2 . ஜெபத்தின் வளர்ச்சி

 


2 . ஜெபத்தின் வளர்ச்சி 

1. பாவியின் ஜெபம்

    ‘பாவிகளுக்குத் தேவன் செவி கொடுக்கிறதில்லை’ என்று யோவா. 9:31-ல் பார்க்கிறோம். ஒருவன் பாவத்தில் நிலைத்திருந்து அதற்காக மனஸ்தாபமற்று வனாக இருந்தால் அவன் ஜெபத்தைத் தேவன் அங்கி கரிப்பதில்லை. கிரியைகளினால் பாவம் செய்து பாவி களாயிருப்பது மாத்திரமல்ல, அக்கிரமச் சிந்தையுள்ள வர்களாயிருந்தால் தேவன் அவர்கள் ஜெபத்தைக் கேளார் (சங். 66:18). சிலர் இருதயத்தில் ஒருவருக் கொருவர் கசப்பு, பகை முதலியவைகளைச் சேகரித்து வைக்கிறார்கள். சிலர் அசுத்த எண்ணங்களால் கிறைக். திருக்கிறார்கள். இவர்களுக்கும் தேவன் செவி கொடார். வேறு சிலர் தேவ வசனங்களைக் கேட்கக்கூட மனமற்றவர்களும், அவைகளுக்குக் கீழ்ப்படியமாட்டோம் என்கிறவர்களுமாயிருக்கிறார்கள். இவர்களுக்கும் கர்த்தர் செவி கொடுப்பதில்லை. (நீதி. 28:9: சகரி. 7: 12-13) அன்றியும் மாயக்காரன் எவ்வளவாக விருத்தியடைந்தாலும், தேவன் அவன் கூப்பிடுதலைக் கேளார். (யோபு 27:8-9) இவ்விதமாகப் பாவங்களி லும் அக்கிரமங்களிலும் நிலைத்திருக்கிறவர்களுக்குக் கர்த்தர் செவி கொடாது தமது முகத்தை மறைக்கிறார். (ஏசா. 58:1-2) அவர்கள் ஜெபத்தைக் கர்த்தர் கேளா மல் இருப்பதுமன்றி, அது அவர் பார்வையில் அரு வருப்பாகவும் பாவமாகவும் இருக்கிறது. (சங். 109:7, நீதி, 28:9) அப்படியானால் பாவிகள் எவ்விதம் இரட்சிக்கப்படக்கூடும் என்று ஒருவர் கேட்கலாம். அதற்காகப் பின்வரும் மூன்றாவது ஜெபத்தைக் கவனிப் பருடன், பாவங்களை அறிக்கை செய்து அவற்றை விட்டுவிட வேண்டும். {II நாளா. 7:14. நீதி. 28:13.)

    2. பரிசேயனுடைய ஜெபம்

    தேவன் பரிசேயனுடைய ஜெபத்தைக் கேட்க வில்லை என்று லூக். 18:11-14-ல் காண்கிறோம். இவன் முன்பு பார்த்ததுபோல் பாவத்தில் நிலைத்திருக்கிறவ னல்ல. அநியாயம், விபசாரம் முதலிய பாவங் களைச் செய்யாதிருந்தது மாத்திரமல்ல, இக்காலத்தில் அநேக தேவனுடைய பிள்ளைகளிடம் காணப்படாத, வாரத்தில் இரண்டுதடவை உபவாசித்தல், சம்பாத்தி யத்திலெல்லாம் தசமபாகம் செலுத்துதலாகிய நற் குணங்களுடையவனாக இருந்தான். ஆயினும் இவன் ஜெபம் கேட்கப்படவில்லை. காரணமென்ன ? இவன் தன் ஜீவியத்திலுள்ள நீதிகளை நம்பி, மற்றவனை அற்பமாக எண்ணித் (லூக். 18:9) தசமபாகம் கொடுப்பதால் தன்னை உயர்த்தி, கர்த்தர் தன் ஜெபத்திற்குப் பதில் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். ஒரு மனுஷன் இருண்ட அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சந்தோஷப்படலாம். ஆனால் அம் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தைச் சூரிய வெளிச்சத் தில் கொண்டுவந்தால், அது வெளிச்சமென எண்ணப் படமாட்டாது. இவ்விதமாகவே மனுஷனுடைய நீதி, நீதியின் சூரியனாகிய இயேசுவுக்கு முன்பாக இருக்கி றது. ஆனால் பரிசேயன் இதை அறியாதிருந்தான். ஆகவே தன் நீதிகளையும், கிரியைகளையும் நம்பி, சுய நீதியுடன் ஜெபிக்கும் ஜெபத்தைத் தேவன் கேட்ட தில்லை என்பதை இதனால் அறிகிறோம்.

