You are currently viewing வேதாகம குடும்பம் XVII. ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள்

வேதாகம குடும்பம் XVII. ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள்

வேதாகம குடும்பம் XVII. ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள்

ஆக்கில்லா யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பொந்து தேசத்தான் என்று அழைக்கப்படுகிறான் (1 கொரி.18:2). பொந்து என்பது அன்று சிறிய ஆசியா என்று அழைக்கப்பட்ட (தற்கால துருக்கி தேசத்திற்கு சமீபமான இடம்) தேசத்தின் வட பகுதி. இந்த வட்டாரத்தில் ஏராளமான யூதர்கள் வாசம் பண்ணினர். அப்போஸ்தலர் 2ம் அதிகாரத் தில் பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக எருசலே மில் கூடியிருந்த யூதர்களில் ஏராளமானோர் பொந்து தேசத்திலிருந்தும் வந்திருந்தார்கள் என்று அப்.2:9ல் பார்க்கின்றோம்.

‘ஆக்கில்லா’ என்றால் ‘கழுகு’ என்று பொருள். ‘பிரிஸ்கில்லாள்’ என்ற வார்த்தைக்கு ‘சற்று பழமை யானது’ என்று பொருள். கழுகு வேகமானது. அதிக கூர்மையான பார்வையுடையது. அப்படிப்பட்ட கணவனுக்கு சற்று பழமையானவள், வேகம் குறைந்தவள் மனைவியானாள். அதனாலென்ன? இவர்கள் இருவரும் மிக ஆசீர்வாதமான குடும்பம் நடத்தினர்.

யூதர்களெல்லாம் ரோம் நகரத்தைவிட்டு போக வேண்டுமென்று கிளாடியஸ் (கிலவுதியுராயன்) என்ற ரோம பேரரசன் கட்டளையிட்டான். ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் குடும்பம் பொந்து தேசத்திலிருந்து ரோமாபுரியில் குடியிருந்தனர். இவர்கள் இந்தக் கட்டளைப்படி இத்தாலி நாட்டைவிட்டு கிரேக்க நாட்டிற்கு வந்து அந்த நாட்டில் மிக சிறப்பான நகரமாக இருந்த கொரிந்துவிற்கு வந்து குடியே றினர். பவுல் இவர்களை சந்திக்க வாய்ப்புக் கிடைத் தது. அதுமட்டுமல்ல, அவர்களுடன் தங்கவும் ஏற்பாடாயிற்று.

அப்போஸ்தலனை உபசரித்த அன்பான குடும்பம்

ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் நாடுவிட்டு அந்நிய நாட்டிற்கு வந்தவர்கள். இந்த சூழ்நிலை யில் இன்னொரு நபரை வீட்டில் தங்கவைத்து பரா மரிப்பது பிரச்சனையானது என்று எண்ணாமல் அன்புடன் பவுலை தங்கள் வீட்டில் ஏற்றுக்கொண் டனர். இவர்கள் கூடாரம் பண்ணுகிற தொழிலா ளிகள். யூதச் சிறுவர்களுக்கு ஒரு கைத்தொழிலை கற்றுக்கொடுப்பது அக்கால வழக்கம். எவ்வளவு செல்வந்தர்களாக தங்கள் பிள்ளை களுக்கு ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொடுப்பது யூத வழக்கமாக இருந்தது. பவுல் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். உயரிய கல்வி கற்றவர். ஆனாலும் கூடாரம் பண்ணுகிற தொழி லைக் கற்றிருந்தார்.

ஒரு தொழில் செய்து அதன்மூலம் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடத்திக்கொண்டு ஊழியம் செய்வது தவறானதல்ல. பவுல் அவ்விதம் செய்து வந்தார்.

