You are currently viewing வேதாகம குடும்பம்: XII. வஸ்தி, எஸ்தர்

வேதாகம குடும்பம்: XII. வஸ்தி, எஸ்தர்

XII. வஸ்தி, எஸ்தர்

அகாஸ்வேரு என்ற அரசன் பெர்சியா (ஈரான்) தேசத்தை கி.மு.486-465 வருடங்களில் ஆட்சி செய் தான். இந்தியா முதல் எத்தியோப்பியா வரை 127 நாடுகளை அரசாண்டான். அவனுடைய பட்டத்து அரசியாக இருந்தவள் வஸ்தி. மிகமிக அழகானவள்.

ராஜா ஏழுநாட்கள் தன் பிரபுக்களுக்கும், பல் வேறு தேசங்களிலிருந்து வந்த சிற்றரசர்களுக்கும் விருந்து கொடுத்தான். கடைசி நாளில் தன் மனைவி யாகிய வஸ்தியை எல்லாருக்கும் காண்பித்து பெருமைப்பட விரும்பினான். ஆனால் வஸ்தியோ ஆ அரசனின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் முரண்டு பிடித்தாள். பெண்கள் முரட்டாட்டம் பண்ண ஆரம் பித்தாலே சண்டை ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம். பட்டத்து அரசி என்றால் அந்தரங்க அறையில் ஒளிந்திருக்க வேண்டிய சாதாரண மனைவியல்ல. அவசியமாகும்போது எல்லாருக்கும் காட்சியளிக்க வேண்டிய கடமையுள்ளவள்தான்.

வஸ்தியிடம் காணப்பட்ட தவறுகள்

பார்க்க அழகாயிருந்தாலும் புத்தி சரியில்லாத வளாக இருந்தாள். தன் புருஷனுக்கு கீழ்படியாத வளாக இருந்தாள். தன் கணவன் பேரரசன் என்று தெரிந்தும் அவனுக்கு தலைகுனிவை உண்டு பண்ணினாள். பெருமைக்காரி என்ற பெயரை சம்பாதித்து விட்டாள்.

இதனால் கிடைத்த தண்டனை என்ன? பட்டத்து அரசி என்ற உயர் அந்தஸ்தை இழந் தாள். இனி ராஜசமூகத்தில் வரக்கூடாது என்று கட்டளை பெற்றாள். புருஷனை மதியுங்கள் என்று தேசத்திற்கே சட்டம்வரக் காரணமானாள். பட்டத்து அரசியாக இன்னொரு பெண்ணை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

வஸ்தி ஆவி வேலை செய்யும் பெண்கள் இன்றும் உண்டு

கணவன் அன்போடு கேட்கும் காரியத்திற்கும் இணங்காமல் குஸ்திபோடும் வஸ்திகள் ஏராள முண்டு. நான் எவ்வளவு பெரிய அழகி என்று பெருமைப்பட்டு கெட்டுப்போகிற பெண்கள் உண்டு. புருஷனை அலட்சியப்படுத்தும் பெண்களாக இருக்கிறீர்களா? கணவனுக்குப் பயன்படாத உன் அழகால் உனக்கு என்ன பயன்?

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள் (எபே.5:22) என்று வேதம் கூறுகிறதே!

சில பெண்கள் கர்த்தருக்கே கீழ்ப்படிவதில்லை யே! புருஷனுக்குக் கீழ்ப்படிவார்களா? வஸ்தி ஆவி செயல்படும் பெண்களில் பலர் தன் கணவன் வேறு பெண்ணுடன் பழக ஆரம்பிப்பதைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். வஸ்தி பட்டத்து அரசியின் அந்தஸ்தை இழந்து சாதாரண அரன்மனை தோழி நிலைக்கு கீழே தள்ளப்பட்டாள்.

சகோதரி! நீ உன் கணவனை ராஜாபோல மதித் தால்தான் நீ ராணியாக திகழமுடியும். கணவனை வேலைக்காரனைப்போல நடத்தினால் நீயும் தானாகவே வேலைக்காரி நிலைக்குத் தள்ளப்படு வாய். உன் கணவனால் உனக்கு கிடைத்த அந்தஸ் தை இழந்துவிடாதே! கணவனுக்கு இணங்கிப் போகத் தீர்மானியுங்கள்.