    இக்காலத்திலும் சில தேவனுடைய பிள்ளைகள் இவ்வித சுயநீதியுடன் ஜெபித்து, ஜெபத்திற்குப் பதில் கிடையாதபடியால் சோர்ந்து போகிறார்கள். உம்முடைய சோர்புந்கு இது காரணமோ, என்று ஆராய்ந்து தானி. 9:18-ல் காண்பதுபோல “நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங் களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு மூன்பாகச் செலுத்துகிறோம்” என்று தாழ்மை யடைந்து, வீராக. அவர் இரக்கங்களுக்காகக் கெஞ்சு

    3. ஆயக்காரனுடைய ஜெபம். லூக். 18:13, 14

    இவன் ஓர் கொடும்பாவி. ஆனால் தேவ சன்னி தானத்தைக் குறித்த பயமிருந்தபடியால் தேவாலயத் தின் பக்கம்வராது “தூரத்திலே நின்றான்”. தன் பாவங்களைக் குறித்த உணர்வு இருந்தபடியால், தன்னைத் தாழ்த்தி “தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக் சுத் துணியாமல்; தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே ! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்றான். இவன் கொடும்பாவியாக இருந்தபோதிலும் தன்னைத் தாழ்த்தினபடியால் தேவன் அவன் ஜெபத்தைக்கேட்டு, பாவியாக வந்த அவன், “நீதி மானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் Churras உதவி செய்தார். ஆ! தேவன் எவ்வளவு நல்லவரும் சமீபமானவருமாக இருக்கிறார் !

    இவ்விதமாய்த் தேவனைச் சமீபமாய்ப் பெற்றனுப விக்க வேண்டுமாயின் சங். 34:18-ல் காண்கிறபடி, நொறுங்குண்ட இருதயம் தேவை. எவ்விதக்கொடும் பாவியாயிருந்தாலும் தன்னைத் தாழ்த்தி, தேவபயத் தோடும், நொறுங்குண்ட இருதயத்தோடும் கர்த்தரை நோக்கி ஜெபித்தால் தேவன் ஜெபத்திற்குப்பதில் கொடுக்கிறார். இதைக் குறித்துத்தான் தாவீது, சங். 145:18-ல் “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி கூப்பிடு கிற யாவருக்கும் கர்த்தர் சம்பமாய் இருக்கிறார்” என்கி றார். யோசியா ராஜா, தன் இருதயம் இளகி தன்னைத் தாழ்த்தி…… விண்ணப்பம் பண்ணினபடியால் கர்த்தர் அதைக்கேட்டு “$ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேருவாய்” என்று அவனை ஆறுதல்படுத்தினார். ஆகவே நம்முடைய ஜெபம் கேட்கப்படும் பொருட்டாக, நமது பாவங்களை ஒப்புக்கொண்டு தாழ்மையோடும் நொறுங்குண்ட இருதயத்தோடும் ஜெபித்தல் தேவை.

    மேற் கூறியவாறு நாம் ஜெபித்து, ஜெபங்களுக் குப் பதில் கிடைக்க ஆரம்பித்தபின்பு, நம் ஜெபஜீவியத்தில் பலவித வளர்ச்சியை அனுபளித்துக் கிறிஸ்துவின் ஜெபமாகிய ஜெபத்தின் அனுபவத்திற்கு வந்து சேரவேண்டும். பின்வரும் சிலருடைய ஜெபங்களிலிருக்கும் குறைகள் படிப்படி ஜெபத்தைக் காணலாம்.

