You are currently viewing தனிமைக்கான வார்த்தைகள்

தனிமைக்கான வார்த்தைகள்

தனிமைக்கான வார்த்தைகள்

தனிமைக்கான வார்த்தைகள்

“அதோ உன் மகன்” (யோவான் 19:25-27) கல்வாரிக் காட்சியை நாம் காணுகையில், அங்கிருந்த எல் லோருமே இயேசுவை நிந்திக்கவில்லை என்பற்காக நாம் நன்றி செலுத்துகிறோம். அங்கிருந்த ஒரு சிலர் அவருக்காகக் கவலைப் பட்டனர். யோவான், “இயேசுவின் சிலுவையினருகே அவரு டைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார் கள்” (யோவான் 19:25) என்று குறிப்பிட்டார். வசனம் 26ல் அப்போஸ்தலனாகிய யோவானும் அங்கிருந்ததாகக் கூறப் படுகிறது. இயேசு தமது அடுத்த வார்த்தைகளை தமது தாய்க்கும், யோவானுக்கும் கூறுகிறார்:

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: “ஸ்திரீயே, அதோ உன் மகன்” என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: “அதோ, உன் தாய்” என்றார். அந்நேர முதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் (யோவான் 19:26-27),

இச்சம்பவத்திலிருந்து அநேக பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். முதலாவது இயேசு தமது தாயைப்பற்றி அக்கறை எடுத்துக்கொண்டார். “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியா மற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும் அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” (I தீமோ. 5:8), இயேசுவின் சகோதரர்கள் அந்நேரத்தில் அவிசுவாசி களாயிருந்ததால், அவர் தமது தாயை அவர்களின் பாரமரிப் பில் விடவிரும்பவில்லை. எனவே அவளைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர் யோவானிடம் ஒப்படைத்தார்.”

மேலும் இயேசு தமது தாயை நேசித்த போதிலும், அவளை வணங்கவில்லை. அவளை அவர் “பரலோகத்தின் அரசி” என்றோ “தேவ தாய்” என்றோ அழைக்கவில்லை. மாறாக அவர் அவளை “ஸ்திரீயே” என்று அழைத்தார். கிரேக்க மொழியில் இது ஒரு அவமரியாதையான வார்த்தையல்ல” ஆனால் ஒரு பாசமுள்ள வார்த்தையாகும். மரியாளுக்குப் பயன் படுத்தப் பட்ட இவ்வார்த்தை தெய்வீசுமானவைகளுக்கு அடுத்ததல்ல.

இவ்விதமாக, இயேசுவின் சொந்த வார்த்தைகள் மரியாள் வணக்கத்திற்குப் புறம்பானவைகளாகும். இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இன் னும் சற்று ஆழமாகக் கவனிப்போம். கல்வாரியின் மையக் காட்சி மரியாள் அல்லது யோவானைப்பற்றியதல்ல; மாறாக அது இயேசுவைப்பற்றியதாகும். இக்காட்சியை இயேசுவைக் கண்ணோக்கமாய்க்கொண்டு மறுபடி பார்ப்போம். அவர் தம்மைப்பற்றியல்ல, மரியாளைப்பற்றிக் கவலையாயிருந்தார். “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்” (லூக். 2:35) என்று சிமியோன், மரியாளிடம் கூறியிருந்தார். இந்தப் பட்டயம் மரியாள் தனது மகனைச் சிலுவையில் கண்ட போது தான் ஆழமாய் அவள் ஆத்துமாவை ஊடுருவிற்று. இயேசு இக்காட்சியிலிருந்து மரியாள் தப்பிக்கும்படி விரும்பினார். “அந்நேர முதல்’ அந்த சீஷன் அவளைத் தன் வீட்டில் ஏற்றுக் கொண்டான்” என்பதற்குச் சிலர், மரியாள் அப்பொழுது மயக்கமுற்றதாகவும், யோவான் அவளைத் தன் வீட்டிக்குச் சுமந்து சென்றதாகவும் பொருள் கொள்கின்றனர்.

இயேசுவின் வார்த்தைகள் மரியாளுக்கு உதவிசெய்தன,ஈ ஆனால் அவர்கள் அவரை எங்கு விட்டுச் சென்றனர்? தாயின் அன்பான அரவணைப்பின்றி அவரை அவர்கள் விட்டுச் சென்றனர். இயேசுவின் வார்த்தைகள் தனிமைக்குரியவைகளா யிருந்தன. மரியாள் அவரை விட்டுச் சென்ற சற்று நேரத்தில், இயேசுவின் பரலோக பிதாவாகிய தேவனும் அவரைக் கைவிட்ட சூழ்நிலை நிலவிற்று. பாவத்தின் வல்லமையைத் தோற்கச்செய்ய செய்த போராட்டத்தில் இயேசு தனிமைப் படுத்தப்பட்ட காட்சியைத்தான் அங்கு காண்கிறோம்.

தேவ பிரசன்னம் இல்லாமவிருக்கும் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், மனித அன்பின்றி இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. தனிமையா யிருப்பது என்ன என்பதை நானும் நீங்களும் அறிவோம். இயேசு தனிமையில் வெற்றி கண்டதுபோல, நாமும் தனிமையில் வெற்றிகாண அவர் நமக்கு உதவி செய்ய முடியும்.

 

This Post Has One Comment

  1. Ravichandran

    Jesus

Leave a Reply