எஸ்தர்

இவள் அந்நியநாட்டுப் பெண். யூத குலத்தைச் சேர்ந்தவள். அடிமைகளால் கொண்டுவரப்பட்ட யூத குடும்பத்தில் பிறந்தவள். ‘அத்சாள்’ என்பது அவளுடைய எபிரேயப் பெயர். ‘எஸ்டர்’ என்பது பெர்சியப் பெயர். ‘எஸ்தர்’ என்பது கிரேக்கப் பெயர். பழைய ஏற்பாட்டுப் புஸ்தகங்களில் இரண்டு மட்டும் பெண்களின் பெயர்களைத் தாங்கி நிற்பது பெருமைக்குரியது. 1) ரூத் புஸ்தகம் 2) எஸ்தர் புஸ்தகம்.

எஸ்தர் தாய் தகப்பனற்ற அனாதை. மொர் தெகாய் என்பவனின் சித்தப்பா மகள் எஸ்தர். தாய் தகப்பனை இழந்த தன் சித்தப்பா மகளை தன் மகளாக புத்திரசுவீகாரம் எடுத்துக்கொண் டான். எஸ்தர் ரூபவதியும் சௌந்தரியமுடைய வளுமாயிருந்தாள் (எஸ்தர் 2:7). அவளுடைய அழகு இரட்டிப்பாய் சொல்லப்பட்டுள்ளது.

தேவனுடைய திட்டத்தின்படி இவள் பட்டத்து அரசியாக தேர்வு செய்யப்பட்டாள். ராஜாவின் கண்களில் இவளுக்கு இரக்கம் கிடைத்தது. அரசன் விரும்பக்கூடிய பெண்ணாக இருந்தாள். பார்க்க அழகாக இருக்கும் அநேகர் குணத்தில் அசிங்க மாயிருப்பார்கள். எஸ்தர் நல்ல பண்புகள் உள்ள வளாக இருந்தாள்.

அரண்மனை விசாரிப்புக்காரன் யேகாயிடம் பணிவாய் நடந்துகொண்டாள்

இவளை அரண்மனையில் பராமரிக்க நியமிக் கப்பட்டிருந்த யேகாயிடம் இவள் பெருமையோடு நடந்துகொள்ளவில்லை. நல்ல பண்பான பெண் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டாள்.

மெர்தெகாயிடம் எப்போதும் பணிவுடன் நடந்துகொண்டாள்

தன்னை எடுத்து வளர்த்த தன் பெரியப்பா மகன் மொர்தெகாயிடம் எப்போதும் பணிவுடனும் கீழ்படிதலுடனும் நடந்துகொண்டாள். பட்டத்து அரசியானபின்பும், அரண்மனை வாழ்வு கிடைத்த பின்பும் தன் அண்ணனும், வளர்ப்புத் தகப்பனு மாகிய மொர்தெகாயிடம் மிக பண்புடன் நடந்து கொண்டாள்.

சில பெண்கள் வசதியான வாழ்வு கிடைத்த பின்பு பெற்றோரையும், சொந்தக்காரர்களையும், தனக்கு உதவி செய்தவர்களையும் மதிக்க மாட் டார்கள். எஸ்தர் அப்படியல்ல.

எதிரியை மடங்கடிக்க கணவனுக்கு விருந்து வைத்தாள்

ஆமான் என்ற பொல்லாதவன் தன் யூத மக்களை அழிக்க திட்டமிட்டுவிட்டான் என்று அறிந்தபோது எஸ்தர் அழுது ஓலமிடவில்லை. காரியத்தை கச்சிதமாக செய்தாள். தன் கணவனை விருந்துக்கு அழைத்தாள்.