    4. விதவையின் ஜெபம்

    லூக். 18:1-7 வரை வாசிக்கும்போது, சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணும் பொருட்டு இயேசு ஒரு உவமையைச் சொன்னதைக் காண லாம். இவ்வுவமையின் முற்பகுதியில் ஜெபம் கேட்கப் படாதிருந்ததாகவும், பின்பு கேட்கப்பட்டதாகவும் அறிகிறோம். நம் ஜெப ஜீவியங்களிலும் அடிக்கடி ஜெபத்திற்கு உடன் பதில் வராமல் இருப்பதைக்கண்டு சோர்ந்துபோகிறோம். ஆனால் இங்கே சோர்ந்துபோகா மல் எப்பொழுதும் ஜெபித்தபடியால் பதில் கிடைத்த நாக 5-ம் வசனத்தில் வாசிக்கிறோம். இவ்விதம் ஜெபிக்க, இயேசு சொன்ன உவமையில் ஒரு மனுஷன் இருந்தான் என்றே அல்லது ஒரு ஸ்திரி இருந்தாள் என்றே சொல்லாமல், ‘ஒரு விதளவ இருந்தாள்’ என்று இயேசு சொன்னது குறிப்பிடத்தக்கதாகும்.

    சாதாரணமாய் ஸ்திரீ பலவீனமான பாண்டமாகை யால் விவாகத்துக்குமுன் பெற்றோரிடத்திலும், விவா கத்துக்குப்பின்பு புருஷனிடத்திலும் சார்ந்திருக்கிறாள். விதவையாகும்போது இவ்விரண்டு சார்பிடமுமில்லாமல் தனிமையாக்கப்படுகிறபடியால் கர்த்தர்மேல் சார்ந்து, சோர்ந்து போகாமல் ஜெபிக்கக் கூடியவளாகிறாள். (I தீமோ . 5:5) ஆகையால்தான் கர்த்தர் இங்கு, ஒரு விதவை இருந்தாள் என்று சொன்னார். இவ்விஷயத் தைப் பின்பு கவனிப்போம். ஆகவே தேவன் நம்முடைய சார்பிடங்களாகிய மனுஷருதவி, பணம், பெலன், சுகம், கனம் முதலியவற்றை நீக்குவது நம்மேல் அன்பற்றபடியினாலல்ல, நாம் ஜெப ஜீவியத் தில் வளரும் பொருட்டாகவே. தேவன் இவ்விதப் பாதையில் நடத்துவாராயின், சோர்ந்துபோகாமல் அதைப் பாக்கியமென்றெண்ணி இந்த விதவையைப் போல் எப்பொழுதும் தொந்தரவு செய்து, அவளர அலட்டி ஜெபத்துக்குப் பதிலைப் பெற்றுக் கொள்ளுங் கள்.

    சாதாரணமாக விதவைகள் தங்கள் துக்கம், நிந்தை முதலியவற்றால் ஜெபத்தில் தங்களுக்காக மாத் திரம் ஜெபிப்பது இயல்பு. இதைக் கர்த்தர் உவமை யாய்ச் சொன்ன விதவையின் ஜீவியத்தில் காண்பது மன்றி 11 இரா.4:1-7 வரை உள்ள விதவையின் ஜீவி யத்திலும் காண்கிறேம். இதை நாம் குற்றமாக எண்ண முடியாது. ஆனால் ஜெபத்தின் வளர்ச்சியைக் குறித்துப் படிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகள் தங்கள் ஜீ வியத்தின் வளர்ச்சிக்குத் தக்கதாக மற்றவர்களுக்காக ஜெபிக்கிறார்கள்.

