலம் தங்கியிருந்து, அங்கு சிலரைக் கிறிஸ்தவராக்கி, ஒரு திருச்சபையை நிறுவினார். பின்னர் கடல் வழி மீண்டும் இந்தியா வந்தவர், மலபாரில் இறங்கினார்; சில காலம் சென்ற பின் கிழக்கு கடற்கரையோரம் வந்தார். இந்தியாவையும் கடந்து வேறு நாடுகளுக்கும் தோமா சென்றார்; எனினும் சீனாவரை அல்ல, ஆனால் வங்காள விரிகுடா வழியாக பர்மா சென்றார்; அங்கிருந்து திரும்பிய பயணத்தின்போது மைலாப்பூர் வந்தடைந்தார், அங்குக் குருதி சான்றினரானார் என ஃபார்குஹார் கருதுகிறார். அருள் தந்தை ஹெராஸ் (Fr.Heras S.J. an Indologist) இதையொத்தக் கருத்தை யுடையவராக இருந்தாலும், தூய தோமா பஞ்சாபிலிருந்து சொக்கோத்திரா

செல்லும் முன் கல்யாண் சென்றார் என்றும், பர்மா செல்லவில்லை என்றும் கருத்து தெரிவிக்கிறார். 35 தூய தோமா பாகிஸ்தானுக்கும், தென் இந்தியாவிற்கும் வந்திருக்கக்கூடும் என்பது நடக்க இயலாத காரியமல்ல என சி.பி.பெர்த் கருதுகிறார்.

5. முடிவிற்கு வரஇயலாதக் கருத்துக்கள்:

எதையும் நிறைவான கருத்தாகக் கூறிட முடியாது என்போரும் உள்ளனர். எஃப்.இ.கேய் (F.E.Keay) என்பவர் “ தூய தோமா தென்னிந்தியா வந்தார் என் பதை உறுதிபட நிறுவிட இயலாது. வந்தாரா வரவில்லையா என்ற வினா பல நிலைகளில் விவாதிக்கப்படும். அதற்கு இறுதியான முடிவு கூறுவதற்குக் குறை வான வாய்ப்பே உள்ளது. அவர் வந்தார் என்பதற்கான உள்ளூர் மரபு வலுவான தாக உள்ளது. தென்னிந்தியாவில் கிறிஸ்தவ திருச்சபை உருவானதற்கான எதிர்மரபு இல்லை. மிகத் தொடக்க காலம் தொட்டே இந்தியாவிற்கு வெளியே மேற்கிலும், கிழக்கிலும் இம்மரபுக்கு ஆதரவு இருந்துள்ளது. திருத்தூதுவர் தொலை தூரமான இந்தியாவிற்குப் பயணமாக வந்து நற்செய்தியை அறிவித்தார் என்னும் மரபு நடக்க இயலாததல்ல. சொல்லப்பெறும் செய்தியைச் சான்றுக ளுடன் நிறுவ இயலவில்லை என்றாலும் அது நிகழ்ந்திருக்க முடியாது என்றும் சொல்ல இயலாது” என்கிறார்.36 எல்.டபிள்யூ.பிரவுன் (L.W.Brown), “தென் இந்தி யாவில் திருத்தூதுவர் பணியாற்றினார் என்பதை எவ்விதம் நிரூபிக்க இயலாதோ, அதேபோன்று அதை நிறுவிடவும் இயலாது. தொன்று தொட்டு இருந்து வரும் பழமையான கிறிஸ்தவ சமுதாயம் அம்மரபினை உறுதியாகப் பற்றிக் கொண் டிருப்பதும், நம் யுகத்தின் முதல் நூற்றாண்டிலிருந்து மேற்கத்திய உலகுக்கும், மலபாருக்கும் இடையே இருந்து வந்துள்ள வியாபாரத் தொடர்பிற்கான சான்று களும், அதே காலக்கட்டத்தில் அங்கிருந்த யூதக் குடியிருப்புகள் இருந்ததும், அம் மரபில் உண்மை உள்ளது என்பதை நம்புவதற்கான காரணங்களாக உள்ளன. நம்மிடம் உள்ள சான்றுகள் இதைவிட அதிகம் செய்துவிட முடியாது ” என எழுது கிறார்.” சுருங்கக்கூறின், எ ஃப்.இ.கேய் என்பவரும், எல்.டபிள்யூ.பிரவுன் என்ப வரும் கூறுவதென்னவெனில் தூய தோமா இந்தியாவிற்கு வந்திருக்கவும் முடியும். வராமலும் இருந்திருக்கலாம்; அது ஒரு முடிவிற்கு வர இயலாததாகவே இருக்கும்.

முடிவுரை:

எத்தகைய கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பினும், கொள்கைள் நிலவினும், உலகிலுள்ள வேறு எந்த நாட்டினரும் தூய தோமாவின் கல்லறை தம்மிடையே உள்ளது என்றோ, தூய தோமாவே தம் நாட்டில் கிறிஸ்தவத்தை நிறுவியவர் என்றோ உரிமை கோருவதில்லை. எனவே அந்த அடிப்படையில் இந்தியாவில் கிறிஸ்த வத்தை நிறுவியவர் தூய தோமாவே என முடிவெடுக்கலாம்.

Leave a Reply