விருந்தாளிகளுக்குத்தானே விருந்து என்று எண்ணும் சகோதரிகளே! காரியத்தைச் சாதிக்க கணவனுக்கு விருந்து வைத்து பழகுங்கள். அழுது, புலம்பி, அடம்பிடித்து காரியத்தைச் சாதிக்கும் பெண்கள் உண்டு. கணவனும் வேண்டா வெறுப்புடன் வேறு வழியில்லாமல் மனைவியைப் பிரியப் படுத்த சில காரியங்களை செய்வான்.

மனைவிகளே! கணவனுடைய விருப்பம் என்ன என்று உங்களுக்குத் தெரியும். அதைச் செய்து அவரைப் பிரியப்படுத்துங்கள். வெளியே போகும்போது மட்டும் அழகாக உடையணிந்து அலங்காரம் பண்ணிச் செல்கிறீர்களே! உங்களைத் தேடி வீட்டிற்கு வரும் கணவனுக்கு உங்கள் தோற் றத்தில் விருந்து கொடுங்கள். அவர் விரும்பும் உணவை நேர்த்தியாகச் செய்யுங்கள். அவர் எதிர்பார்க்கும் காரியத்தைச் செய்து விருந்து படையுங்கள். நீங்கள் விரும்பும் காரியத்தை எளிதாக செய்து முடிக்கலாம்.

விருந்து சாப்பிட்டு பூரிப்படைந்த அரசன் எஸ்தர் ராஜாத்தியே உன் வேண்டுதல் என்ன? என் ராஜ்யத்தில் பாதி கேட்டாலும் தருவேன் என்றான். எஸ்தர் இந்த ஆமானைக் கொஞ்சம் கவனியுங்கள் என்றாள். ஆமான் சரித்திரம் அதோடு முடிந்தது. காரியத்தைச் சாதிக்கத் தெரிந்த பெண் எஸ்தர்.

இப்படி நடக்கத் தெரியாத பெண்கள்தான் எப்போதும் தங்கள் காரியத்தைச் சாதிக்க கணவ னுடன் சண்டை போடுவார்கள். வாக்குவாதம் பண்ணுவார்கள். கணவனுடன் பல நாட்கள், பல வாரங்கள் பேச மாட்டார்கள். கணவன் பேச்சுக்கு இணங்கமாட்டார்கள். இவர் நம்ம புருஷன்தானே, இருபது வருடமாய் இவருடன்தானே வாழ்கிறேன், என்ன பெரிய உபசரணை இவருக்கு வேண்டிக் கிடக்கிறது என்று எண்ணாதிருங்கள்.

உங்கள் அன்பான பேச்சும், விருந்தும், புன் முறுவலும், பிறருக்கு மட்டும் என்று இராமல் உங்கள் கணவனுக்கும் பகிர்ந்து கொடுங்கள். மிக மகிழ்ச்சியான, ஆசீர்வாதமான குடும்ப வாழ்க்கை கிடைக்கும்.

வஸ்தி, எஸ்தரிடமிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்:

  • அழகாக இருப்பவர்களெல்லாம் நல்ல பண்புள் ளவர்கள் அல்ல என்பதற்கு வஸ்தி ஓர் எச்சரிப்பு.
  • கணவனை அலட்சியப்படுத்தியதால் அரசி என்ற மேன்மையை இழந்தாள்.
  • இனி அரசனின் சமூகத்தில் வரக்கூடாது என்ற கட்டளை பெற்றாள்.
  • பெண்கள் கணவன்மாரை மதிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவர காரணமானாள்.
  • ஏழ்மை நிலையிலிருந்த எஸ்தர் கர்த்தரால் அரசியாக உயர்த்தப்பட்டாள். 
  • அரண்மனை பணிவாக நடந்துகொண்டாள்.
  • தன் மக்களை மீட்க தன் உயிரையும் விட ஆயத்தமானாள் எஸ்தர்.
  • காரியத்தை சாதிக்க கணவனுக்கு விருந்து வனுக்கு வைத்தாள் எஸ்தர். 
  • எதிரிக்கும் விருந்து வைத்து காரியத்தை கச்சித மாக முடித்தாள்.
  • அரண்மனையிலிருந்தபோதும் தன் சொந்தக் மதித்து நடந்தாள்.

 

Leave a Reply