    திமோ. 2:2, எபே. 6:18. போன்ற பல வசனங் களையும் கவனிக்கும்போது, நாம் மற்றவர்களுக்காக ஜெபம் பண்ணக் கடன்பட்டிருக்கிறேம் என்று அறிகிறேம். பரி. பவுல்கூட, தனக்காக ஜெபிக்கும்படி சபையாரிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத் தக்க தாகும். பலர் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத் தாருக்காகவும் (அல்லது தங்கள் சபையாருக்காக) மாத்திரம் ஜெபிப்பார்களேயன்றி, மற்றவர்களைக் குறித்து ஜெபத்தில் சிறிதும் சிந்தையற்றவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் மற்றவர்களிடம் “எங்களுக் சாக ஜெபியுங்கள்” என்பார்கள். ஆனால் தாங்களோ அவ்விதம் செய்யார்கள். ஆகவே ஜெப ஜீவியத்திலும் வளர்ச்சி மிகத் தேவை.

    5. நீதிமானின் ஜெபம்

    யாக்* 5:16-ல் “நீங்கள் சொஸ்தமடையும் படிக்கு

    உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கை யிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளது” என்று ஆவியானவர் எழுதி முந்தின ஜெபத்தில் இருந்த குறையை, நீதிமான்கள் மூலமாய் நிறைவாக்குகிறதைக் காண்கிருேம். அன்றியும் (நீதி) மானாகிய) எவியாத் தீர்க்கதரிசி 17-ம் வசனத்தில் மழை பெய்யாதிருக்கவும், பின்பு 18-ம் வசனத்தில் பெய்ய வும் முழுதேசத்திற்காக ஜெபித்தபடியாவ் “வானம் மழையைப் பொழிந்தது. பூமி தன் பலனைத் தந்தது” என்று காண்கிறேம். இவ்விதம் ஒருவன் நீதிமானாக இருக்கும்பொழுது தான், மற்றவர்களுக் காக ஜெபிக்கக்கூடும். தன் ஜீவியம் அநீதியாயிருந்து மற்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாலும், அவன் “கருத்தாய்” ஜெபிக்கக் கூடாதவனாயிருப்ப துமன்றி, அவன் ஜெபத்தால் யாதொரு நன்மையும் உண்டாவது மில்லை. ஆபிரகாம், யோபு முதலியோர் நீதிமான்களாக இருந்து, மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்த படியால்தான், தேவன் அவர்கள் வேண்டுதல்களைக் கேட்டு, மற்றவர்களது சிறையிருப்பை மாற்றினார். (ஆதி. 20:18, யோபு 42:8) மற்றவர்களுக்காக ஜெயிப்பது மிக முக்கியமாக இருக்கிறபடியால், “ளன் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப் பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்கிற வகுயிருப்பேன்” என்று I சாமு. 12:23-ல் சொல்கிறார். ஆகவே மற்றவர்களுக்காக ஜெபிக்கக் கடன்பட்டிருக் கும் நீங்கள் எப்பொழுதும் நதிமான்களாக இருக்கத் தவறாதீர்கள்.

    இந்த நீதிமான்கள் மற்றவர்களுக்காக ஜெபித்து சொஸ்தம், மழை. முதலிய நன்மைகளைப் பெறப் பண்ணினார்கள். இந்த ஆசீர்வாதங்கள் இவ்வுலகத்திற் கும், சரீரத்திற்கும் உரியனவேயன்றி ஆவிக்குரியவை சுளல்ல. ஆனால் எபே. 1:3-ல் “தேவன் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக் கிறார்” என்று வாசிக்கிறோம். ஆகவே நீதிமான்களின் ஜெபத்திலிருக்கும் முதலாவது குறையாகிய, லௌகீசு சரீர நன்மைகளுக்காக மாத்திரம் ஜெபிக்கும் ஜீளியத்தி விருந்து விடுதலை பெறவேண்டும். உங்கள் ஜெபத்தில் மிகுதியான நேரத்தை, வௌகீக சரீர காரியங்களுக் காகச் செலவு செய்கிறீர்களோ ? அவ்விதமாயின் அது நவருகும். ஆகையால்தான் பவுல் “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர் களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம்” என்று I கொரி. 45:19-ல் சொல்லுகிறார்.