ஆக்கில்லாவும் அவன் மனைவியும் நற்செய்தி யைக் கேட்கவும் இயேசுவின் சீடர்களாக மாறவும் பவுல் அவர்கள் வீட்டில் தங்கினது உதவி செய்தது. கர்த்தருடைய ஊழியக்காரர்களை கனப்படுத்தும் குடும்பங்களை கர்த்தர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

உடன் ஊழியராக பணியாற்றின குடும்பம் பவுல் கொரிந்து பட்டணத்தைவிட்டு எபேசு பட்டணத்திற்குப் புறப்பட்டபோது ஆக்கில்லா குடும்பமும் அவனுடன் புறப்பட்டனர். இது ஆச்சரி யமானது. கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் இத்தாலி நாட்டைவிட்டு கிரேக்க நாட்டிற்கு வந்தி ருந்தனர். இப்போது சீரியா நாட்டிற்கு புறப்பட்டு விட்டனர். பவுலின் உடன் ஊழியர்களாக மாறினது மட்டுமல்ல, எந்த ஊருக்கும் போக ஆயத்தமாகி விட்டனர். ஆக்கில்லா குடும்பம் எபேசு பட்டணத் தில் வந்து தங்கி ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். பவுல் அவர்களைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

பிறரை ஆழ்ந்த ஆவிக்குரிய அனுபவத் திற்குள் வழிநடத்தின குடும்பம்

எபேசு பட்டணத்தில் அப்பொல்லோ என்ப வன் யூத ஜெப ஆலயத்தில் தேவசெய்தி கொடுத்த கூட்டத்தில் ஆக்கில்லா குடும்பம் கலந்துகொண் டது. அப்பொல்லோ திறமையானவன், வசனம் நன்கு தெரிந்தவன். ஓரளவு இயேசுகிறிஸ்துவின் சத்தியங்களை அறிந்தவன். தான் அறிந்த சத்தியங் களை தைரியமாக பிரசங்கித்தவன். ஆக்கில்லா குடும்பம் அவனுடன் நட்பு வைத்துக்கொண்டு ஆழமான கிறிஸ்தவ சத்தியங்களை அவனுக்குப் போதித்து அவனை ஒரு நல்ல ஊழியக்காரனாக உருவாக்கினர்.

இப்படிப்பட்ட குடும்பங்கள் சபைகளில் இருந் தால் எவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கும்? இதை வாசிக்கும் நீங்கள் ஊழியர்களை உருவாக்கும் குடும்பங்களாக மாற ஜெபிக்கிறேன். முதலாவது நீங்கள் நல்ல போதனை பெற்றவர்களாக இருக்க வேண்டும். பின்பு பிறரையும் ஆழமான சத்தியங் களுக்குள் வழிநடத்தும் மக்களாக இருங்கள்.

ஊழியரைக் காப்பாற்ற உயிரையும் கொ டுக்க ஆயத்தமாயிருந்தவர்கள்

கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட் களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்; அவர்கள் என் பிராணனுக்காக தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் (ரோமர் 16:3,4).

உங்கள் குடும்பத்தைப் பற்றிய சாட்சி என்ன? சில குடும்பங்கள் எப்போதும் சபைக்கும், ஊழிய ருக்கும் விரோதமாகப் பேசிக் கொண்டிருப்பார் கள். தாங்கள் மட்டுமே பரிசுத்தவான்கள்போலவும், சபையும், ஊழியரும், மற்றவர்களும் பரிசுத்தம் குறைந்தவர்கள்போலவும் பேசுவார்கள். ஊழியரி டத்தில் ஒரு சிறுகுறை கண்டாலும் ஊரைக்கூட்டி கேவலப்படுத்த அஞ்சமாட்டார்கள். ஆக்கில்லா குடும்பம் ஊழியரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரையும் கொடுக்க ஆயத்தமாயிருந்தார்கள்.

பல சபைகள் பாராட்டின குடும்பம் அவர்களைப் பற்றி நான் மாத்திரமல்ல புறஜாதி யாரில் உண்டான சபைகளெல்லாரும் நன்றியறி தலுள்ளவர்களாயிருக்கிறார்கள் (ரோமர் 16:4).

ஒரு ஊழியர் பிரசங்கத்தில் தவறுதலாகக் குறிப் பிட்ட ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு சபையையே இரண்டாகப் பிரித்துவிட்ட குடும்பம் ஒன்று எனக்குத் தெரியும். அவர்களை நான் இது வரை நேரில் கண்டு பேசினதில்லை. ஆனால் அவர்கள் செய்த செயல் ஊரிலுள்ள சபைகளெல் லாம் அறியக்கூடிய அளவில் பேசப்பட்டது.

