You are currently viewing வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 6. அரசாங்கம் 

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 6. அரசாங்கம் 

வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 6. அரசாங்கம் 

படையும் போர்வீரர்களும்

நமது தேவன் சேனைகளின் தேவனாக இருக்கிறார் (ஆதி.32:2). அவர் கர்த்தருடைய சேனையின் அதிபதியாகவும் திகழ்கிறார் (யோசுவா 5:14). தேவன்தாமே அதிபதியாக விளங்கி, எகிப்தினின்று விடுதலை பெற்றுவந்த தமது மக்களை வனாந்திரப் பயணத்தில் வழிநடத்தினார். அந்நாட்களில் மோசேயும், பின்னர் யோசுவாவும் தேவனுடைய மக்களை சேனைகளின் அதிபதியாகிய கர்த்தருக்குக் கீழாக வழிநடத்தினர்.

நியாயாதிபதிகளின் நாட்களில் இஸ்ரவேல் படை அமைக்கப் பட்டது. வேற்றின மக்களோடு போரிடுவதற்கென்றும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் இஸ்ரவேலில் படைவீரர்கள் ஒன்று திரட்டப்பட் டனர். அரசர்களின் காலத்தில் போர்ப்படையானது கூடுதல் வலுவாக் கப்பட்டது. இஸ்ரவேலின் முதல் அரசனாகிய சவுலின் காலத்தில் அந்நாட்டில் 3000 வீரர்கள் கொண்ட படை இருந்தது (1 சாமு. 13:22).

தாவீது அரசனின் காலத்தில் இஸ்ரவேல் சேனை விரிவாக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. அவனுடைய சேனையில் பலர் வீர தீரச் செயல் களைச் செய்தவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் திகழ்ந் தனர். அவன் பெலிஸ்தரோடு போரிட்டு தனது நாட்டை விரிவு படுத்தினான்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் நாட்டில் ரோமப் போர் வீரர்களே இருந்தனர். அந்தப் போர்வீரர்கள் தகுந்த பயிற்சி பெற்றவர் களும், பலம் வாய்ந்தவர்களும், துணிவுமிக்கவர்களும், கொடூரம் நிறைந்தவர்களுமாயிருந்தனர். ரோமப் பேரரசர்கள் இப்படிப்பட்ட போர் வீரர்களைக் கொண்டே நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டினர். நூற்றுக்கு அதிபதி என்று அழைக்கப்பட்ட தலை வனுக்குக் கீழாக நூறு படைவீரர்கள் பணியாற்றினர். நூற்றுக்கு அதிபதியின் கட்டளைகளுக்கு, அவன்கீழ் பணிபுரியும் வீரர்கள் அனை வரும் முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ் துவை அவமானப்படுத்தி இழிவுபடுத்தியவர்களும் இவர்களே.

இரண்டாண்டுக் காலம் ரோமாபுரியிலே அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தார். ரோமப்போர் வீரர்கள் இருவர் தொடர்ந்து பவுலைக் காவல் காத்தனர். அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட நேரக்கணக்கின்படி மாறிமாறி அலுவல் புரிந்தனர். பவுலின் சிறையிருப்புகள் பல ரோமப் போர்வீரர்களின் மறுபிறப்பிற்கு வகைசெய்தது என்று எண்ண ஏதுவுண்டு (பிலி.1:12,13).

ரோமப் போர்வீரர்கள் அணிந்திருந்த படைக்கலன்கள் பவுலின் சிந்தைக்கு ஆவிக்குரிய பொருள் கொண்டதாக விளங்கின. “சத்தியம் v< D « கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென் னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும், சமாதானத்தின் சுவிசேஷத் திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்த வர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில் லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமா கிய ஆவியின் பட்டயத்தையும் எடுத் துக் கொள்ளுங்கள்” (எபே. 6:14-17).

மேற்கூறியவற்றில் தேவ வசன மாகிய ஆவியின் பட்டயம் ஒன்று மட் டுமே எதிரியைத் தாக்க வல்லதா யிருக்கிறது. மற்றவை யாவும் நம் மைப் பாதுகாக்கும் படைக்கலன் களாக விளங்குகின்றன. தேவ வசன மாகிய ஆவியின் பட்டயத்தை நாம் வல்ல ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். பொல்லாங்கனாகிய சாத்தானை முறியடிக்க இந்தப் படைக்கலன் மிகவும் இன்றியமையாதது. வனாந்திரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாத்தானால் பரீட்சிக்கப்பட்ட வேளையில் இவ்வாயு தத்தைக் கொண்டே அவனை முறியடித்தார். ஜெபம் என்னும் இன்னு மொரு ஆற்றல்மிக்க படைக்கலனை விசுவாசி உடையவனாக இருக் கிறான். முடங்கால்களை முடக்கி, தேவனிடம் ஏறெடுக்கப்படும் மன் றாட்டு விசுவாச வரலாற்றில் மாபெரும் வெற்றிகளைத் தேடித்தந்துள் ளது (எபே. 6:18). ஆவிக்குரிய யுத்தத்தில் தீய ஆவிகளோடு போரிட, சிலுவையின் போர்வீரர்களாகிய நாம் சர்வாயுதவர்க்கத்தை அணிந் திருப்பது இன்றியமையாதது அல்லவா?

Leave a Reply