    இவ்வித நிலையிலிருந்து விடுதலைபெற்று, விடிய மத். 6:33-ல் சொன்னதுபோல, முதலாவது தேவது டைய ராஜ்யத்தைத் தேடி, அதினிமித்தம் வைகண யெல்லாம் கூடப்பெற்றுக்கொள்வது, ஆ! பாக்கியம்!! என்ன

    நீதிமான்கள் ஜெபத்தால் பரலோகத்திலிருக்க ஆசீர்வாதங்களாகிய மழை, சுகம் முதலியவற்றை இறக்குகிருர்கள். ஒரு தேசம் முன்னேற்றமடைய இறக்குமதி மாத்திரம் செய்தால் போதாது. ஏற்றுமதி யும் செய்யவேண்டும். அவ்விதமே ஒரு நீதிமான் ஜீவியத்தில் சிறப்படைய பரலோகத்திலிருந்து நன்மை களை இறக்குகிறவனுாய் மாத்திரமல்ல, பரலோகத்திற்கு ஏற்றுகிறவனாகவும் இருக்கவேண்டும். நீதிமான் களுடைய ஜெபத்தில் காணப்படும் இரண்டாவது குறை யாகிய இக்குறையையும் நக்கி நிறைவடைய இதன் பின்னுள்ள ஜெபத்தை ஆராய்வோமாக.

    6. பரிசுத்தவான்களின் ஜெபம் (வெளி, 5:8)

    இங்கே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கம் என்று காண்கிறேம். பரிசுத்தவான் களுடைய ஜெபம், தூபத்துக்கு ஒப்பளையாயிருக்கிறது. தூபவர்க்கத்தைத் தூபகலசத்தில் போட்டவுடன் தூபவர்க்கத்தின் புகையாகிய தூபம் மேவே செல்லும் கின்றது. அபவர்க்கமானது எவ்விதமாக எரிந்து இல்லாமல் போகிறதோ, அவ்விதமாகவே பரிசுத்தவான் களுடைய ஜெபமும் இருக்கிறது. அதற்கு ஒப்பனை யாக அப்போஸ்தலனாகிய பவுல் “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குகாள் புதிதாக்கப்படுகிறதென்று II கொரில். 4:16-ல் எழுதுகிறார். இன்னமும், 17-ம், 18-ம் வசனங் களில் பித்திய மான, காணப்படாதவைகளுக்காக நோக்கியிருக்கிறதையும் பார்க்கிறோம். ஆகவே, நீதி ‘மானைப்போலக் காணப்படக்கூடிய வௌகீக, சரீர ஆசீர்வாதங்களை அல்ல, காணப்படாத நித்திய, ஆவிக் சூரிய நன்மைகளை எதிர்பார்க்கிறர். ஆகையால்தான், “பிரகாசமுள்ள மனக்கண்களைத் தரவேண்டுமென்றும் ‘ உள்ளான மனுஷனில் வல்லமையாய் பெலப்படவேண்டு மென்றும் ஆவிக்குரிய (ஆத்துமாவுக்காக) வேண்டுதல் செய்கிறதைக் காண்கிறோம். (எபே. 1:19: 3:16-19) இவ்விதம் பரிசுத்தவானுடைய ஜெபத்தில், நீதி மானுடைய ஜெபத்திலிருந்த முதலாம் குறை நீங்கு கிறது. பரிசுத்தவானாகிய பவுலுடைய ஜெபங்களை நிருபங்களில் கவனிக்கும்போது, எல்லாம் ஆவிக்குரிய னவாயிருந்ததேயன்றி, லௌகீகத்துக்குரியனவாக இருக்கவில்லை. அப்படியிருந்தும் லௌகீக பிரகாரமா யும், எனக்கு எல்லாம் இருக்கிறது, பரிபூரணமுமடைக் திருக்கிறேன் என்று பிலிப்பியருக்கு எழுதுகிறதையும் நாம் காண்கிறோம். (பிலி. 4:18)