இப்பொழுது அந்தக் குடும்பமே பிரிந்த சபை யாருக்கு போதக ஊழியம் செய்து வருகின்றனர். போதகருக்காக உயிரைக் கொடுக்கிற குடும்பங் களும் உண்டு; போதகர் உயிரை வாங்குகிற குடும் பங்களும் உண்டு. ஆக்கில்லா குடும்பம் அநேக சபைகளுக்கு உதவி செய்த ஆசீர்வாதக் குடும்பம்.

சபையை நடத்தும் அளவிற்கு உயர்த்தப் பட்ட குடும்பம்

அவர்கள் வீட்டில் ஒரு சபை நடந்து வந்தது என 1 கொரி.16:9 வசனத்தின்மூலம் அறிகிறோம். ஆதிநாட்களில் சபைகள் யாவும் வீடுகளிலேயே இயங்கிவந்தன. ஊழியருக்கும், பல சபைகளுக்கும் உதவியாயிருந்த குடும்பத்தைக் கர்த்தர் ஆசீர் வதித்து அவர்களை சபை மேய்ப்பர் நிலைக்கு உயர்த்தினார்.

சாட்சியில்லாத, எந்தப் போதகருக்கும் அடங் காத சிலர் தங்கள் வீடுகளில் ஆராதனைகள் நடத்து வதுண்டு. இவர்கள் ஆத்தும ஆதாயத்திற்காக சபை நடத்தவில்லை. தாங்கள் யாருக்கும் கீழ்ப்பட்டி ருக்க விரும்பாததாலும் தங்களுக்குப் பெயர் உண்டாக்குவதற்காகவும் சபை நடத்துவார்கள்.

ஆக்கில்லா குடும்பம் அப்படிப்பட்டதல்ல. அப்போஸ்தலராலும், ஊழியர்களாலும், சபையா ராலும் நற்சாட்சி பெற்று உயர்ந்தவர்கள் நீங்கள் என்ன வேலை செய்து வந்தாலும் சபைகளில்லாத கிராமங்களில், பட்டணங்களில் வீட்டுச் சபைகளை ஆரம்பிக்கக் கர்த்தர் உதவி செய்வாராக. குடும்பமாகச் சென்று ஊழியம் செய் யுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

பிரிஸ்கில்லாள் குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்ளும் காரியங்கள்: 

  • அந்நிய நாட்டிற்கு வந்தபோதிலும் தேவ ஊழியரை தங்கள் வீட்டில் ஏற்று பராமரித்த அன்பான குடும்பம்.
  • கூடாரம் செய்து விற்றுவந்த கடின உழைப் புள்ள குடும்பம்.
  • யூதராயிருந்த போதிலும் பவுல்மூலம் சத்தி யத்தை அறிந்து அதை ஏற்றுக்கொண்டனர்.
  • பவுலுடன் எபேசு படடணத்திற்கு உடன் ஊழியராகப் புறப்பட்ட குடும்பம்.
  • அப்பொல்லோ என்ற ஆர்வமுள்ள வாலிபனை அழைத்துச்சென்று பூரண சத்தியத்திற்குள் வழி நடத்தினர். 
  • ஊழியர்களை உருவாக்கின குடும்பம்.
  • ஊழியருக்காக தங்கள் உயிரையும் கொடுக்க முன்வந்த தியாகிகள்.
  • அப்போஸ்தலரால் பாராட்டப்பட்ட குடும்பம்.
  • புறஜாதியார் மத்தியில் உண்டான சபையார் யாவரும் இவர்கள் நற்செயல்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
  • இவர்களைப் பற்றி குறிப்பிட்ட எல்லா இடங் களிலும் இருவரின் பெயரும் தவறாமல் குறிப் பிடப்பட்டுள்ளது மிக பாராட்டுதலுக்குரியது.
  •  தங்கள் வீட்டில் சபையை நடத்தி வளரச் செய்த சாட்சியுள்ள குடும்பம்.

Leave a Reply