    பிரியமானவர்களே, உங்கள் ஜெபத்தின் மிகுதி பாகமும் ஆவிக்குரிய காரியங்களுக்காக யான விண்ணப்பம் பண்ணுவதாய் இருப்பதாக, அப்படிச் செய்வீர்களானால் பவுலுக்கு லெளகீசு பிரகாரமான குறைவுகளின்றிப் பரிபூரணமடையச்செய்த தேவன், மத். 6:33-ன் படி நிச்சயமாகவே உங்களுக்கும் அருள் உண்மையுள்ளவராக இருக்கிறார். இவ்விதமாய் பரி சுத்தவான்களின் ஜெபத்தில் பங்கு பெறுவதுஎவ்வளவு பாக்கியம் ! பரிசுத்தவான்களின் ஜெபத்தில் பங்கு பெற்றபின்பு பரிசுத்தத்தில் பூரணப்படச் சில சோதனைகள் தேவையாயிருக்கின்றன. இந்தச் சோதனை களாரிய லௌக்க அவசியங்களினும் பரிசுத்தவான களின் பங்காகிய, “எப்பொழுதும் சம்மதாஷமாயிருக் கும் பாக்கியத்தை” (J1கொரி 6:10) தேவன் அருள் வார்.

    இதுவே அவர் சமூகத்திலுள்ள பரிபூரண ஆனந்தம். (சங். 16:11) ஆ 1 என்ன பேரின்பம்!! இவ் விதமாய் இந்தப் பரிசுத்தவான்களுடைய ஜெபத்தில் தூபம் எரிந்து புகையாய் மாறுவதுபோல் ஆவிக்குரிய காரிங்களுக்காக விண்ணப்பம் பண்ணுவதுமின்றித் தூபவர்க்கம் எரிந்து இல்லாமலாகிறதும் கவனிக்கத் தக்கது. பரி பவுலுடைய ஜெபத்தைக் கவனிக்கும் போது அவர் தனக்காக அல்ல, பெரும்பாலும் மற்றவர் களுக்காகவே ஜெபித்திருக்கிறார். அன்றியும் பரிசுத்த வானாகிய ஸ்தேவான். ஆண்டவரே ! இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமந்தாதிரும்’ என்று சொல்லித் தூபவர்க்கம் இல்லாமல் போவதுப்பால் தான் மரித்து மற்றவர்களுக்காக ஜெபித்தார். இவ்விதம் பரிசுத்த வான்களின் ஜெபத்தில் செய்வாராக. பழக தேவன்

    நூபகலாத்திலிருந்து வெளியே வரும் தூப மானது மழையைப் பாலக் கீழே இறங்காமல் (இறக்கு மதி) வானத்தைநோக்கி மேலே செல்லுகின்றது. (வொளி, 8:3) இதுவே பரிசுத்தவான்கள் பரலோகத்துக்கு அனுப்பும் ஏற்றுமதியாகும்.

    பரிசுத்தவான்களுடைய ஜெபத்தில் மிகுதியாகவும் ஸ்தோத்திரம் நிறைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். பரி. பவுல் 1 தெச. 1:4-ல் “டங்கள் எல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறேம்” என்றும், 11 தெச. 2:13-ல் சகோதரரே நாங்கள் உங்களுக்காக எப்பொழுதும் ஸ்தோத்திரிக்கக் கடனானிகளாக இருக் கிறோம்” என்றும் எழுதி, ஸ்தோத்திரமாகிய தூபத்தை மேலே செலுத்தவேண்டியது “கடன்” என்றும் வெளிப் படுத்துகிறார். இவ்மிதமாய் பரிசுத்தத்தில் வளர்ந்து வரும் ஒரு பரிசுத்தவாறுவடய ஜெபத்தில், நீதி மானுடைய ஜெபத்தின் இரண்டாவது குறையாகக் கானப்பட்ட (ஏற்றுமதியாகிய) ஸ்தோத்திரக் குறைவை நிறைவாக்குவது அவசியமாகும்.

    ஆனால் பலர் ஜெபத்தில் ஸ்தோத்திரத்தைக் குறைத்துத் தங்கள் முறையீடுகளை அதிகமாய் ஏறெடுத்து, ஜெபத்தின் எல்லமையையும், தேவசங்கி தானத்தின் பேரின்பத்தையும் அனுபவியாது ஜெபத் திலிருந்து எழும்புவது, எவ்வளவு வேதனைக்குரியது! தானியேல் சத்துருக்களால் சூழப்பட்டிருந்தாலும், தன் ஜெபத்தை ஸ்தோத்திரத்துடன் முடித்தார். இதைப் பார்த்த பரலோகம் மகிழ்ந்து அவனை விடுவிக்கத் வாதர்களைச் சிங்கக் கெடுக்கு அனுப்பிற்று (தானியேல் 6:10,22). சிறைச்சாலையில் கட்டப்பட்டிருந்த பவுலும், சீலாவும் ஜெபம் பண்ணி முடித்துவிடாமல் “தேவனைத் அதிந்துப்பாடினார்கள்.” (அப். 16:25) இத்தருணத்தில் அவர்கள் வஸ்திரங்கள் கிழிக்கப்பட்டதாகவும், அநேசு அடிகளால் வேதனைப்பட்டவர்களாகவும், உட் காவலறையிலே கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டவர்களாகவுமிருந்தார்கள். (அப். 16:22,24) கொடிய வேதனையின் மத்தியில் ஜெபத்தின் ஒழுங் கைத் தவறவிடாது துதித்தது மாத்திரமல்ல, பாடவும் செய்தார்கள். ஆகவே ஜெபத்தைக் கேட்கும் கர்த்தர், உடளே அவர்களுக்கு அதிசய விடுதலை அளித்தது. மின்றி, அவர்களது ஆத்தும் தாகத்தைத்தீர்க்க சிறைச் சாலைக்காரர்களுடைய குடும்பத்தை இரட்சிக்கவும் செய்தார். ஆ! ஜெபத்தோடுகூடிய ஸ்தோத்திரம் எவ்வளவு வல்லமையுள்ளது!! உங்கள் குடும்பங் களிலும், உத்தியோகத்திலும் உள்ள தொந்தரவு, களிலிருந்தும் விடுதலைபெற, ஜெபித்துமாத்திரம் விட்டு விடுவதால்தான் இன்னமும் விடுதலை பெறாமல் கலங்கி யிருக்கிறீர்கள். பவுலையும், சீலாவையும்போல ஜெபிப் பதுடன் ஸ்துதிக்கவும், பாடவும் ஆரம்பிப்பீர்களாகில் பட்சபாதமில்லாத தேவன் படங்களுக்கும் நிச்சய மாகவே அதிசீக்கிரத்தில் அதிசய விடுதலை அளிப்பார்.

    ஸ்தோத்திரமாகிய தூபத்தை, தேவனுக்கு அனுப்புவது மாத்திரமல்ல, தன்னையும் தன்னோடுள்ள பரிசுத்தவான்களையும் தேவனுக்கு அனுப்பிக்கொடுக்க வேண்டுமென்ற வாஞ்சை பரி. பவுலுக்கு இருந்தது. கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பரிசுத்தவான்கள் அவருக்கு எதிர்சொண்டுபோக, பூலோகத்திலிருந்து ஆகாயத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்பார்கள். (Iதெச. 4:17) இந்தத் தேவ நோக்கத்தை அறிந்த பரி. பவுல், தன் ஆரம்பக் காலத்தில் தூதர்களைப் பரலோகத் திலிருந்து சிறைச்சாலைக்கு இறக்கினதுபோலவும், தானியேல் சிங்கக்கெபிக்கு இறக்கினது போலவும், இன்னும் எலியா, ஆபிரகாம், யாக்கோபு முதலியோர் இறக்கினதுபோலவும் மாத்திரம் செய்ய விரும்பாது, சபையைத் தேவ ஒழுங்கின்படி தேவ சன்னிதானத்தில் அனுப்பி “அவருக்குமுன் நிறுத்தும் பொருட்டாக,’ (எபே. 5:27) சபையானது துப்புரவானவர்களாலும். இடறலற்றவர்களாலும் நிறைந்திருக்க வேண்டுதல் செய்கிறார். (பிலிப். 1:11) இவ்விதமாய் பரிசுத்தவான் களுடைய ஜெபத்தில், தேவனிடத்திலிருந்து வாங்க வேண்டுமென்ற எண்ணத்தைப் பார்க்கிலும், தேவனுக்குக் கொடுக்கவேண்டுமென்ற சிந்தை அதிக மாயிருக்கிறது. ஆம்! வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதினால் அவன் பாக்கியவனாகிறது மாத்திர மல்ல, (அப். 20:35) கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாகவும் இருக்கிறாரே! (II கொபி. 9:7)

    7. இயேசுவின் ஜெபம்

    ரோமர் 8:34-ல் இயேசு தேவனுடைய வலது பாரிசத்திலிருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறீர் என்று வாசிக்கிறேம். தேவனுடைய வலது பாரிசத் தில் நித்திய பேரின்பமுண்டு. (சங். 16:11) இந்த வித்திய பேரின்பத்தின் மத்தியில் இயேசு இருக்கும் போது அப்பேரின்பத்தைக் குறித்து மாத்திரம் சிந்தி யாது, தீமை நிறைந்த இவ்வுலகத்திலிருக்கும் பெல வினராகிய நம்மைக்காக்க, தீமையைப் பார்க்கக்கூடாத சுத்தக் கண்ணராயிருக்கிற கர்த்தருடைய கண்டாம் மேல் நோக்கமாயிருக்கிறது (சங். 33:19) இவ்வித மாய் நம் பெலவீனங்களைப்பார்த்து நாம் அழிந்து போகாமல் நமக்காகப் பரிந்து பேசுகிறபடியால்தான், நாம் இம்மட்டும் நிலை நிற்கிறோம்.

    ஆனால் பலதடவைகளிலும் பரிசுத்தவான்கள் கன்வென்ஷன்கள், எழுப்புதல் கூட்டங்கள் முதலிய ஆவிக்குரிய சந்தோஷ சந்தர்ப்பங்களில் ஒருவரை யொருவர் சந்திக்கும் போது, அவ்வித சந்தோஷங் களிலும், சம்பாஷணைகளிலும் மூழ்கித் தங்கள் ஜெய ஜீவியத்தைக் குறைத்துக்கொள்வது சகஜம். பரிசுத்த வான்கள் சந்தோஷ, சந்தர்ப்பங்களில் தங்கள் ஜெப ஜீவியத்தைக் குறைக்கும்போது பரிபூரணராகிய இயேசு பேரானந்தத்தின் மத்தியிலிருந்து கொண்டு பாவ உலகத்தை நோக்கிப் பரிந்துபேசுவது நம் சிந்தைக்கு அடங்காத ஆச்சரியமன்றோ? அவரைப் போல பூரண சற்குணராயிருக்கவும், அவருடைய நிறை வான வளர்ச்சியை அடையவும், தெரிந்துகொள்ளப் பட்டவர்களாகிய நாம், நம் சந்தோஷ சந்தர்ப்பங் களிலும் ஆத்தும பாரத்தால் நிறைந்து. இயேசுவைப் போல் மற்றவர்களுக்காக ஜெபித்து, ஜெபத்திலும் பூரணமடையவேண்டியது மிக அவசியம். தேவன் அதற்கு உதவி செய்வாராக.

    இம்மட்டும் நாம் ஜெபத்தைக் குறித்துப் பொது வாக ஆராய்ந்தோம். இதன் பின்பு நாம் எவ்விதம் அல்லது எப்படி ஜெபிக்கவேண்டுமென்பதை ஆராய் வது அவசியமாகும்.

    Leave a Reply